உங்கள் முகம் எப்போதும் தெய்வ கடாட்சத்துடன் இருக்க தினமும் நெற்றியில் குங்குமத்தை இப்படி வைத்துக் கொள்ளுங்கள்.

kungumam-kumkum
- Advertisement -

சில பேருடைய முகத்தை பார்த்த உடனேயே கையெடுத்து கும்பிட வேண்டும் என்று தோன்றும். லட்சுமி கடாட்சத்துடன் இருப்பார்கள். அழகு என்பது நிறத்தில் அல்ல. அகத்தின் அழகுதான் முகத்தில் தெரியும் என்று சொல்லுவார்கள். மனதிற்குள் எந்தவிதமான அழுக்கும் இல்லாமல், கள்ளம் கபடம் இல்லாமல் மனதை சுத்தமாக குழந்தைபோல் வைத்திருப்பவர்களின் முகம் எப்போதும் பொலிவாக, இறை சக்தி நிறைந்ததாக தான் இருக்கும். மனதில் பொறாமை எண்ணத்தோடு அடுத்தவர்களை பார்த்து வயிற்றெரிச்சல் படுபவர்களுடைய முகத்தை பார்த்த உடனே கண்டு பிடித்து விடலாம். இவர்களுடைய மனதிற்குள் ஏதோ ஒரு அழுக்கு உள்ளது என்று.

ஆக பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டுமென்றால் முதலில் நாம் சுத்தம் செய்து கொள்ள வேண்டியது நம்முடைய மனதை தான். மனதை தெளிவோடு, அப்பழுக்கில்லாமல் வைத்துக் கொண்டாலே போதும். நம்முடைய முகம் பொலிவாக இருக்கும். தெய்வ கடாட்சத்துடன் இருக்கும். உங்களுடைய மனதை சுத்தப் படுத்துங்கள். உங்கள் முகம் தானாக அழகு பெறும். இது முதல் விஷயம்.

- Advertisement -

என்னுடைய மனது சுத்தமாக தான் உள்ளது. எந்த பொறாமை குணமும் எந்த கெட்ட எண்ணமும் கிடையாது. இருப்பினும் என்னை பார்ப்பவர்கள் முகம் சுழிக்க செய்கிறார்கள். 4 பேர் இருக்க கூடிய சபையில் நான் சென்று நிற்கும் போது, எனக்கான அங்கீகாரம் கிடைப்பது கிடையாது. எல்லா இடத்திலும் நான் ஒதுக்கி வைக்கப்படுகின்றேன், என்ற கஷ்டம் நிறைய பேருக்கு உள்ளது.

பத்து பேர் கூடியிருக்கும் சபையில் ஒருவருக்கு மட்டும் மரியாதை கிடைக்கிறது என்றால், அவர்களுடைய வசீகரத் தன்மையும், அவர்களுடைய பொலிவும், அவர்கள் முகத்தில் இருக்கும் தெய்வ கடாட்சமும் தான் ஒரு காரணம். இப்படிப்பட்ட ஒரு அங்கீகாரம் நமக்கும் கிடைக்க நம்முடைய முகத்தில் இருக்கும் தரித்திரம் விலக, நாம் செய்ய வேண்டிய ஒரு சுலபமான பரிகாரத்தை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

நம்மை பொலிவு படுத்தக் கூடிய சக்தி தொட்டாசினிங்கி மூலிகைச் செடிக்கு உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. தொட்டாசினிங்கி செடியிலிருந்து கொஞ்சமாக இலைகளை பறித்துக் கொள்ள வேண்டும். இலைகளை பறிக்கும்போது ‘இந்த இலை நன்மைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்’ என்று மனதார நினைத்துக்கொண்டு பறித்துக் கொள்ளுங்கள்.

அந்த இலைகளை நன்றாக உலர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். தொட்டாசிணுங்கி இலை பொடியை அப்படியே குங்குமத்தில் கலந்துவிடுங்கள். குங்குமத்தின் சிவப்பு நிறம் பச்சையாக மாறிவிடக் கூடாது. நிறைய குங்குமத்தில் மிக சிறிய அளவு தொட்டாசினிங்கி பொடியை கலந்து விட்டு இந்தக் குங்குமத்தை தினம்தோறும் குலதெய்வத்தை நினைத்து நெற்றியில் இட்டு வந்தால் உங்கள் முகம் பொலிவாகும். முகத்தில் பிடித்த பீடை விலகும். சமுதாயத்தில் உங்களுக்கு இருக்கக்கூடிய மதிப்பும் மரியாதையும் உயரும். உங்களைப் பார்க்கும்போது கையெடுத்து கும்பிடலாம் போல அனைவருக்கும் தோன்றும்.

குங்குமம் வைக்க கூடிய பழக்கம் எல்லாம் எனக்கு கிடையாது என்றால், அந்த குங்குமத்தை கொஞ்சமாக தொட்டு உச்சந்தலையில் வைத்து கொள்ளலாம். கண்ணுக்கு தெரியாத அளவு வைத்தாலும் இதனுடைய சக்தி நிச்சயம் குறையாது. நம்பிக்கையுள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து நல்ல பலனை அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -