100 வருடங்களுக்கு முன்பு திருப்பதி எப்படி இருந்தது – வீடியோ

Tirupathi temple

உலக அளவில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலிற்கு தினமும் பல லட்சம் பக்தர்கள் வந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர். திருப்பதி கோவில் என்பது காலம் காலமாக தமிழ் மக்களால் போற்றி பாதுகாக்கப்பட்ட ஒரு சிறப்பு மிக்க கோவிலாகும். இந்த கோவில் சுமார் 100 ஆடுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதை சொல்லும் ஒரு வீடியோ பதிவு இதோ.

திருப்பதி பெருமாள் கோவிலில் கொடுக்கப்படும் லட்டு பிரசாதம் இன்றளவும் உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இது வரை இந்த பிரசாதம் எதை கொண்டு தயாரிக்கப்படுகிறது என்ற தகவல் யாருக்கும் தெரியாது. அந்த அளவிற்கு அதற்கான பார்முலா பாதுகாக்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில் தமிழர்களின் வசம் இருந்த திருப்பதி கோவில், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஆந்திர மாநிலத்தின் வசம் சென்றது.

இன்றளவும் திருப்பதி கோவிலில் எண்ணிலடங்கா பல தமிழ் கல்வெட்டுகள் இருப்பதை நம்மால் காண முடிகிறது. திருப்பதி கோவிலில் வர கூடிய வருமானமானது இந்தியாவில் உள்ள மற்ற கோவில்களின் வருமானத்தை விட பன் மடங்கு அதிகம். உலக அளவில் அதிக வருமானம் பெரும் கோவில்களில் திருப்பதி பெருமாள் கோவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிட தக்கது.