கஷ்டம் தீர வாராகி வழிபாடு

varahi lemon
- Advertisement -

ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் தாள முடியாத வேதனையில் துவளும் போது முதலில் ஞாபகத்திற்கு வருவது அவனுடைய அன்னை தான். அதே போல நம்முடைய துன்பமான காலக்கட்டத்தில் நாம் நினைத்தவுடன் தாயைப் போல வந்து அரவணைத்து நம்மை காக்கக் கூடிய ஒரு தெய்வம் தான் வாராகி அம்மன். காவல் தெய்வம், கிராம தேவதை என சொன்னாலும் கூட துன்பம் என்று மனதில் நினைத்தால் உடனே வந்து நிற்கக் கூடிய தெய்வம்.

அத்தகைய வாராகி அன்னைக்கு பிடித்த முறையில் வழிபடும் போது இன்னும் மன மகிழ்ந்து நம்மை நல்ல முறையில் வாழ வைப்பார். அப்படி வாராகி அன்னை மகிழ்விக்க நாம் எந்த முறையில் பூஜை செய்ய வேண்டும் என்பதையெல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ராஜயோகம் பெற வாராகி அன்னை வழிபாடு

நம் வாழ்வில் இருக்கும் துன்பங்கள் நீங்கி ராஜ போக வாழ்க்கை வாழ வேண்டுமெனில் அதற்கு ராஜ கனியாம் எலுமிச்சை பழம் வைத்து வாராகி அன்னையை வழிபட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. எலுமிச்சை பழத்தை வைக்க வேண்டும் என்றால் அதை அப்படியே வைக்கக் கூடாது அதையும் இந்த முறையில் செய்து வைக்க வேண்டும்.

வாராகி அன்னை வழிபாட்டிற்கு பஞ்சமி திதி மிகவும் உகந்தது. அதே போல் அஷ்டமி தினத்திலும் அவரை வணங்கலாம். அது மட்டும் இன்றி செவ்வாய் வெள்ளி போன்ற நாட்களிலும் வணங்கி வரலாம். இதில் உங்களுக்கு உகந்த நாட்கள் எதுவும் அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். ஆனால் அன்னைக்கு பஞ்சமி திதி மிக மிக விசேஷமானது என்பதையும் இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த எலுமிச்சை கனியை வைத்து எலுமிச்சை சாதம் செய்ய வேண்டும். இந்த சாதத்தை நல்ல ருசியுடன் செய்வது மிகவும் அவசியம். ஏனோதானோ என்று செய்யக் கூடாது வாராகி அன்னை படம் வைத்திருந்தால் அவற்றுக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து செவ்வரளி பூவால் மாலை சாற்றி கொள்ளுங்கள். படம் இல்லை என்றால் வாராகி அன்னை நினைத்து ஒரு பஞ்சமுக தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள்.

அதன் பிறகு அன்னையின் படத்திற்கு முன்பாக ஒரு வாழை இலையை வைத்து இந்த சாதத்தை படையலாக வையுங்கள். சாதத்தை சுற்றி 27 ரோஜா மலர்களை வைக்க வேண்டும் 27 என்ற எண்ணிக்கை 27 நட்சத்திரங்களை குறிக்கிறது அதன் பிறகு அன்னைக்கு கோரைக்கிழங்கை வேக வைத்து அதில் நெய்யும் மஞ்சளும் கலந்து படையலில் வைக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி படையல் செய்து வணங்கிய பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த பிரசாதத்தை உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் சிறு பெண் குழந்தைக்கு முதலில் சாப்பிட கொடுங்கள். அதன் பிறகு நீங்கள் இந்த நெய்வேத்தியத்தை சாப்பிடலாம். உங்கள் வீட்டிலே அந்த வயதை ஒத்த குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு மிக கொடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற முருகன் வழிபாடு

இந்த முறையில் வாராகி அன்னை வழிபடும் போது வாராகி அன்னை மனமகிழ்ந்து நம்மை ராஜபோக வாழ்க்கை வாழ வைப்பார் என்று சொல்லப்படுகிறது. இதுவரை வாழ்க்கையில் எத்தனை துன்பங்களை அனுபவித்ததாக இருப்பினும் இதன் பிறகு அவர்கள் நல்ல நிலையில் வாழ்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -