துளசி செடி அபிஷேக பரிகாரம்

thulasi1
- Advertisement -

மருத்துவ குணத்தையும் மகத்துவத்தையும் ஒன்றாக சேர்த்து வைத்திருக்கும் இந்த துளசி செடி கட்டாயம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும். உங்களுடைய வீட்டில் துளசி செடி பூமியில் இருந்தாலும் சரி, தொட்டியில் இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்யலாம்.

உங்கள் வீட்டில் துளசி செடியே இல்லை என்பவர்கள் இன்றைக்கே ஒரு துளசி செடியை நட்டு வளர்த்து வருவது ஆரோக்கிய ரீதியாகவும் நன்மை தரும். ஆன்மீக ரீதியாகவும் நன்மை தரும். சரி வீட்டில் செல்வ வளம் கொழிக்க துளசி செடியில் செய்ய வேண்டிய ஒரு சில பரிகாரங்களை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

துளசி செடி பரிகாரம்

வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை வீட்டில் இருக்கும் துளசி செடிக்கு பன்னீர் அபிஷேகம் செய்ய வேண்டும். ஒரு பெரிய சொம்பு தண்ணீரில் எடுத்துக்கோங்க. அதில் கொஞ்சமாக பன்னீரை கலந்து கொள்ளவும். இந்த தண்ணீரை உங்கள் கைகளால் எடுத்து துளசி செடி மேலே அப்படியே தெளித்து விடுங்கள். மெதுவாக பொறுமையாக இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

அவசர அவசரமாக அந்த பன்னீரை துளசி செடியின் மீது ஊற்றி விட்டு, வந்து விடக்கூடாது. இந்த தீர்த்தத்தை அந்த துளசி செடியின் மீது உங்கள் கைகளால் தெளிக்கும்போது அந்த துளசி செடி சாந்தமடைந்து குளிர்ந்து உங்களுக்கான ஆசீர்வாதங்களை வழங்கும். இந்த பரிகாரத்திற்காக வெள்ளிக்கிழமை ஐந்து நிமிடத்தை ஒதுக்கி மனப்பூர்வமாக செய்யுங்கள்.

- Advertisement -

இதே போல வாரந்தோறும் வரும் சனிக்கிழமையில் அந்த துளசி செடிக்கு மஞ்சள் தண்ணீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். மேலே சொன்னபடி தான் ஒரு சொம்பு தண்ணீரில், இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடியை போட்டுக் கொள்ளுங்கள். அந்த தீர்த்தத்தை உங்கள் கையாலேயே எடுத்து அந்த துளசி செடியின் மேலே நன்றாக தெளித்து விடுங்கள். இந்த இரண்டு கிழமையிலும் இந்த இரண்டு பொருளை வைத்து துளசி செடிக்கு அபிஷேகம் செய்யும்போது அந்த துளசி செடி மனம் குளிர்ந்து உங்களுடைய குடும்பத்திற்கும் ஆசிர்வாதத்தை வழங்கும்.

ஞாயிற்றுக்கிழமை ஒரு சுத்தமான பாத்திரத்தில் கொஞ்சமாக குடிக்கின்ற நல்ல தண்ணீரை ஊற்றி அதில் 3 மிளகு, 3 துளசி இலைகளை போட்டு அந்த துளசி செடி பக்கத்திலேயே வைத்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தின் நலனுக்காக எந்த வேண்டுதலை வேண்டும் என்றாலும் வைக்கலாம்.

- Advertisement -

பிறகு அந்த துளசி செடியை வணங்கி நமஸ்காரம் செய்து கொண்டு இந்த தீர்த்தத்தை எடுத்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பருகி விடுங்கள். உங்களுக்கான ஆரோக்கியமும் கிடைக்கும். அந்த துளசி இலை மிளகோடு சேர்த்து மென்று சாப்பிட்டு இந்த தீர்த்தத்தை குடித்தாலும் தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: சகல செல்வத்தையும் பெற குபேர தீபம்

இந்த பரிகாரங்களை செய்வதன் மூலம் துளசி செடியின் மருத்துவ குணங்களையும் நீங்கள் முழுமையாக பெறலாம். அதுடைய மகத்துவத்தையும் நீங்கள் முழுமையாக பெறலாம். ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரத்தை தொடர்ந்து செய்து வருபவர்கள் வீட்டில் செல்வ கடாட்சம் உயர்ந்து நிற்கும், ஆரோக்கியமும் மேம்படும் என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -