தூதுவளைக் கீரையை வைத்து இப்படி ஒரு மெது வடையை செய்ய முடியுமா என்ன? தூதுவளைக் கீரையை வீட்டில் இருப்பவர்களை சாப்பிட வைக்க இது ஒரு சூப்பர் ஐடியா தான்.

vadai1
- Advertisement -

பொதுவாகவே கீரையை சாப்பிடு என்று சொன்னால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். அதிலும் தூதுவளைக் கீரையை எல்லாம் வேக வைத்தோ, சூப் வைத்தோ, ரசம் வைத்தோ கொடுத்தால் கட்டாயம் குடிக்க மாட்டார்கள். சின்ன வயதில் சளி பிரச்சனையில் அவதிப்படும் குழந்தைகளுக்கு தூதுவளையை இப்படியும் வடை செய்து கொடுக்கலாம். பெரியவர்களுக்கும் இந்த வடையை கொடுக்கலாம். தவறு கிடையாது. ஆரோக்கியம் நிறைந்த இந்த வடையை நம்முடைய வீட்டில் எப்படி செய்வது. ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

தூதுவளை கீரை கிராமங்களில் விளைந்திருக்கும். கட் பண்ணி எடுத்துக் கொள்ளலாம். நகர்ப்புறங்களில் இருந்தால் கீரை கடைக்காரரிடம் சொல்லி வைத்து, அந்த கீரையை வாங்கி வீட்டுக்கு கொண்டு வாருங்கள். அதில் முள் கட்டாயம் இருக்கும். எதுவுமே செய்ய முடியாது. ஜாக்கிரதையாக அதை தண்ணீரில் போட்டு ஒரு பத்து நிமிடங்கள் ஊறவைத்து அலசி எடுக்கவும். இரண்டு மூன்று தண்ணீரில் சுத்தமாக கழுவி விடுங்கள். இந்த தூதுவளைக் கீரை இப்போது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

பிறகு 1 டம்ளர் அளவு உளுந்தம் பருப்பை, நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு நல்ல தண்ணீரை ஊற்றி 1 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த உளுந்தை தண்ணீர் எல்லாம் வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு ஓட விடுங்கள். கூடவே இந்த தூதுவளை கீரையை ஒரு கைப்பிடி அளவு, அந்த உளுந்துடன் போட்டு நைசாக அரைக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து உளுந்து மாவைஅரைத்துக் கொள்ள வேண்டும்.

எப்போதும் போல நாம் வடையை சுட மாவு அரைப்போம் அல்லவா அதேபோலத்தான் இந்த மாவையும் அரைத்து வழித்து ஒரு கிண்ணத்தில் போட்டு இதில் மிகப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி அளவு, உப்பு தேவையான அளவு, மிளகுத்தூள் 1/2 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், தேவைப்பட்டால் இஞ்சி துருவல் 1/2 ஸ்பூன், போட்டு மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்.

- Advertisement -

அடுப்பில் கடாயை வைத்து வடையை பொறித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்து கொள்ளுங்கள். உங்கள் கையில் கொஞ்சம் தண்ணீரை தொட்டு இந்த மாவை மெதுவடை போலவே எடுத்து அப்படியே எண்ணெயில் விட்டு சிவக்க விட்டு சாப்பிட்டு பாருங்கள். இதன் ருசி சூப்பராக இருக்கும். சாதாரணமாக செய்யும் உளுந்து மெதுவடைக்கும், இந்த தூதுவளைக் கீரை வடைக்கும் வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாது.

இதையும் படிக்கலாமே: குக்குல பெரிய மக்கா இருக்கிறவங்க கூட, இந்த மரவள்ளிக்கிழங்கு கட்லெட்டை 15 நிமிஷத்துல செஞ்சு அசத்தலாம்.

நிறம் மட்டும் லேசாக பச்சை நிறத்தில் தெரியும். எதையாவது சொல்லி சமாளித்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு ஆரோக்கியம் முக்கியம் சளி பிடிக்கக்கூடாது என்றால் இந்த வடையை ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -