இனி துருப்பிடித்த தோசை கல்லை கூட தூக்கி போட வேண்டாம். 20 வருடமாக பயன்படுத்தாம இருந்த கல்லை கூட சட்டுன்னு சுத்தம் செய்து மொறு மொறுன்னு தோசை ஊற்றலாம். அதுக்கு சூப்பர் ஐடியா இருக்கு வாங்க தெரிஞ்சுக்கலாம்.

- Advertisement -

இரும்புக் கல்லில் தோசை ஊற்றினால் நல்லா மொறு மொறுவென்று இருப்பதுடன் ருசியாகவும் இருக்கும். இது உடல் நலத்திற்கும் நல்லது. ஆனால் இரும்பு கல்லை பழகுவதில் இருந்து பராமரிப்பது வரை கொஞ்சம் சிரமம் என நினைத்து அனைவரும் நான்ஸ்டிக் தவாவை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். நான்ஸ்டிக் தவா உடல் நலத்திற்கு அத்தனை ஆரோக்கியமானது இல்லை இருந்தாலும், அதில் வேலை சுலபமாக முடிகிறது. இதை பெரிதாக பராமரிக்கவும் தேவையில்லை என்ற காரணத்தினாலே பெரும்பாலும் நான் ஸ்டிக் தவாவே பயன் படுத்துகிறார்கள். இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் எவ்வளவு பழைய துருப்பிடித்த தோசை கல்லாக இருந்தாலும், அதை சட்டென்று புதுசு போல மாற்றி விட அருமையான வழி உள்ளது. அதை தெரிந்து கொண்டு நீங்களும் இனி இது போல தோசை கல்லை பயன்படுத்தி பழக்கி கொள்ளுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

dosai-kal3

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதன் மேல் துருவேறிய தோசை கல்லை வைத்து சூடானவுடன், அடுப்பை மிதமான சூட்டிற்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். சூடாக இருக்கும் தோசை கல்லின் மீது சுற்றிலும் கல் உப்பை பரவலாக போட்டு விடுங்கள். கல் உப்பை போட்ட பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து சாறு பிழிந்து தோசை கல்லில் மீது ஊற்றிய பிறகு, எலுமிச்சை தோலை வைத்து கல்லை நன்றாக தேய்க்க வேண்டும் இப்படி தேய்க்கும் போது வெறும் கையில் தேய்த்தால், சூடு பட்டு விடும் எனவே போர்க் அல்லது கத்தியை பயன்படுத்தி தேய்த்து கொடுங்கள்.

- Advertisement -

இப்படி தேய்த்துக் கொடுத்த பிறகு கல்லின் மீது கொஞ்சம் பாமாயில் எண்ணெயை ஊற்றிக் கனமான பேப்பரை வைத்து மறுபடியும் கல்லை சுற்றிலும் நன்றாக தேய்த்துக் கொடுங்கள். இதை தேய்த்து கொடுத்த பிறகு இன்னொரு எலுமிச்சை பழத்தை எடுத்து அதையும் இதைப் போல சாறு பிழிந்து கல்லின் மீது ஊற்றிய பிறகு எலுமிச்சை தோலை வைத்து மறுபடியும் நன்றாக கல்லை தேய்த்துக் கொடுங்கள்.

இவையெல்லாம் வைத்து தேய்த்துக் கொடுத்த பிறகு வாழைத் தண்டு வைத்து ஒரு முறை நன்றாக தேய்த்துக் கொடுங்கள். வாழைத் தண்டு கிடைக்கவில்லை என்றால், வாழை இலையை கூட பயன்படுத்தி தேய்க்கலாம்.இவையெல்லாம் வைத்து தேய்த்த பிறகு தோசை கல்லை பாத்திரம் தேய்க்கும் சோப்பு அல்லது லிக்விட் பயன்படுத்தி ஸ்கிரப்பர் வைத்து நன்றாக தேய்த்து விட்டால், அதில் படிந்திருக்கும் துரு கறைகள் எல்லாம் சுத்தமாக நீங்கி விடும்.

- Advertisement -

கடைசியாக ஒரு பவுலில் கொஞ்சம் வினிகர், கோல்கேட் பேஸ்ட் இரண்டையும் நன்றாக கலந்து அதையும் கல்லின் மீது ஒரு முறை தேய்த்து விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் ஒன்று, இரண்டு துருக்கள் ஒட்டி இருந்தாலும் அவை மொத்தமாக உரிந்து வந்து விடும். இதை தேய்த்து கல்லை சுத்தம் செய்த பிறகு துணி வைத்து சுத்தமாக துடைத்துக் கொள்ளுங்கள்.

dosaikal-2

இதில் உடனே தோசை ஊற்றினால் ஒழுங்காக வராது. அதனால் இந்த கல்லில் கொஞ்சம் அதிகமாகவே பாமாயில் எண்ணெய் ஊற்றி எல்லா பக்கமும் படும்படி தேய்த்து மூன்று மணி நேரம் நல்ல வெயில் படும் இடத்தில் வைத்துக் விடுங்கள். சாதாரணமாக வீட்டில் தினமும் பயன்படுத்தும் கல் கூட ஒரு வாரம் வரை பயன்படுத்தாமல் விட்டால் தோசை ஒழுங்காக வராது. இது இத்தனை பழைய கல் என்பதால் இப்படி தேய்த்து வெயிலில் வைத்து பழக்கி எடுத்த பிறகு ஒரு காட்டன் துணி வைத்து துடைத்து விட்டு பயன்படுத்தலாம்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து கல்லை வைத்து தோசை ஊற்றி பாருங்கள், நான்ஸ்டிக் தவாவில் ஊற்றி எடுப்பது போலவே மொறு மொறுவென்று தோசை சுருண்டு வரும்.

இதையும் படிக்கலாமே: வெறும் கையால தேய்ச்சு செம்புப் பாத்திரங்களை தங்கம் போல ஜொலிக்க வைக்க முடியும் தெரியும்மா? இத தெரிஞ்சிச்சுகிட்டா உங்க வீட்டில் இருக்க பழைய செம்பு பாத்திரங்களையெல்லாம் இனி தங்கம் போல ஜொலிக்கும்.

இனி துருப்பிடித்த தோசை கல்லை கூட வீணாக தூக்கி வீசாமல், கொஞ்ச நேரம் செலவழித்து இது போல சுத்தப்படுத்திக் கொண்டு பயன்படுத்தி வந்தால் சுவையுடன் சேர்த்து ஆரோக்கியமும் நமக்கு கிடைக்கும். நீங்களும் உங்கள் வீட்டில் இது போல கல் இருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -