நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பயிற்சி! கண்ணுக்குத் தெரியாத எப்படிப்பட்ட கிருமியும் நம்மை பாதிக்காது.

இன்றைய சூழ்நிலையில் எதை செய்தால் நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும் என்று தான் பலபேர் சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் வருமுன் காப்பது தானே நல்லது. கண்ணுக்குத் தெரியாத கிருமிகளின் மூலம் மனிதருக்கு நோய்த்தொற்று ஏற்படுவது இயற்கை தான். ஆனால் அதன்மூலம் விரைவில் பாதிப்பு அதிகரிக்கும் என்ற சூழ்நிலை வந்தால்! அதுதான் தற்சமயம் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத எந்த கிருமியும் நம்மை தாக்காமல் இருக்க வேண்டுமென்றால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவைப்படுகிறது. இதற்கு நாம்  எந்தவிதமான பயிற்சியை செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

elumichai lemon

பயிற்சியை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, சில பேருக்கு அதிகமான பயம், அதிகமான மன அழுத்தம் காரணமாக இரவு நேரங்களில் தூக்கம் கண்களை தழுவாது. மிகவும் சிரமப்படுவார்கள். இதன் மூலம் ஆரோக்கியம் தான் கெடும். இப்படிப்பட்டவர்கள் ஒரு எலுமிச்சம்பழத்தை இரண்டாக வெட்டி, தலைக்கு மேல் பக்கத்தில் 2 பக்கங்களிலும், வைத்துவிட்டு படுத்தால் நல்ல தூக்கம் வரும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் சக்கரம் என்றால் அது விசுத்தி சக்கரம் தான். விசுத்தி சக்கரம் என்பது தொண்டைப் பகுதியைக் குறிக்கின்றது. நம்முடைய புராணத்தின்படி பாற்கடலைக் கடைந்த போது, வந்த விஷயத்தை விழுங்கி, தன் தொண்டையில் நிறுத்திய சிவபெருமானின் கதை நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். சிவபெருமான் தன் தொண்டைக்குழியில் நிறுத்திய விஷமானது, எம்பெருமானை தாக்கவில்லை. காரணம் விசுத்தி சக்கரத்திற்கு, விஷத்தை முறிக்கும் தன்மை உள்ளது என்பதால் தான்.

throat

இதன்படி எந்த ஒரு விஷத்தன்மை கொண்ட, கண்ணுக்குத் தெரியாத கிருமியாக இருந்தாலும் அதை அழிக்கக் கூடிய சக்தியானது விசுத்தி சக்ரா என்று சொல்லப்படும் தொண்டைக்குழிக்கு உள்ளது. காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகள் வருவதற்கு முன்பாகவும், முதலில் நமக்கு பாதிப்பது தொண்டை பகுதிதான். தொண்டை கரகரப்பு வந்துவிட்டாலே, நம் உடலுக்கு ஏதோ ஒரு பிரச்சினை வரப்போகிறது என்று தான் அர்த்தம். நம்மில் பெரும்பாலானோர் இதை உணர்ந்திருப்போம். அதாவது உடம்பில் இருக்கும் விசுத்தி சக்கரம் முறையாக இயங்கவில்லை என்றால் நம்மை நோய்தொற்று விரைவாகத் தாக்கும். இந்த விசுத்தி சக்கருவை எப்படி சீராக இயங்க வைப்பது? என்பதற்க்காண பயிற்சியை இப்போது பார்ப்போம்.

- Advertisement -

நீங்கள் முதலில் வசதியான ஒரு இருக்கையில் அமர்ந்து கொள்ளுங்கள். அதன் பின்பு உங்களது இரு உள்ளங்கைகளையும்  ஒரு பத்து முறை நன்றாக தேய்க்க வேண்டும். தேய்க்கும்போது சூடு வரும் அல்லவா? அந்த அளவிற்கு உள்ளங்கை சூடுடானவுடன், உங்களது கழுத்தின் முன்பக்கம் ஒரு கையையும், கழுத்தின் பின்பக்கம் ஒரு கையையும் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உள்ளங்கையில் இருக்கும் சூடானது, கழுத்து பகுதியை சூழ்ந்திருக்க வேண்டும். அந்த சமயம் உங்கள் கவனம் முழுவதையும் உங்கள் தொண்டைக்குழியில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். ஒரு நிமிடம் இப்படி உங்களது உள்ளங்கைகளை கழுத்துப்பகுதியில் வைத்திருந்தால் போதும். உங்கள் கையில் இருக்கக்கூடிய காந்த சக்தியானது, தொண்டைக் குழியை சீராக இயங்க வைக்கும்.

hand

இரண்டாவதாக உங்களது கழுத்து பகுதியை லேசாக மேலே பார்த்தவாறு உயர்த்தி(கழுத்து வலிக்காமல் இருக்க தலையணைகளை கழுத்துக்குப் பின்னால் வைத்துக் கொள்ளலாம்), வாயிலிருந்து ஐந்து முறை மூச்சை உள்வாங்கி வெளியிடுங்கள். சாதாரணமான சுவாசம் தான். ஆனால் வாய்ப்பகுதியில் மூச்சைவிடப் போகிறீர்கள். இதன் மூலம் உங்களின் விசுத்தி சக்கரம் என்று சொல்லப்படும் தொண்டை குழியானது சீராக இயங்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மேற்குறிப்பிட்டுள்ள இந்த இரண்டு பயிற்சியையும் இரவு தூங்கச் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு செய்வது நல்ல பலனைத் தரும். நம்முடைய உடம்பில் விசுத்தி சக்கரம் சீராக இயக்கம் அடைந்துவிட்டால் உடல் ஆரோக்கியம் சீராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
குழப்பமான சூழ்நிலையில் கூட, சுலபமாக முடிவை எடுத்து விடலாம். கட்டை விரல் பயிற்சி!

இது போன்ற யோக முத்திரைகள் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vishuddhi chakra benefits in Tamil. Yoga mudra Tamil. Yoga mudras Tamil. Vishuddhi chakra meditation. Vishuddhi chakra in Tamil.