தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கஷ்டப்படுபவர்கள் இந்த ஒரு வேரை தங்களுடன் வைத்துக்கொண்டால் நஷ்டம் லாபமாக மாறி மிகப் பெரிய தொழிலதிபர் ஆகிவிடுவார்கள்.

sucessful business
- Advertisement -

பிறரிடம் கைகட்டி வேலை செய்யும் எண்ணம் இல்லாத பலர் சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவ்வாறு தொழில் செய்ய விரும்புவோர் தங்களுக்கு போதிய அனுபவம் உள்ள நன்கு தெரிந்த பரிச்சயமான தொழிலை தேர்வு செய்து ஆரம்பிப்பார்கள். என்னதான் பார்த்து பார்த்து ஆரம்பித்தாலும் தொழில் என்றால் அதில் லாபமும் இருக்கும் நஷ்டமும் இருக்கும். நஷ்டம் ஏற்படும் பொழுது துவண்டு விடாமல் மேலும் முயற்சி செய்தால் மட்டுமே வெற்றிகரமான தொழிலதிபராக ஆக முடியும். அதற்கு விடாமுயற்சியுடன் சில பரிகாரங்களையும் நாம் செய்ய வேண்டும். அப்படி செய்யக்கூடிய பரிகாரங்களில் ஒன்றை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

தொழிலை ஆரம்பிக்கும் பலரும் அந்த தொழிலை கடைசி வரை தொடர்ந்து செய்வதில்லை. காரணம் நஷ்டம் ஏற்பட்டு அந்த நஷ்டத்தினால் பல பிரச்சினைகள் ஏற்பட்டு ஒன்றுமில்லாமல் போய்விடுவதே. அதையும் தாண்டி பல முயற்சிகளை எடுத்து முன்னுக்கு வருபவர்களால் மட்டுமே கடைசிவரை தொழில் நடத்த முடியும். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு இருந்தாலும் அல்லது இனிமேல் தொழிலில் நஷ்டமே ஏற்படக் கூடாது என்று நினைத்தாலும் இந்த ஒரு வேரை தன்னுடன் வைத்துக் கொண்டாலே போதும் அனைத்தும் நன்மையாகவே நடக்கும்.

- Advertisement -

வளர்பிறையில் வரக்கூடிய நல்ல நாளை தேர்வு செய்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். யார் தொழிலை நடத்துகிறார்களோ அவர்கள்தான் இந்த பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டும். ஆலமரம் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும். அந்த ஆலமரத்திடம் பணிவாக “உன்னுடைய விழுதை நான் சிறிது எடுத்துக் கொள்கிறேன் இதன் மூலம் எனக்கு அளவில்லா சக்தியை அருள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு தொங்குகின்ற விழுதிலிருந்து சிறிதளவு வெட்டி எடுத்துக்கொண்டு வரவேண்டும். கீழே கிடக்கும் விழுதை எடுக்கக் கூடாது.

அந்த விழுதை வீட்டிற்கு எடுத்து வந்து, அதை கோமியத்தால் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். கோமியம் கிடைக்காத பட்சத்தில் பன்னீரை ஊற்றி கூட சுத்தம் செய்யலாம். பிறகு இந்த விழுதின் மேல் ஒரு பட்டு நூலை வைத்து 27 முறை சுற்ற வேண்டும். பட்டு நூல் கிடைக்காதவர்கள் மஞ்சள் நூலை உபயோகப்படுத்தலாம். 27 முறை சுற்றிய பிறகு அதன் மேல் சுத்தமான சந்தனத்தை தடவ வேண்டும். பிறகு மஞ்சள் குங்குமம் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

ஒரு சிறிய மண் குடுவையை வாங்கி வந்து அதனுள் இந்த விழுதை வைத்து வழிபட வேண்டும். இந்த குடுவையை நாம் நம் வீட்டு பூஜை அறையிலோ அல்லது தொழில் நடத்தும் ஸ்தாபனங்களிலோ வைத்து அன்றாடம் வழிபட வேண்டும். இவ்வாறு வைத்து வழிபடுவதன் மூலம் நம் தொழில் நஷ்டத்தால் ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி அதிர்ஷ்டம் கைகூடும்.

இதையும் படிக்கலாமே: குழந்தைகளின் கல்வி, குடும்பத்தில் மகிழ்ச்சி, செல்வம் என சகல ஐஸ்வர்யங்களும் நிலைத்திருக்க நாளை (30.8.23) பௌர்ணமியுடன் சேர்ந்து வரும் ஆவணி அவிட்டத்தில் இந்த பொருளை மறக்காமல் வாங்கி அதில் தீபம் ஏற்றி விடுங்கள்.

வெற்றிகரமான தொழிலை நடத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதோடு இந்த எளிய பரிகாரத்தை செய்து ஆலமர விழுது போல் நாம் நம் தொழிலில் வேரூன்றி நிலையாக நிலைத்து நிற்போம்.

- Advertisement -