இன்றைய கால சூழ்நிலையில் பிரச்சனைகள் இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு பிரச்சனையில் பிளந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இதில் பண பிரச்சனை என்பது தனி அது இல்லாமல் சுற்றி இருப்பவர்களால் மனவேதனை தான் முன்னேறவே கூடாது என அருகில் இருப்பவர்கள் கொடுக்கும் துன்பங்கள், மனக்கவலைகள், நோய்கள் என பல உண்டு. இது போல பிரச்சனைகள் எதுவாக இருப்பினும் அந்த பிரச்சனைகள் அனைத்தையும் துரத்தி அடிக்க இந்த எளிய பரிகாரம் உதவி செய்யும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது அந்த பரிகாரத்தை குறித்து தெரிந்து கொள்வோம்.
தீராத பிரச்சனைகள் தீர பரிகாரம்
பொதுவாக பிரச்சனை என்று வந்து விட்டால் நாம் அதற்குள்ளே இருந்து சோர்ந்து போகாமல் பிரச்சனையை எதிர் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில் பிரச்சனை இல்லாத மனிதன் என்று ஒருவரும் இருக்க முடியாது. சிலர் அதிலிருந்து மீள்வதற்கான வழியை தேடி வெளி வந்து விடுவார்கள் . சிலர் அதிலேயே இருந்து வாழ்க்கை கூட அழித்துக் கொள்வார்கள். அப்படி இல்லாமல் பிரச்சனைகளை தீர்த்து வெளிவர போராட வேண்டும் அத்துடன் சேர்த்து இந்த ஒரு எளிய பரிகாரத்தையும் செய்து கொள்ளுங்கள்.
இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை வேளையில் செய்வது சிறந்தது. ஏனெனில் சூரிய அஸ்தமனத்தின் போது இது போல பரிகாரம் செய்யும் போது பிரச்சனைகளும் அஸ்தமனம் ஆகும் என்ற கூற்று உள்ளது. அதுமட்டுமின்றி இந்த பரிகாரத்தை செய்யும் அன்று அசைவத்தை தவிர்க்க வேண்டும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவை ஒரே ஒரு வெற்றிலை, நல்ல முற்றிய நிலையில் உள்ள பெரிய தேங்காய், அடுத்து 108 வில்லை கற்பூரம்.
இப்போது இந்த தேங்காயை இரண்டாக உடைத்து கண் இருக்கும் பாதி முடியை ஏதாவது ஒரு பொருளின் மீது நிறுத்தி வைக்க வேண்டும். அதை நீங்கள் ஒரு தட்டில் மண் நிரப்பி அதன் மேல் நிறுத்தலாம் அல்லது ஒரு பாத்திரத்தில் மீது இந்த தேங்காயை வைக்கலாம் தேங்காய் நேராக நிற்க வேண்டும் அதற்கு ஏற்றார் போல் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். அதன் உள்ள வெற்றிலையை வைத்து இப்பொழுது அந்த தேங்காய்க்கு முன்பாக நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள்.
அமரும் திசை ஒன்று கிழக்கு அல்லது மேற்காக இருக்க வேண்டும். ஆண்கள் எனில் மேல் சட்டை அணியாமல் அமர்வது நல்லது. பெண்கள் நைட்டி அணிந்து கொண்டு அமரக் கூடாது. இப்படி தேங்காய் முன் அமர்ந்து பிறகு வெற்றிலையில் முதலில் ஒரு கற்பூரத்தை கொளுத்தி போடுங்கள். அதன் பிறகு சகல துன்பங்களும் பொசி பொசி ஸ்வாகா என்ற இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். ஒவ்வொரு கற்பூரத்தை தேங்காயில் போடும் போது இதை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
கடைசியாக 108வது கற்பூரத்தையும் இந்த தேங்காயையில் போட்டு எரிந்த பிறகு இதை அப்படியே ஒரு மூட்டையாக கட்டி உங்களை திருஷ்டி சுற்றுவது போல மூன்று முறை சுற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் வீட்டின் அருகில் உள்ள ஏதாவது நீர்நிலைகளில் இதை போட்டு விடுங்கள். மீதம் இருக்கும் பாதி தேங்காயும் பயன்படுத்தக் கூடாது அதையும் தூக்கி தூர போட்டு விட வேண்டும். இதை செய்த பிறகு வீட்டிற்கு வந்து குளித்து விடுங்கள். அவ்வளவு தான் பரிகாரம்.
இதையும் படிக்கலாமே: வியாழக்கிழமை மாலையில் இந்த ஒரு தீபத்தை ஏற்றி வழிபட்டால் குபேரரின் பரிபூரண அருள் நமக்கு கிடைத்து செல்வ செழிப்பில் மேலோங்கி திகழ்வோம்.
இந்த பரிகாரத்தை மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால் போதும். நீங்கள் தீர்க்கவே முடியாமல் திணறிய பிரச்சனைகள் கூட தீர்ந்து விடும். அது மட்டும் இன்றி தீராத நோயில் அவதிப்படுபவர்கள் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.