துன்பங்கள் நீங்க, பாதுகாப்பை பெற சாய் பாபா மந்திரம்

Sai-baba-1

மனிதனாக நாம் பிறந்து வாழும் இந்த வாழ்க்கையில் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கப் போகும் வரை பல விதமான பிரச்சனைகளை துன்பங்களை எதிர்கொள்கிறோம். மேலும் நமக்கு உள்ளிருக்கும் தீயவைகளாலும், வெளியிலிருந்து நம்மை நோக்கி வரும் தீயவைகளாலும் பெரும்பாலானோர் ஒரு பாதுகாப்பின்மையையும் உணர்கின்றோம். இருந்தும் தினந்தோறும் இப்பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருகிறோம். இப்படியான விடயங்களால் அவதிப்படுபவர்கள் சாய் பாபா மந்திரம் அதை கூறி வழிபடுவதன் மூலம் அணைத்து இன்னல்களையும் வெல்லலாம்.

Sai baba

சாய் பாபா மந்திரம்

ஓம் ஸ்ரீ சாய் பக்த ரக்ஷாய் நமஹ

சாய் பாபாவுக்குரிய இந்த மந்திரத்தை தினமும் காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 108 முறை ஜெபிக்கலாம். அல்லது தினமும் உங்களால் முடிந்தபோதெல்லாம் இம்மந்திரத்தை 1008 முறை உரு ஜெபிப்பது சிறப்பானதாகும். மேலும் சாய் பாபாவுக்குரிய வியாழக்கிழமைகளில் காலையிலோ அல்லது மாலையிலோ, வீட்டில் பாபாவின் படத்திற்கு வாசனை மிக்க மலர்களை சூட்டி, கற்கண்டுகள் அல்லது முந்திரிப்பருப்புகளை நிவேதித்து வணங்க உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எவ்வகையான பிரச்சனைகளும் அந்த சாய் நாதனின் அருளால் நீங்கும். எப்போதும் ஒரு தெய்வீக பாதுகாப்பு இருப்பதை உணர்வீர்கள்.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்க உதவும் சாய் பாபா மந்திரம்

சாய் பாபா பற்றிய சிறு தகவல்:
நம் பாரத நாடு உலகிற்கே ஆன்மிகத்தை கற்றுத் தந்த ஒரு உன்னதமான நாடு என்பதை நாம் அனைவரும் அறிவோம். நமது, நாட்டில் வறுமை நோய் போன்ற ஆயிரக்கணக்கான குறைபாடுகள் இருப்பதை நாம் காண்கிறோம். இருந்தாலும் இந்த நாட்டில் மட்டும் தான் பணக்காரன் முதல் ஏழை வரை அனைவருமே இறைவனைப் பற்றி அறிந்து கொள்ளவும், அவனை அடையவும் லட்சியமாக கொண்டு வாழ்கிறார்கள். அதற்கான தேடல்கள் மற்றும் முயற்சிகளில் பெரும்பாலானோர் ஈடுபடுகின்றனர்.

Sai baba

இப்படிப்பட்ட உயர்ந்த லட்சியங்களை கொண்ட மனிதர்களுக்கு உதவுவதற்காவே காலம் காலமாக இந்த நாட்டில் பல ரிஷிகளும், ஞானிகளும் தோன்றுகின்றனர். அந்த வகையில் 19 ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிர மாநிலத்தில் தோன்றியவர் தான் சாய் பாபா. அந்த மாநிலத்தின் “ஷீர்டி” நகரத்தில் சமாதியடைந்திருக்கும் “ஸ்ரீ சாய் பாபா”, அவர் வாழ்ந்த காலத்தில் தன்னை நாடி வரும் பக்தர்களிடம் பேதம் பார்க்காமல் அருள் புரிந்தார். அவரின் இறப்பிற்கு பிறகும் அவரை மனதார பிராதிப்பதின் மூலம் நமது குறைகள் அனைத்தையும் ஸ்ரீ சாய் பாபா போக்குகிறார்.