உங்கள் வீட்டு பூஜை அறை கோவிலாக மாற வேண்டுமா? மஞ்சளில், இந்த 3 பொருட்களையும் சேர்த்து சுவாமி படங்களுக்கு வையுங்கள்.

poojai-turmeric

மனக்குழப்பம் இருக்கும்போது மனிதர்களாக பிறந்த அனைவருமே கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றுதான் நினைப்போம். ஏனென்றால் கோவிலில் இருக்கும் சூழ்நிலையும், அங்கு இருக்கும் நல்ல நறுமணம், இதோடு சேர்ந்த இறைவனின் அருள், நமக்கு நிம்மதியை தரும். நம்முடைய வீட்டிலும் பூஜை அறை இருக்கின்றது. அதிலும் இறைவன் குடி கொண்டிருக்கிறார். இருந்தபோதிலும் கோவிலுக்கு சென்றால் நமக்கு மன நிம்மதி ஏற்பட என்ன காரணமாக இருக்கும். அங்கு இறைவனுக்காக பயன்படுத்தப்படும் பொருட்களில் வாசனை மிகுந்த பொருட்கள் கலக்கப்படுவதும் ஒரு காரணம். அந்த நறுமணங்களை நாம் சுவாசிக்கும் போது நம் மூளைக்கும், நம் மனதிற்கும் நம்மை அறியாமலேயே ஒரு உற்சாகம் வந்து விடுகிறது. நிம்மதியற்ற சூழ்நிலை மாறி, மனநிம்மதியை அடைகின்றோம்.

கோவிலை போன்ற நறுமணம் எப்போதும் உங்கள் வீட்டில் இருக்க வேண்டுமா? ‘இதற்காக கோவிலுக்கு செல்லக்கூடாது. வீட்டிலேயே இறைவனை வழிபட்டு விடவேண்டும் என்று கூறவில்லை.’ நீங்கள் வீட்டில் இருக்கும் போதும் உங்களது மனமானது சுறுசுறுப்பாகவும், உற்சாகத்துடனும், மன நிறைவோடும் இருப்பதற்காக, உங்கள் வீட்டை கோவிலாக மாற்றத்தான் இந்த வழி.

வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் சுவாமி படங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு வைக்கும் வழக்கம் வந்துவிட்டது, என்று சொன்னால் சிலர் நம்பமாட்டீர்கள். வேலைப்பளு காரணமாக சில பேர் வீட்டில், இன்று இறைவனின் படத்திற்கு ஸ்டிக்கர் பொட்டு வைத்து விடுகிறார்கள். முடிந்தவரை இதை தவிர்த்து கொள்ளலாம். மஞ்சளும் குங்குமமும் வைப்பதில் இருக்கும் சிறப்பினை நம்மால் வேறு எதிலும் கட்டாயமாக பெற முடியாது.

poojai

உங்களது வீட்டில் இறைவனுக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தையும், தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அதை மற்ற பாத்திரங்களோடு கலப்பது தவறு. இறைவனுக்கு வைக்கப்படும் மஞ்சள் குங்குமம் சந்தனம் இப்படிப்பட்ட பொருட்கள் அனைத்தும் எச்சில் படாத பாத்திரத்தில் தான் குழைத்து பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

இறைவனுக்காக வைக்கப்படும் மஞ்சளுடன், சிறிதளவு பனுகு, சிறிதளவு கோரோசனை, சிறிதளவு ஜவ்வாது தூள் இவை அனைத்தையும் கலந்து சிறிதளவு பன்னீர் ஊற்றி குழைத்து, இப்படித் தயார் செய்த மஞ்சளை இறைவனுக்கு வைத்து, அதன்மேல் குங்குமப் பொட்டை வைக்க வேண்டும். உங்கள் வீட்டு நில வாசல் படிக்கும் இதே மஞ்சளை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நறுமணமானது உங்கள் வீட்டில் எந்த நேரமும் நிறைந்திருக்கும். வீட்டில் இருப்பது போன்ற நினைப்பே இருக்காது. கோவிலுக்கு சென்றால் எந்த அளவிற்கு உங்களுக்கு மன நிம்மதி கிடைக்குமோ, அதேபோன்ற சூழ்நிலையை உங்கள் வீட்டிலேயே நீங்கள் பெறலாம்.

lakshmi

இதோடு மட்டுமல்லாமல் நறுமணம் மிகுந்த வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. நம் வீட்டு பூஜைக்காக, நம் வீட்டில் வசிக்கும் தெய்வங்களுக்காக நாம் செய்யப்படும் சின்ன சின்ன விஷயங்கள் கூட, நமக்கு ஒரு பெரிய பலனை தேடித்தரும் என்பதை கவனத்தில் கொண்டு, நம் வீட்டையும், நம் வீட்டுப் பூஜை அறையையும் பராமரித்து வந்தால், நம் வீடும் கோவில் ஆகும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நம் வீடும், நம் வீட்டுப் பூஜை அறையும் சுத்தமாகவும், நறுமணமாகவும் இருப்பது எவ்வளவு அவசியமோ, அதே அளவு நம்முடைய மனமும் சுத்தமாக இருக்க வேண்டும். அதாவது பொறாமை, வயிற்றெரிச்சல் என்ற எண்ணங்களை அறவே தவிர்த்து, அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையை தினம்தோறும் இறைவனிடம் வைப்பது நம்மை மட்டுமல்ல, நம் சந்ததியினரையும் நன்றாக வாழ வைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

இதையும் படிக்கலாமே
உங்கள் நிதிநிலைமை படுமோசமாக இருக்கிறதா? இந்த 6 திரிகள் போதும். ‘லக்ஷ்மிக்கட்டு’ அறுபட்டு ஓஹோ என்று வந்து விடுவீர்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Poojai arai kurippugal. Poojai arai ragasiyam. Poojai arai tips. Poojai kurippugal. Poojai Porutkal Tamil.