தக்காளி பழத்தின் அற்புத நன்மைகள்

நம் அன்றாட சமையலில் தக்காளியை ஒரு பொருளாக, உணவின் சுவையை அதிகப்படுத்துவதற்காக சேர்க்கிறோம். ஆனால் அந்த தக்காளியில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் ஏராளமாக இருக்கின்றது என்பதை சிலர் அறிந்திருக்க மாட்டார்கள். சில சமயங்களில் விலை கூடினால் கூட அதை அவசியமாக வாங்கிவந்து சமையலுக்கு சேர்த்துக் கொள்வோம். சமையலுக்கு ருசியை கொடுக்க அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது தக்காளி. சுவைக்காக மட்டுமல்ல ஆரோக்கியத்திற்காகவும் தான். அப்படி என்ன பெரிய முக்கியத்துவம் இந்த தக்காளியில் உண்டு என்பதை பற்றி இந்த பதிவில் சற்று விரிவாக காண்போமா.

tomato

தக்காளியில் அடங்கியுள்ள சத்துக்கள்
வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, மாவுச்சத்து, ஃபோலேட், சாச்சுரேட்டட் கொழுப்பு, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற சத்துக்கள் இந்த தக்காளியில் அடங்கியுள்ளது. தக்காளியில் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கின்றது. இதில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

பளபளப்பான சருமத்திற்கு
தக்காளியில் பீட்டா கரோட்டின் அளவு அதிகமாக உள்ளது. இது நம் சருமத்தை சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும். நம் சருமமானது சுருக்கத்தில் இருந்து நீங்கவும், எண்ணெய் வழியாமல் இருக்கவும் தக்காளி பழத்தினை விழுதாக அரைத்து முகத்தில் போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பளபளப்பு தன்மையை பெறும்.

tomato

உறுதியான எலும்புகள்
வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்தானது தக்காளி பழத்தில் அதிக அளவில் உள்ளது. இதை தினந்தோறும் நாம் சாப்பிட்டு வருவதன் மூலம் நம் எலும்புகள் உறுதியாக்கப்படுகின்றன. மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளை இதன் மூலம் நாம் தவிர்க்கலாம்.

- Advertisement -

நீரிழிவு
தக்காளியில் உள்ள குரோமியம் அதிகமாக உள்ளதால் இது நம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

tomato

புற்றுநோய் வராமல் தடுக்க
தக்காளிக்கு இயற்கையாகவே புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி உள்ளது. நம் உடம்பில் உள்ள அணுக்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் தக்காளியில் அதிக அளவு உள்ளது. இதனால் கர்ப்பப்பை புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், வாய் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

கண் பார்வைக்கு
தக்காளியில் இருக்கும் வைட்டமின் ஏ சத்தானது கண் பார்வையை மேம்படுத்துகிறது. மாலைக்கண் வியாதி வராமல் தடுக்கிறது. குணப்படுத்தவே முடியாத கோளாறாக இருக்கும் மாகுலர் டி-ஜெனரேஷன் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை இந்த தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் தடுக்கலாம்.

tomato

சிறுநீரகக் கற்கள் பித்தப்பை கற்கள் உருவாவதை தடுக்கும்
தக்காளியை சிறுநீர் கற்கள், பித்தப்பை கற்கள் உள்ளவர்கள் அதன் விதையுடன் சாப்பிடக்கூடாது. விதையை நீக்கிவிட்டு தான் சாப்பிட வேண்டும். விதை இல்லாமல் சாப்பிடும் தக்காளியின் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும், பித்தப்பையில் கற்கள் உருவாவதை தடுக்கலாம் என்று சில ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மென்மையான கூந்தலுக்கு
தக்காளியில் இருக்கும் வைட்டமின் ஏ சத்தானது கூந்தலை வலுவாகவும், பளபளப்பாகவும் வைக்கிறது. தக்காளி சாப்பிடுவதால் நம் கூந்தலானது வளர்ச்சியடையாது. ஆனாலும் நமக்கு இருக்கும் கூந்தலானது அழகாக மாறும்.

tomato

கடுமையான வலி
சிலருக்கு முதுகு எலும்பும், தோள்பட்டை களிலும் கடுமையான வலி ஏற்படும். இப்படிப்பட்ட வழியினை நீக்க தக்காளி ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள பயோஃபிளேவோனாய்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் வலி ஏற்படாமல் தடுக்கின்றது.

உடல் எடையை குறைக்க
தக்காளியில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்தானது அதிக அளவில் உள்ளது. இதனால் நம் உடல் எடையை குறைக்க இது உதவியாக உள்ளது. தக்காளி கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள பொருளாகவும் இருக்கிறது. இதனால் எடையை குறைக்க டயட்டில் உள்ளவர்கள் தினந்தோறும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடிப்பது மிகவும் சிறந்தது.

tomato

தக்காளியில் சில அழகு டிப்ஸ்

உங்களின் சருமம் மென்மையாக இருக்க வேண்டுமென்றால் தக்காளி விழுதுடன் சிறிதளவு தயிர் சேர்த்து, முகத்தில் தடவி ஃபேஸ் மாஸ்க் போட்டு அரை மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி வந்தால் சருமம் மென்மையாக மாறும்.

தக்காளி விழுதுடன் சிறிதளவு ரவை சேர்த்து உங்கள் முகத்தை மசாஜ் செய்து வந்தால் உங்கள் முகம் அழகாக ஜொலிக்கும்.

tomato

உங்கள் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மறைய தக்காளி பேஸ்ட்டுடன், உருளைக்கிழங்கு சாறு ஒரு ஸ்பூன் சேர்த்து முகத்தில் தேய்த்து 20 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.

உங்கள் முகம் சப்பையான தோற்றத்தை விட்டு, பூசினால் போல் தோற்றமுடைய தக்காளியை தோல், விதை நீக்கி விட்டு விழுதாக தயார் செய்து கொள்ளவும்.  முகத்தில் ஆலிவ் ஆயிலை முதலில் தடவிக்கொள்ள வேண்டும். பின்பு இந்த தக்காளி விழுதை முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் மசாஜ் செய்துவிட்டு கழுவி விடலாம். இப்படி வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே
ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Tomato benefits in Tamil. Tomato Tomato uses in Tamil. Tomato payangal in Tamil. Thakkaliyin payangal in Tamil. Tomato nanmaigal in Tamil.