தினமும் இப்படி மட்டும் குளிச்சு பாருங்க! விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது மட்டும் உறுதி. உங்க கையில பணம் அப்படி விளையாடும்.

bath

விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களில் நாமும் கோடீஸ்வரர் ஆகிவிட மாட்டோமா என்ற எண்ணம் நம்மில் பல பேருக்கு உள்ளது. விதி! ஒருவரை வெறும் 10 நாட்களில் கோடீஸ்வரராகவும் மற்றும். வெறும் பத்தே நாட்களில் கோடியில் இருந்து தெரு கோடி வரை கொண்டு வந்து விட்டாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு கிடையாது. சரி, அது அவரவருடைய தலையெழுத்து. அவரவர் செய்த பாவ புண்ணிய கணக்கிற்கு ஏற்ப அவரவருடைய வாழ்க்கை அமையும். நம்முடைய பாவ புண்ணிய கணக்குகள் எப்படி இருந்தாலும் சரி, நம்முடைய கர்மவினை எப்படி இருந்தாலும் சரி, அந்த பாவங்கள் கழிவதற்கு, அந்த தோஷங்கள் நீங்குவதற்கு நாம் என்ன செய்யப் போகின்றோம்? நாமும் ஒரு நாள் இல்லை என்றாலும், ஒரு நாள் பணக்காரர் ஆக வேண்டாமா?

bathing

உங்களுக்கும் உங்களுடைய உழைப்பின் மீது நம்பிக்கை உள்ளதா? உங்களுடைய முயற்சியின் மீது நம்பிக்கை உள்ளதா? அதோடு சேர்த்து நீங்கள் கோடீஸ்வரராக மாற இந்த பரிகாரத்தையும் செய்து பாருங்கள். பத்து நாட்களில் கோடீஸ்வரர் ஆக வில்லை என்றாலும் நிச்சயம் உங்களுடைய உழைப்புக்கு ஏற்றவாறு ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி.

ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்டுள்ள பரிகாரம் தான் இது. இந்த முறைபடி இந்தப் பொருளை தினமும் பயன்படுத்தி குளித்தால் உங்கள் வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அது என்ன பொருள். இப்போதே பார்த்து விடுவோமே. பசும்தயிர் தான் அந்த அற்புதமான பொருள். முடிந்தவரை பசும்பால் கிடைக்கும் இடத்தில் இருந்து பாலை வாங்கி, உங்களுடைய வீட்டில் தினமும் உறை ஊற்றி வந்தால், உங்களுடைய வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும் அதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

இப்படியாக உறை ஊற்றிய தயிரை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். காலையில் குளிக்க செல்வதற்கு முன்பாக அந்த தயிரிலிருந்து கொஞ்சமாக எடுத்து உள்ளங்கைகளில் ஊற்றி மகாலட்சுமியை நினைத்து இரண்டு கைகளிலும் தயிரை நன்றாக தேய்த்து முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். அதன் பின்பு கை கால்களில் லேசாக தடவிக் கொள்ளலாம். உடல் முழுவதும் தடவி குளிக்க முடிந்தால் அது உங்களுடைய சவுகரியம். சருமத்திற்கு எந்த பாதிப்பு வந்துவிடாது.

- Advertisement -

நிறைய தயிர் போட்டு குளித்தால் உடம்பு வழுவழுவென்று மாறிவிடும். ஒரு ஸ்பூன் தயிரை எடுத்து கூட உடல் முழுவதும் தேய்த்துக் கொண்டு அதன் பின்பு எப்போதும் போல சோப்பு போட்டு குளித்து கொள்ளலாம். இப்படி செய்து வரும் பட்சத்தில் உங்களுக்கு இருக்கக்கூடிய ஜாதகரீதியாக தோஷங்கள், ஆன்மீக ரீதியான தோஷங்கள் எதுவாக இருந்தாலும் நாளுக்கு நாள் படிப்படியாக அதனுடைய தாக்கங்கள் குறைவதை கண்கூடாக காணமுடியும்.

money

தோஷங்களும் ஜாதக ரீதியான பிரச்சனைகளும் படிப்படியாக குறைய குறைய, நமக்கு காரியத்தடை என்பதே வராது. நாம் எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி பெற தொடங்கிவிடுவோம். அதன் பின்பு என்ன? தொட்டதெல்லாம் வெற்றியானால், நம் கைக்கு பணம் சேர ஆரம்பிக்கும். பின்பு கோடீஸ்வரர் ஆவதில் தாமதம் ஏது? உங்களுக்கு  இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பார்க்கலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
நீங்கள் வாடகை வீட்டுக்கு குடி பெயர்ந்தாலும் அல்லது சொந்த வீட்டுக்குக் குடிபோனாலும், பழைய வீட்டில் இதை மட்டும் செய்ய மறக்காதீங்க! நீங்க கூடி போகும் புது வீட்டில் சுபிட்சமா இருப்பீங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.