உங்கள் உடலில் கெட்ட சக்தி குடி கொண்டு உள்ளதா, என்பதை சோதித்து பார்க்க, ஒரு பரிகாரம்! கெட்ட சக்தியை கண்டுபிடிக்க இதை விட சுலபமான பரிகாரம் வேறு இருக்க முடியாது.

sleep

ஒருவருடைய வாழ்க்கையில் தொடர் கஷ்டங்கள் வருவதற்கு இந்த கெட்ட சக்திகளும் ஒரு காரணம் தான். கெட்ட சக்திகளின் பட்டியலில் ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி, செய்வினை கோளாறு இவை அத்தனையும் அடங்கும். சில பேருக்கு இந்த ஒரு சந்தேகம் இருக்கும். அவர்களை அறியாமலேயே, அவர்கள் உணர்வார்கள். ‘தங்களுக்கு யாரோ ஏதோ செய்வினை வைத்து விட்டதாகவும், அப்படி இல்லை என்றால் சாப்பாட்டில் மருந்து கலந்து கொடுத்து விட்டதாகவும், அதன் மூலம் அவர்களுக்கு வாழ்க்கையில் கஷ்டங்கள் வருவதாக உணர்ந்தால்’, இந்த பரிகாரத்தை செய்து பார்த்து உங்களுடைய சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம்.

உங்களுடைய உடம்பில் கெட்ட சக்தி இருப்பதாக உங்களுக்கு சந்தேகம் இருந்தால், இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். அப்படி கெட்ட சக்திகள் இருப்பது உறுதி ஆகி விட்டால், அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

இரவு நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். உங்கள் சமையலறையில் இருக்கும் வெள்ளைப்பூண்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இருந்து ஒரு வெள்ளை பூண்டு பல் எடுத்து, தோலை உரித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் படுக்கும் தலையணைக்கு அடியில் அந்த வெள்ளை பூண்டை வைத்து தூங்கி விடுங்கள்.

poondu

மறுநாள் காலை எழுந்ததும் அந்த பூண்டை எடுத்து பாருங்கள். இரவு நீங்கள் வைத்தது போலவே அந்த பூண்டு இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை. அந்த பூண்டு அடர் மஞ்சள் நிறத்தில் மாறி இருந்தாலோ அல்லது ரொம்பவும் சுருங்கி வாடி இருந்தாலும் உங்களிடத்தில், ஏதோ கண்ணுக்கு தெரியாத கெட்ட சக்தியின் மூலம் பிரச்சனை உள்ளது என்பதுதான் அர்த்தம். உடனே பயந்து விட வேண்டாம். அந்த கெட்ட சக்தி கண்திருஷ்டியாக இருந்தாலும் பூண்டில் மாற்றம் தெரியும்.

சரி, பூண்டின் நிறம் மாறவில்லை என்றால் பிரச்சனை இல்லை. அந்த பூண்டை எடுத்து குப்பையில் போட்டு விடுங்கள். பூண்டின் நிறம் மாறிவிட்டால் என்ன செய்வது? உங்களுடைய வீட்டில் பூஜை அறை இல்லாமல் வேறு ஏதாவது ஒரு இடத்தில் ஒரு சிறிய மண் அகல் விளக்கில் கடுகு எண்ணெயை ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து வர வேண்டும். அந்த தீப ஒளியின் முன்பு சிறிது நேரம் நீங்கள் அமர்ந்து உங்கள் குலதெய்வத்தை வேண்டி உங்களை பிடித்து இருக்கும் கெட்ட ஆற்றல், உங்கள் உடலை விட்டு வெளியேற வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டால் நிச்சயமாக நல்லது நடக்கும்.

kadugu 4-compressed

இந்த தீபத்தை தொடர்ந்து ஐந்து நாட்கள் உங்களுடைய வீட்டில் கிழக்கு பார்த்தவாறு ஏற்றி வைத்து நீங்கள், அந்த தீபத்தை பார்த்துஅமர்ந்து கண்களை மூடி குலதெய்வத்தை வேண்டிக் கொண்டாலே போதும். உங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகள் படிப்படியாக குறைவதை உணர முடியும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்தால் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.