காலையில லஞ்ச் பாக்ஸ்க்கு 10 நிமிடத்தில் டக்குனு ஒரு வெரைட்டி ரைஸ் தயார். இப்படி சாதம் கட்டிக்கொடுத்தா, திரும்பி வரும்போது லஞ்ச் பாக்ஸ் காலியாக தான் வீட்டுக்கு வரும்.

rice
- Advertisement -

பொதுவாகவே காலையில் அலுவலகம் செல்பவர்களுக்கும், பள்ளிக்கூடம் செல்பவர்களுக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி தயார் செய்வது கொஞ்சம் கஷ்டம் தான். தினமும் சாம்பார், ரசம், குழம்பு என்று செய்து கொடுக்க முடியாது அல்லவா. வெரைட்டி ரைஸ் ஆகவும் இருக்க வேண்டும். அது வித்தியாசமான சுவையிலும் இருக்க வேண்டும். என்ன செய்வது. கொஞ்சம் புதுசு புதுசா ட்ரை பண்ணா நல்லா இருக்கும் என்று நினைப்பவர்கள் இந்த ரெசிபி ட்ரை பண்ணி பார்க்கலாம். வடித்து வைத்த சாதம் மட்டும் உங்கள் கையில் இருந்தால் போதும், அடுத்த பத்து நிமிடத்தில் மணக்க மணக்க இந்த தக்காளி பூண்டு சாதம் தயார்.

செய்முறை

இதற்கு நமக்கு உதிரி உதிரியாக வடித்த சாதம் தேவை. இரண்டு பேர் சாப்பிடும் அளவுக்கு சாதத்தை வடித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சாதத்தில் கொஞ்சம் உப்பு போட்டு, 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வடித்து வைத்தால் வெரைட்டி ரைஸ் செய்வதற்கு ருசியாக இருக்கும்.

- Advertisement -

அடுத்து இந்த சாதத்தில் சேர்க்க நமக்கு ஒரு மசாலா தயார் செய்ய வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கணும். அதில் வர மிளகாய் 3, தோல் உரித்த பூண்டு பல் 10, 2 ஸ்பூன் மட்டும் தண்ணீர் ஊற்றி, இதை கொஞ்சம் கொரகொரப்பாக விழுதாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, தாளித்துக் கொள்ளவும். தேவை என்பவர்கள் இதில் பட்டை, லவங்கம், போட்டு கூட தாளித்துக் கொள்ளலாம். உங்களுக்கு அந்த வாசம் பிடிக்கும் என்றால். சரி, தாளித்த பிறகு நீலவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் 1, போட்டு நன்றாக வதங்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதத்தையும் தாண்டி வதங்கி வந்தவுடன், பொடியாக நறுக்கிய தக்காளிப் பழம் 1 போட்டு கண்ணுக்கே தெரியாமல் வதக்கி விடுங்கள். இந்த தக்காளி பழத்திற்கு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் 1/4 போட்டு வதக்க வேண்டும்.

- Advertisement -

இறுதியாக எண்ணெய் பிரிந்து வரும்போது இதில் நாம் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை ஊற்றி பச்சை வாடை போகும் அளவுக்கு வதக்குங்கள். பூண்டும் மிளகாயும் பச்சை வாடை நீங்கி லேசாக எண்ணெய் பிரிந்து வந்தவுடன், நறுக்கிய குடைமிளகாய், பச்சை பட்டாணி சேர்த்து வதக்குங்கள். குடைமிளகாயும் பச்சை பட்டாணியும் இரண்டிலிருந்து மூன்று நிமிடத்தில் வெந்து கிடைத்துவிடும்.

இதையும் படிக்கலாமே: கொத்தமல்லி சட்னியில் தேங்காய்க்கு பதிலாக இந்த 1 பொருளை போடுங்க. டேஸ்ட் சும்மா அப்படியே அல்லும். இட்லி, தோசை, சப்பாத்திக்கு புதுவிதமான சூப்பரான சிம்பிளான சைட் டிஷ்.

அப்போது வடித்து வைத்திருக்கும் உதிரி உதிரியான சாதத்தை இதில் போட்டு தேவைப்படும் அளவுக்கு உப்பு தூள் தூவி, நன்றாக கலந்து சாதம் சூடானதும் மேலே கொத்தமல்லி தழைகளை தூவி அடுப்பை அணைத்து, கொஞ்ச நேரம் விட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். ஒரு நாளைக்கு லஞ்ச் பாக்ஸுக்கு இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் மீண்டும் மீண்டும் இந்த வெரைட்டி ரைஸ் வேண்டும் என்று கேட்பார்கள்.

- Advertisement -