நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டுமா? குபேரரை வசியம் செய்ய இந்த ஒரு பொருள் போதும்.

kuberan

நம் வாழ்க்கையில் எந்த ஒரு முயற்சியை எடுத்தாலும் அது வெற்றிகரமாக அமைய வேண்டுமென்றால் நமக்கு குபேரரின் ஆசிர்வாதமும் கட்டாயம் தேவை. ஏனென்றால் ஒருவருக்கு வாழ்க்கை, குபேரரை போல இருக்க வேண்டும் என்பது தான் அனைவருடைய ஆசையாக இருக்கும். இந்த குபேரரை என்ன செய்தாவது நம் வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எல்லோரும் நினைப்பது இயற்கை தான். குபேரரை நம் வசம் வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் எப்படி? குபேரரின் அம்சம் எந்த பொருளில் இருக்கின்றதோ அதை முறையாக பயன்படுத்தி நம்மிடம் வைத்துக் கொண்டாலே போதும்.

lakshmi kubera

பணத்தை ஈர்க்கும் சக்தியானது எந்த பொருளில் எல்லாம் இருக்கின்றதோ அந்த பொருளில் எல்லாம் நிச்சயமாக குபேரர் வாசம் செய்வார் என்பது உறுதி. இதில் வடநாட்டில்  மலைவாழ் கிராம மக்கள் பணத்தை வசீகரிக்கும் பொருளாக, பணத்தை ஈர்க்கும் பொருளாக, பணத்திற்கு அதிபதியான மகாலட்சுமியையும் குபேரரை தன் வசமே வைத்துக்கொள்ள, ஒரு அற்புதமான பொருளை பயன்படுத்தி வருகிறார்கள். மஞ்சள் வகையில் அரியதாக கிடைக்கப்படும் ‘கருமஞ்சள்’ தான் அது. வடநாடுகளில் பல ஆண்டுகளாக இதை பண வருகைக்காக பயன்படுத்தி தான் வருகிறார்கள். ஆனால் அந்த ரகசியம் நமக்கு இதுநாள்வரை தெரியவில்லை. இப்போதெல்லாம் நம் தமிழ்நாட்டிலேயே இந்த கரு மஞ்சளானது நாட்டு மருந்து கடைகளில் சுலபமாக கிடைக்கிறது. சற்று விலை அதிகம் தான்.

இந்த கரு மஞ்சளை, மஞ்சள் இழைக்கும் கல்லில் நன்றாக இழைத்து நெற்றியில் திலகமாக பூசிக் கொண்டு சென்றால் நாம் எதிர்பார்க்கும் பணவரவு கிடைக்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

karu-manjal

அதுமட்டுமல்லாமல் இந்த கருமஞ்சள் காளிக்கும் மிகவும் பிடித்ததாக கூறப்பட்டுள்ளது. ஜாதகரீதியாக ராகுவினால் உண்டாகும் பிரச்சினைக்கும், சனி பகவானால் உண்டாகும் பிரச்சினைக்கும் பரிகாரமாக கூட இந்தக் கரு மஞ்சளானது பயன்படுத்தப்படுகிறது. இந்த மஞ்சளை கருப்பு கயிறு அல்லது சிகப்பு கயிறை கொண்டு கட்டி கழுத்தில் அணிந்து கொண்டால், கிரக தோஷங்கள் விலகும் என்பதும் உண்மையான ஒன்றுதான்.

- Advertisement -

வசூலாகாத பணம் வசூலாக வேண்டும் என்றாலும், இதை நம் கையோடு எடுத்துச் செல்லலாம். நீண்ட நாட்களாக வசூல் ஆகாமல் இருக்கும் கடன் தொகை கூட வசூலாகிவிடும். நீண்ட நாட்களாக நீங்கள் எவர் ஒருவருக்காவது கடன் தர வேண்டும் என்றாலும், அந்த தொகை உங்களுக்கு கிடைக்க இதை பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்.

money

இந்தக் கரு மஞ்சளை சிகப்பு பட்டு துணியில் கட்டி கழுத்தில் அணிந்து கொண்டால், எதிர்பாராத வெற்றிகள் நம்மை வந்து சேரும் என்றும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த கரு மஞ்சளை சிவப்பு பச்சை கலந்த பட்டுத் துணியால் கட்டி பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பண வரவு அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

karu-manjal1

இப்படியாக கருமஞ்சள் நாம் எப்படி பயன்படுத்தினாலும் அதன் மூலம் நமக்கு பணவரவு இந்து கொண்டேதான் இருக்கும். பணவரவை நமக்கு தந்து கொண்டிருக்கும் இந்த கருமஞ்சள் நம்மிடம் வைத்துக்கொண்டால், குபேரர் மட்டும் நம்மை விட்டு சென்றுவிடவா போகிறார்! நிச்சயம் கட்டாயம் நம்மிடமே குபேரர் வாசம் செய்ய கருமஞ்சளை நம் வீட்டில் வைத்துக் கொள்வது ஒரு சிறந்த வழி.

இதையும் படிக்கலாமே
உங்களது குழந்தை திடீர் திடீர் என்று பயந்து அழுகிறதா? காரணம் இதுவாகக் கூட இருக்கலாம்

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Karu manjal vasiyam. Karu manjal payangal in Tamil. Karu manjal benefits in Tamil. Karimanjal uses in Tamil. Kubera vasiyam.