தொட்டதுக்கெல்லாம் குற்றம் குறை சொல்லிக் கொண்டே இருக்கும் கணவரை கூட, மனைவி சொல் பேச்சு கேட்டு நடக்க வைக்கும் தொட்டா சிணுங்கி செடி.

thottachinugi
- Advertisement -

சில வீடுகளில் மனைவி என்ன செய்தாலும் அதில் கணவர், குற்றம் குறை சொல்லிக்கொண்டே இருப்பார். சில வீடுகளில் கணவன்மார்கள் என்ன செய்தாலும், மனைவி அதில் குற்றம் குறை கண்டுபிடிப்பீர்கள். சில வீடுகளில் கணவன் மனைவிக்குள் பிரச்சனை வர கிரக கோளாறுகள் காரணமாக இருக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் ஈகோ பிரச்சனையின் காரணமாக கூட கணவன் மனைவிக்குள் சண்டை வருவது சகஜம் தான். இப்படி எலியும் பூனையுமாக கணவன் மனைவிக்குள் சண்டை வந்தாலும் இறுதிவரை போராட வேண்டுமே தவிர, இடையே ஒருவரை ஒருவர் விட்டு எக்காரணத்தை கொண்டும் பிரிந்து விடக்கூடாது. இப்படி உங்களுடைய வீட்டில் கணவன் மனைவிக்குள் சதா பிரச்சனை இருந்து கொண்டே வருகிறதா. கண்ணை மூடிக்கொண்டு பின் சொல்லக்கூடிய இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். கணவன் மனைவிக்குள் சந்தோஷம் அன்னியோன்யம் ஒற்றுமை அதிகரிக்கும்.

தொட்டாச்சிணுங்கி செடி, பெரும்பாலும் நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இந்த செடியை வீட்டில் வளர்ப்பது லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். உங்கள் வீட்டில் சிறிய தொட்டியில் இந்த தொட்டாச்சிணுங்கி செடியை வைத்து வளர்த்து வரலாம். கணவனால் மனைவிக்கு பிரச்சனை இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். மனைவியால் கணவருக்கு பிரச்சனை இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து விட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு தெய்வத்திடம் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். கணவன் மனைவி இருவருக்குள் யார் சண்டை போட்டாலும் சரி, எப்படி பிரச்சனை வந்தாலும் சரி, யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து குடும்பத்தை சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

இருவருக்குள் பிரிவு என்பது ஏற்படக்கூடாது. என்றபடி மனதார பிரார்த்தனை செய்துகொண்டு தொட்டா சிணுங்கி செடியிடம் வந்து அந்த செடியை தொட வேண்டும். தொட்டவுடன் அந்த செடியில் இருக்கும் இலை அப்படியே சுருங்கிக் கொள்ளும் அல்லவா. அப்படி அந்த செடியை தொடும் போது என்னுடைய கணவர், நான் சொல்லக்கூடிய நல்ல விஷயங்களுக்கு செவிகொடுத்து குடும்பத்தை அனுசரித்து சந்தோஷமாக வாழ வேண்டும். என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதுவே கணவருக்கு பிரச்சனை. மனைவி அனுசரித்து செல்லாமல் குடும்பத்தில் சண்டை வருகிறது என்றால், கணவரும் இந்த பரிகாரத்தை செய்யலாம். கணவரும் குளித்து முடித்துவிட்டு பூஜை அறைக்குச் சென்று மனதார வேண்டுதல் வைத்து, இந்த செடியை வந்து தொடும்போது என்னுடைய வாழ்க்கைத் துணைவி என்னை அனுசரித்து, என் குடும்பத்தோடு, என்னோடு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

தினந்தோறும் இந்த தொட்டாச்சிணுங்கி செடியை தொட்டு உங்களுடைய வேண்டுதலை இந்த பிரபஞ்சத்திடம் வைத்து வர, உங்களுடைய வாழ்க்கைத் துணை உங்களுடன் அனுசரித்து வாழ்வில் வரக்கூடிய இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு இல்லற வாழ்க்கையை இனிமையாக நடத்தி வருவார்கள் என்பது ஒரு நம்பிக்கை. உங்களுக்கு இந்த பரிகாரத்தின் மீது நம்பிக்கை இருந்தால் முழு நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

இது அல்லாமல் உங்களுடைய படுக்கை அறையில் இரண்டு புறாக்கள் ஜோடியாக சேர்ந்து இருக்கும்படி ஒரு புகைப்படத்தை மாட்டி வைப்பது, அல்லது மயிலிறகு இரண்டு வைப்பது கணவன் மனைவி ஒற்றுமையை அதிகரிக்கும். முயற்சி செய்து பாருங்கள். நம்பிக்கையுடன் நாம் செய்யும் நல்ல விஷயங்கள் நமக்கு நல்ல பலனையே கொடுக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -