திருஷ்டி பரிகாரம்

thirusti pariharam in tamil
- Advertisement -

பொறாமை கொண்ட எந்த ஒரு மனிதனின் கண் பார்வை ஆற்றல் வாய்ந்தது என மாந்திரீக ஆசான்கள் கூறுகின்றனர். பொதுவாக நம் எல்லோருக்குமே வாழ்வில் ஏதாவது நல்ல நிகழ்வுகள் நடைபெறும் பொழுது அதை பிறர் கண்டு பொறாமைபடுவதால், நமக்கு திருஷ்டி ஏற்பட்டு பலவிதமான சங்கடங்களை நம் வாழ்வில் ஏற்படுத்துகிறது. இத்தகைய திருஷ்டி தோஷங்களை போக்குவதற்குரிய திருஷ்டி பரிகாரம் குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

திருஷ்டி நீங்க பரிகாரம்

எப்படிப்பட்ட திருஷ்டிகளையும் போக்கக்கூடிய சிறந்த ஆற்றல் கொண்ட ஒரு தெய்வீக மூலிகை பொருள் தான் வெண்கடுகு. இந்த வெண்கடுகுடன் இமாச்சலம் வேர், சந்தனம், அருகம்புல் ஆகிய பொருட்களையும் சேர்த்து வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டுக்கருகில் இருக்கின்ற சிவன் கோயிலில் இருக்கும் பைரவர் சன்னதியில் இருக்கும் பைரவ பெருமானுக்கு ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் மேற்சொன்ன இந்த நான்கு பொருட்களையும் கொண்டு பாத பூஜை செய்ய வேண்டும்.

- Advertisement -

பூஜை செய்த பிறகு அந்த வெண்கடுகை வீட்டிற்கு கொண்டு வந்து தூபம் கொளுத்தி, அதில் இந்த பூஜை செய்யப்பட்ட வெண்கடுகை போட்டு வீடு முழுவதும் புகை காண்பிக்க வேண்டும். இப்படி செய்வதால் திருஷ்டிகளால் வீட்டில் ஏற்பட்டிருக்கின்ற எதிர்மறை அதிர்வுகள் நீங்கி, அந்த வீட்டில் இருப்பவர்கள் நல்லபடியாக வாழச் செய்யும் ஒரு சிறந்த திருஷ்டி பரிகாரமாக இருக்கிறது.

விநாயகர் வழிபாடு போன்ற சிறந்த நன்மை தரும் வழிபாடு ஏதுமில்லை. அதிலும் குறிப்பாக திருஷ்டி தோஷங்கள் நீங்க நினைப்பவர்கள் வாரந்தோறும் வருகின்ற வெள்ளிக்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில், வீட்டில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, அதை வெற்றிலையில் வைத்து, அதற்கு முன்பாக ஒரு நெய் தீபம் ஏற்றி, தூபங்கள் காட்டி கற்பூர ஆரத்தி எடுத்த பிறகு, விநாயகர் அகவல் அல்லது விநாயகர் கவசம் போன்றவற்றை துதிப்பதன் மூலம் திருஷ்டியால் ஏற்படுகின்ற தோஷங்கள் நீங்கும்.

- Advertisement -

வருடத்திற்கு ஒரு முறை நீங்கள் வாழ்கின்ற வீட்டில் விநாயகர் பெருமானுக்குரிய விநாயகர் ஹோமம் செய்து கொள்வதால் அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் மற்றும் நம் மீது பொறாமை கொண்டவர்களின் திருஷ்டிகள் நீங்கி, வீட்டில் இருப்பவர்களுக்கு நன்மை ஏற்படும். விநாயகர் ஹோமத்தை வீட்டில் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள் வேறு எந்த வீட்டிலோ அல்லது கோயிலிலோ நடத்தப்படுகின்ற விநாயகர் ஹோமத்தில் கலந்து கொண்டு, அந்த ஹோம சாம்பலை வீட்டிற்கு கொண்டு வந்து வீட்டின் பூஜையறையில் ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து வைப்பதாலும், எத்தகைய திருஷ்டி தோஷங்களும் அந்த வீட்டை நெருங்காது.

தீய அதிர்வலைகளை ஈர்த்து அதை நன்மையானதாக மாற்றக்கூடிய ஆற்றல் வாய்ந்த மூலிகை தாவரங்களாக துளசி மற்றும் அருகம் புல் திகழ்கின்றது. எனவே தங்கள் வீடுகளில் மேற் சொன்ன துளசி மற்றும் அருகம் புல் செடிகளை ஒரு தொட்டியில் வைத்து வளர்த்து வருவதால் எத்தகைய திருஷ்டி தோஷங்களும் வீட்டையோ அல்லது அந்த வீட்டில் வசிப்பவர்களையோ பாதிக்காமல் காக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: பணம் பெருக பரிகாரம்

ஒவ்வொரு மாதமும் வருகின்ற அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களின் உச்சி வேலையில் உங்கள் வீட்டிற்கு வெண்பூசணிக்காய் அல்லது எலுமிச்சம் பழத்தில் குங்குமம் தடவி, கற்பூரம் கொளுத்தி, ஆரத்தி எடுத்து தெருவில் கொட்டி திருஷ்டி கழிக்க வேண்டும். இப்படி திருஷ்டி கழித்த பிறகு வீட்டில் ஒரு செம்பு கலசத்தில் மஞ்சள் கலந்த தண்ணீர் ஊற்றி, சிறிதளவு வேப்ப இலைகளை அதில் நனைத்து, அந்த இலைகளை கொண்டு வீடு முழுவதும் அந்த தண்ணீரை தெளித்து விட வேண்டும்.

ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புதிய மாவிலைகளை எடுத்து வந்து, அதை நூலில் கோர்த்து தோரணமாக உங்கள் வீட்டு தலைவாயில் படியின் மீது தொங்க விட வேண்டும். பிளாஸ்டிக் மா இலைகளை தவிர்த்து, நிஜமான மாவிலைகளைக் கொண்டு இதை செய்வதால் மட்டுமே திருஷ்டி (Thirusti pariharam in Tamil) தோஷம் நீங்கும்.

- Advertisement -