ஜோதிடம் : இந்த ராசிகாரர்களுக்கு வரும் மாதங்களில் ஓஹோ வாழ்க்கை தான்

12-rasi

புதிதாக பிறந்திருக்கும் ஆங்கில ஆண்டான 2019 ஆம் ஆண்டில் தற்போது மூன்றாம் மாதமான மார்ச் மாதம் பிறந்துவிட்டது. இந்த மூன்று மாத காலங்களில் 12 ராசியினருக்கும் பல வகையான பலன்கள் ஏற்பட்டிருக்கும். இந்த 2019 ஆண்டின் மீதமிருக்கும் மாத காலங்களில் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டங்களும், நன்மையான பலன்கள் அதிகம் ஏற்படும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்

கன்னி:

Kanni Rasi

கன்னி ராசியினருக்கு இந்த ஆண்டு மிகுந்த அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக இருக்க போகிறது. ஆண்டின் முற்பகுதியில் சற்று சுமாரான நிலையே காணப்பட்டாலும், பிற்பகுதியில் உங்களுக்கு பொருளாதார ரீதியிலான பல ஏற்றங்கள் இருக்கும். சமூகத்தில் பெரிய இடத்து மனிதர்களின் தொடர்பும் அதனால் மிகுந்த ஆதாயங்களும் உண்டாகும். பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய பதவி உயர்வு, ஊதிய உயர்வுகள் போன்றவை கிடைக்க பெறுவார்கள். இத்தனை நாட்களாக திருமணம் தாமதமானவர்களுக்கு வெகு சீக்கிரத்தில் திருமணம் நடக்கும். அடிக்கடி பயணங்களும் அதனால் பொருளாதார லாபங்களும் கிடைக்க பெறுவார்கள்.

விருச்சிகம்:

virichigam

- Advertisement -

விருச்சிகம் ராசியினருக்கு இந்த ஆண்டின் தொடக்கம் முதலே சிறப்பான பலன்களை தரும் ஆண்டாக இருக்கிறது. நீங்கள் தொடங்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் மிகச்சிறப்பான வெற்றிகளை பெறும். தொழில், வியாபாரங்களில் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் மிகுந்த லாபங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் சூழல் ஏற்படும். சிலர் புதிய வீடு, மனை, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லதாவர்களுக்கு குழந்தை பிறக்கும். பழைய கடன் பாக்கிகள் அனைத்தையும் கட்டி முடித்து விடும் அளவில் பொருளாதார நிலை உயரும்.

தனுசு:

Dhanusu Rasi

தனுசு ராசியினருக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் சற்று மந்தமான நிலை ஏற்பட்டாலும் ஆண்டின் பிற்பகுதி அதிர்ஷ்டமானதாக இருக்கும். அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். பூர்வீக சொத்து, புதிய தொழில் தொடங்குதல் போன்றவற்றில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கும். பலரால் பாராட்டப்படும் அமைப்பு உண்டாகும். தொழில், வியாபாரங்களில் மிகுந்த லாபங்கள் கிடைக்கும். வெளிநாடுகள் சென்று வரக்கூடிய யோகங்கள் ஏற்படும். குடும்பத்தினருக்கு தேவையான பொருட்களை வாங்கி தந்து அவர்களை மகிழ்விப்பீர்கள். அடிக்கடி விருந்து, விசேடங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.

இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு தொழில், வேலை அமைவதை பற்றி கூறும் ஜோதிடம்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Three lucky rasis in Tamil. It is also called as Jothida kanippu in Tamil or 12 rasi in Tamil or Athirshta rasi palangal in Tamil or Athirshta rasigal in Tamil.