முடங்கிப்போன தொழிலும், விரைவில் முன்னேற்றம் அடையும். கோடிக்கணக்கான லாபத்தை பெற தொழில் செய்யும் இடத்தில் இந்த 2 படங்களை வையுங்கள்.

vinayagar2

இந்த காலத்தில் நிறைய பேர் சொந்த தொழிலை செய்ய முடியாமல், மாத சம்பளத்திற்கோ, தினசரி கூலிக்கோ வேலைக்கு செல்கிறார்கள். காரணம் சொந்தத் தொழிலில் முதலீடு செய்தாலும், அதிகப்படியான லாபம் பெற முடியவில்லை என்பது தான். சிலருக்கு ஜாதக கட்டத்திலேயே சொந்தத் தொழில் செய்வதற்கான யோகம் அமையும். சில பேருக்கு அந்த யோகம் என்னதான் முயற்சி செய்தாலும் வரவே வராது. சரி, நீங்கள் ஆரம்பித்த சொந்த தொழில் பாதியிலேயே நின்று நஷ்டத்தை சந்தித்து விட்டதா? அல்லது எவ்வளவு தான் முயற்சி செய்தாலும், நீங்கள் செய்யும் தொழில் அதிகப்படியான லாபத்தை பெற முடியவில்லையா?

karpaga-vinayagar

முற்றிலும் உங்களுக்காக சொல்லப்பட்டுள்ள பதிவு தான் இது. நீங்கள் சிறிய கடை வைத்திருந்தாலும் சரி, பெரிய தொழிற்சாலை வைத்திருந்தாலும் சரி, அல்லது அலுவலகம் வைத்திருந்தாலும் சரி, அந்த இடத்தில் குறிப்பிட்ட இந்த 2 படங்களை வைக்க வேண்டும். அது என்ன படம்? அதை குறிப்பாக எப்படி வைப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்வோமா? இந்த 2 படங்களை வீட்டில் வைத்தாலும், வீண் விரையம் குறைந்து, வருமானம் அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

முதலில் விநாயகர் அம்சமான யானையின் படத்தை வைத்துக் கொள்ளலாம். சிலையையும் வைத்துக்கொள்ளலாம். யானையின் படமாக இருந்தாலும், சிலையாக இருந்தாலும், அது நிஜ யானை நிறத்தில் இருக்க வேண்டும். அதாவது பீங்கானால் செய்யப்பட்ட வெள்ளை நிறத்திலான யானை இருக்கக்கூடாது. அல்லது வர்ணம் பூசப்பட்ட கலர் கலர் யானையாக இருக்கக்கூடாது. (அதாவது இந்த பரிகாரத்திற்க்கு ஆக இருக்கக் கூடாது. சாதாரணமாக அந்த பொம்மைகளை வாங்கி ஷோகேஸில் வைத்துக்கொள்வதில் தவறில்லை.)

elephant

மரத்தினால் செய்யப்பட்ட, யானை நிறத்திலான யானை சிலைகள் கிடைக்கும். யானையின் திருவுருவப்படம் இருக்கும். அப்படிப்பட்ட, யானையின் நிறத்திலான யானை உருவத்தினை நீங்கள் தொழில் செய்யும் இடத்திலும் வைத்துக் கொள்ளலாம். உங்களுடைய வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக அந்த யானையின் தும்பிக்கை மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த யானையின் படத்திற்கு, வரக்கூடிய பிரச்சனைகளை தவிர்க்கும் சக்தி அதிகமாகவே உள்ளது. எதிர்மறை ஆற்றலினால் உங்களுடைய தொழிலுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது. அதேசமயம் ஜாதக கட்டத்தில் ஏதேனும் தோஷம் இருந்தால் கூட அதன்மூலம் நஷ்டம் ஏற்படாது. நீங்கள் சோர்ந்து போகும் நேரத்தில், ஒரு நிமிடம் இந்த யானையையும், யானையின் கண்களையும் உற்றுநோக்கும் போது உங்களை அறியாமலேயே உங்களுக்குள் ஒரு உத்வேகம் வரும் முயற்சி செய்து பாருங்கள்.

pura

அடுத்தபடியாக சொல்லப்பட்டுள்ளது  வெள்ளைப் புறா. வெள்ளை புறா பறக்கிற மாதிரி உள்ள சிலையையோ அல்லது உருவப் படத்தையோ வாங்கி உங்களுடைய தொழில் செய்யும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம். நீங்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் அல்லது வேலை செய்யும் இடத்தில் நுழைந்ததும் தொழில் செய்யும் இடத்தில் நுழைந்ததும், உங்கள் கண், எதிரே அந்த வெள்ளை புறா பார்க்கும்படி வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக இந்த வெள்ளைப் புறாவை, பறக்கின்ற வெள்ளைப்புறா போல் வைப்பது நல்லது.

sucess-man

உங்களுடைய விடாமுயற்சியோடு இந்த இரண்டு படங்களையும் வாங்கி வைத்து, ஜெயித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு போராடிக் கொண்டே இருங்கள். நீங்கள் செய்யும் தொழில் அதலபாதாளத்தில் இருந்தால் கூட, அந்த தொழிலில் நீங்கள் கொடிகட்டி பறக்கும் அளவிற்கு நிச்சயம் நல்ல மாற்றம், கூடிய விரைவில் வரும் என்ற கருத்தை முன்வைத்து, நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்களுடைய வீட்டில், உங்களுடைய முன்னோர்கள் பயன்படுத்திய இந்த பொருட்களை எல்லாம், தானமாகக் கொடுத்தால் நிச்சயம் உங்கள் வீட்டு ஐஸ்வரியம், உங்கள் கையாலேயே வெளியே சென்றுவிடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.