உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் சூப்பரான வாழைக்காய் வறுவல் சீக்ரெட் இது தான்

udupi hotel vazhakkai varuval
- Advertisement -

வாழைக்காய் வைத்து நிறைய வகையான ரெசிபிகளை செய்யலாம். என்ன தான் நாம் வீட்டில் உணவு வகைகளை விதவிதமாக செய்தாலும் கூட ஹோட்டல்களில் அந்த உணவுகளை செய்யும் பொழுது வித்தியாசமான சுவையில் இருக்கும். இதையே வீட்டில் எப்படி செய்தாலும் கூட இந்த ஹோட்டல்களில் அந்த உணவுகளை செய்யும் உணவு போல வராது. இந்த சமையல் குறிப்பு பதிவிலும் உடுப்பி ஹோட்டல் சுவையில் வாழைக்காய் வறுவல் எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த ரெசிபியை தெரிஞ்சுக்கிட்டு நீங்களும் வீட்டில் இது போல செய்து அசத்துங்க.

செய்முறை

 இந்த ரெசிபி செய்வதற்கு இரண்டு வாழைக்காயை நீள வாக்கில் நறுக்கி எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்து தனியாக வைத்து விடுங்கள். இதை எண்ணெயில் பொறிக்கும் போதே கிறிஸ்பியாக மாறுவதுடன் சுவையும் அட்டகாசமாக நன்றாக இருக்கும்.

- Advertisement -

அடுத்து ஒரு பேனில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அதில் 10 சின்ன வெங்காயம், 1ஸ்பூன் மிளகு, 1 ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் சோம்பு, கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு அரை மூடி துருவிய தேங்காயை இதில் சேர்த்து தேங்காய் நன்றாக ஈரப்பதம் இல்லாமல் வறுபடும் வரை வதக்க வேண்டும். ஆனால் தேங்காயின் நிறம் மாறக் கூடாது.

வறுத்த இந்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதில் தண்ணீர் சேர்க்கக் கூடாது. இது அதிக மைய வராது கொஞ்சம் கொரகொரப்பாகவே தான் இருக்கும். இப்போது அடுத்து மீண்டும் தவா வைத்து சூடானவுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். அதன் பிறகு அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து ஒரு முறை வதக்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த மசாலா நன்றாக வதங்கிய பிறகு 1 ஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், அரை ஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக வதக்கிய பின்பு ஏற்கனவே நாம் பொரித்து வைத்த வாழைக்காயை இதில் சேர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்து எடுக்கும் போது வாழக்காய் நன்றாக வெந்து மொறு மொறு வென்று இருக்கும். ஆகையால் இந்த மசாலாவில் சேர்த்து ரெண்டு நிமிடம் வரை நன்றாக பிரட்டி விட்டாலே போதும் மசாலா இந்த வாழைக்காயில் ஊறி விடும்.

இதையும் படிக்கலாமே: டிபன் செய்ய தோசை மாவு வீட்ல இல்லையா? அரிசி மாவு மட்டும் இருந்தாலே போதும். சூப்பரா மொறு மொறுன்னு தோசை தயாராகிவிடும்.

மசாலா வாழைக்காய் எல்லாம் நன்றாக கலந்து சூப்பரான சுவையில் உடுப்பி ஹோட்டல் வாழைக்காய் வறுவல் தயாராகி விட்டது. இந்த வாழைக்காய் வறுவல் நீங்கள் எந்த சாதத்துடன் வைத்து சாப்பிடாலும் அட்டகாசமாக இருக்கும் வெறும் தயிர் சாதம், ரசம் சாதம் என்றாலும் கூட தட்டு சாதம் சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -