ஜோதிடம் : 12 ராசியினரும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

rasi-pariharam

மேஷம்:
Mesham Rasi

செவ்வாய் பகவானின் ராசியான மேஷ ராசியினர் இந்த வாரம் முழுவதும் ஈடுபடும் அனைத்திலும் சிறப்பான பயன்களை தினந்தோறும் புவனேஸ்வரி அம்மனுக்கு தீபம் ஏற்றி, புவனேஸ்வரி அம்மனுக்குரிய மந்திரங்கள் துதித்து வழிபட வேண்டும்.

ரிஷபம்:
Rishabam Rasi

ரிஷப ராசியினர் இந்த வார காலம் முழுவதும் ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகளைப் பெறுவதற்கு தினமும் மகாவிஷ்ணுவின் மற்றும் தாயாரின் படத்திற்கு மலர்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.

மிதுனம்:
midhunam

மிதுன ராசியினர் இந்த வார காலம் முழுவதும் ஈடுபடும் அனைத்து காரியங்களில் சிறப்பான பலன்களைப் பெறுவதற்கு தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் சூரிய பகவானை வணங்குவதால் நன்மைகள் உண்டாகும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

கடக ராசியினருக்கு இந்த வார காலம் முழுவதும் அனைத்திலும் சிறப்பான நன்மைகள் ஏற்படுவதற்கு தினமும் காலையில் சிவபெருமானையும், சூரிய பகவானையும் வழிபாடு செய்து வருவது அனைத்திலும் சிறப்பான நன்மைகளை தரும்.

சிம்மம்:
simmam

சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் ஈடுபடும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று சிறப்பான பலன்களை பெறுவதற்கு தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு சூரிய பகவானை வழிபடுவதால் விரும்பிய பலன்களை பெறமுடியும்.

கன்னி:
Kanni Rasi

புதன் பகவான் ராசியான கன்னிராசியினர் இந்த வாரம் முழுவதும் தாங்கள் ஈடுபடுகின்ற காரியங்களில் வெற்றி பெறவும், அனைத்திலும் சிறப்பான லாபங்களை பெறுவதற்கு புதன்கிழமை அன்று புதன் பகவானையும், ஞாயிற்றுக்கிழமையில் சூரிய பகவானையும் வழிபட வேண்டும்.

துலாம்:
Thulam Rasi

சுக்கிர பகவானுக்குரிய துலாம் ராசிக்காரர்கள் இந்த வார காலம் முழுவதும் அனைத்திலும் சிறப்பான பலன்களை பெறுவதற்கு தினமும் சிவன் கோயிலில் நந்தி பகவானுக்கு பூக்கள் சமர்ப்பித்து வழிபடுவது நற்பலன்களை ஏற்படுத்தும்.

விருச்சிகம்:
virichigam

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வார காலம் முழுவதும் பாதகங்கள் ஏதும் ஏற்படாமல், அனைத்திலும் சிறப்பான பலன்களை பெறுவும், லாபங்கள் அதிகரிக்கவும் காலையில் சிவபெருமானை தரிசிப்பதும், நாகலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதும் சிறப்பு.

தனுசு:
Dhanusu Rasi

தனுசு ராசிக்காரர்கள் இந்த வார காலத்தில் தங்களுக்கு தீமையான பலன்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்கும், அனைத்திலும் மிகுதியான லாபங்களை பெறுவதற்கு வியாழக்கிழமையில் மட்டும் குரு தட்சிணாமூர்த்தி பகவானை வழிபட வேண்டும்.

மகரம்:
Magaram rasi

மகர ராசியில் பிறந்தவர்கள் இந்த வார காலம் முழுவதும் ஈடுபடும் காரியத்தில் வெற்றியையும், அனைத்து விடயங்களிலும் லாபங்களை பெறுவதற்கும் தினமும் பராசக்தியையும், தேய்பிறை அஷ்டமி தினம் கால பைரவரையும் வழிபட வேண்டும்.

கும்பம்:
Kumbam Rasi

சனிபகவானுக்குரிய கும்ப ராசிக்காரர்கள் இந்த வார காலம் முழுவதும் அனைத்து காரியங்களிலும் வெற்றிகளையும், லாபங்களையும் அதிகம் பெறுவதற்கு தினமும் குலதெய்வத்தை வழிபடுவதோடு ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் வழிபட வேண்டும்.

மீனம்:
meenam

குரு பகவானுக்குரிய மீன ராசியில் பிறந்தவர்கள் இந்த வார காலம் முழுவதும் ஈடுபடும் அனைத்து விடயங்களிலும் சிறப்பான நன்மைகளைப் பெறுவதற்கு, தினமும் காலையில் சூரிய பகவான் வழிபாடு செய்வது சிறப்பு தரும்.

இதையும் படிக்கலாமே:
மிதுன லக்னத்தினருக்கு வருமானம் பெருகும் வழிகள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Weekly jothida pariharam in Tamil. It is also called as Parigarangal in Tamil.