உங்கள் துளசி செடி செழிப்பாக வளர இந்த 5 விஷயங்களை கடைப்பிடித்து வரலாமே! மற்ற செடிகளுக்கு துளசி இலை எப்படி உரமாக மாறும்?

thulasi-theertham-perumal
- Advertisement -

இறைவன் மனிதனுக்கு கொடுத்த சமய சஞ்சீவினி மூலிகையாக விளங்கும் துளசி செடி மருத்துவத்திலும், ஆன்மீகத்திலும் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. எளிதாக கிடைக்கும் அற்புத மூலிகை வகையான துளசி செடியை வளர்ப்பவர்கள் உடைய இல்லத்தில் ஆரோக்கியத்திற்கும், செல்வ செழிப்பிற்கும் பஞ்சமிருக்காது என்பது நம்பிக்கை. செடியை எங்கு வைக்க வேண்டும்? எப்படி வளர்க்க வேண்டும்? இதனால் கிடைக்கும் பலன்கள் என்ன? துளசி இலைகள் மற்ற செடிகளுக்கு உரமாக எப்படி மாறுகிறது? என்பது போன்ற வினாக்களுக்கு விடை காண தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

karunthulasi2

துளசி செடியை பொறுத்தவரை அதிகம் வெயில் படும் இடங்களில் வைத்து வளர்க்க கூடாது. நிழலும், வெயிலும் சேர்ந்த இடத்தில் வளர்ப்பது செழிப்பை உண்டாக்கும். மொட்டை மாடியில் வைத்து வளர்க்க நினைப்பவர்கள் அதனை மற்ற செடி வகைகளுடன் சேர்த்து அதனுடைய நிழலில் இருக்குமாறு வைத்து வளர்க்கலாம். துளசி செடிக்கு தாராளமாக தண்ணீரை கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை தண்ணீரை நன்கு ஊற்றி மண்ணை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.

- Advertisement -

துளசி செடிக்கு போடப்படும் மண் களிமண் அல்லது செம்மண்ணாக இருப்பது சிறந்த பலனை தரும். நன்கு ஈரப்பதம் இருக்கும் மண் கலவையில் வேகமாக வளரும். துளசி செடியை க்ரோ பாக்கில் வைத்து வளர்க்க நினைப்பவர்கள் தண்ணீர் வெளியில் போக சரியான வழி செய்து விட்டு பின்னர் வளர்க்கலாம். துளசிச் செடிக்கு உரமாக பெரிதாக எதுவும் கொடுக்கத் தேவையில்லை, வாரம் ஒரு முறை மண்புழு உரம் அல்லது தொழு உரம் ஒரு கைப்பிடி கொடுத்தால் போதும்.

karunthulasi1

துளசி செடி பெரிய பெரிய இலைகளையும், அடர்த்தியான கிளைகளையும் கொடுக்க அதன் விதை பகுதிகளை காம்புடன் சேர்த்து வெட்டி வர வேண்டும். வாரம் ஒருமுறை அதன் விதை பகுதிகளை வெட்டி அதற்கு உரமாக கொடுத்துப் பாருங்கள். பக்கக் கிளைகள் வளர்ந்து நன்கு பச்சை பசேலென உங்களுடைய துளசி செடி பூத்துக் குலுங்குவதை நீங்களே உணர்வீர்கள். தினமும் துளசி இலை நான்கைந்து வாயில் போட்டு மென்று சாப்பிடுபவர்களுக்கு சளி, கபம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாது.

- Advertisement -

குறிப்பாக குழந்தைகளுக்கு அடிக்கடி துளசி சாறு அருந்தக் கொடுக்க இருமல் போன்ற பிரச்சனைகள் அறவே நெருங்காது. கர்ப்பப்பையில் இருக்கும் பூச்சிகளை அழிக்க துளசி சாறு சிறந்த மருந்தாக இருக்கும். எனவே கருத்தரிக்க நினைப்பவர்கள் அடிக்கடி துளசி சாறு அருந்தலாம். துளசி இலை பூச்சி தாக்குதலுக்கு ஆளாகாமல் இருக்க 10 நாட்களுக்கு ஒரு முறையாவது அதற்கு வேப்ப எண்ணெய் மருந்தை ஸ்பிரே செய்து வரலாம். ஒரு ஸ்பூன் வேப்ப எண்ணெயில் 1 லிட்டர் தண்ணீர் கலந்து செடி முழுவதும் தெளித்து வர எந்த பூச்சி தாக்குதலுக்கும் உட்படாமல் துளசி இலைகள் நன்கு செழித்து வளரும்.

thulasi-theertham

துளசி இலைகளால் பெருமாள், லக்ஷ்மி போன்ற கடவுள் படங்களுக்கு அர்ச்சனை செய்வது குடும்பத்தில் சுபிட்சத்தை உண்டு பண்ணும். இத்தகைய அரும் பெரும் பலன்களைக் கொடுக்கக் கூடிய துளசி! மற்ற செடிகளுக்கு உரமாக கூட மாறும். 50 கிராம் அளவிற்கு துளசி இலைகளை எடுத்து 3 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த தண்ணீருடன் துளசி இலைகளை அரைத்து சேர்த்த பின்னர் வடிகட்டி மற்ற செடி வகைகளுக்கு தெளித்து வந்தால் சிவப்பு சிலந்தி, புள்ளி வண்டு, செதில் பூச்சி, பழ ஈ, கம்பளிப்புழு போன்ற பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். இத்தகைய பூச்சிகள் துளசி வாசத்திற்கு நெருங்க கூட செய்யாது. இவ்வகையில் துளசி செடியானது மற்ற செடி வகைகளுக்கு உரமாக மாறுகிறது.

theertham

செம்பு பாத்திரத்தில் துளசி இலைகளை போட்டு தண்ணீர் சேர்த்து ஊற வைத்தால் செம்பு சத்துடன் அதன் பலன்கள் அபரிமிதமானது. இதனால் தான் பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தத்திற்கு அத்தனை மகிமை உண்டு. தொடர்ந்து பெருமாள் கோவிலுக்கு சென்று தீர்த்தத்தைப் பருகி வருபவர்களுக்கு, எத்தகைய வியாதிகளும் நெருங்குவதில்லை. எனவே செம்பினால் ஆன பஞ்ச பாத்திரத்தில் எப்பொழுதும் துளசி இலைகளை போட்டு வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பூஜைகள் முடிந்த பின்பு அந்த தீர்த்தத்தை குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் கொடுத்து வாருங்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து செயல்பட்டால் ஆயுள் நீளும்.

- Advertisement -