உடுப்பி ஸ்டைலில் வாழைக்காய் வறுவலை இவ்வளவு சுவையாக வேறு யாராலும் செய்யவே முடியாது. வறுவல் செய்த கைகளுக்கு தங்க வளையல் வரும்.

vazhakai-fry
- Advertisement -

உடுப்பி ஸ்டைலில் வாழைக்காய் வறுவல் செய்ய முடியுமா. இந்த ரெசிபியை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கீங்களா. இல்லையென்றால் தவறாமல் இந்த பதிவை படியுங்கள். ஒருமுறை வாழைக்காய் வறுவல் உங்களுடைய வீட்டில் இப்படி செய்து கொடுத்தால், வீட்டில் இருப்பவர்கள் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். மணக்க மணக்க வறுவல் செய்த கைகளுக்கு தங்க வளையல் நிச்சயம். வாங்க நேரத்தை கடத்தாமல் ரெசிப்பியை பார்த்துவிடலாம்.

செய்முறை

இதற்கு முதலில் ஒரு ஸ்பெஷல் மசாலா அரைக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சின்ன வெங்காயம் 10 பல், மிளகு 10, சீரகம் 1/2 ஸ்பூன், சோம்பு 1/2 ஸ்பூன், கருவேப்பிலை 1 கொத்து, தேங்காய் துருவல் 2 கைப்பிடி அளவு, போட்டு நன்றாக வதக்கவும். இது வதங்கி வந்த உடன் அடுப்பை அணைத்துவிட்டு, ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்து வைத்துக் கொள்ளவும். இதை நம்மால் ரொம்ப மைய அரைக்க முடியாது. முடிந்த வரை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து முத்திய ஒரு பெரிய வாழை காய எடுத்து தோல் சீவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நீல வாக்கில் நறுக்கி கொண்டாலும் சரி, அல்லது உங்கள் வசதிக்கு ஏற்ப எந்த சைஸில் நறுக்கி கொண்டாலும் சரி, நறுக்கிய வாழைக்காய்களை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து இந்த வாழை காய்களை பொரித்து எடுக்கும் அளவுக்கு எண்ணெய் ஊற்றி வாழை காய்களை பொரித்து எடுக்கவும். அதாவது வாழைக்காய் மூழ்கும் அளவுக்கு எண்ணெய் ஊற்றி, வாழை காய்களை வறுக்கலாம். அப்போது வாழைக்காய் மொறு மொறுப்பாக வறுபட்டு நமக்கு கிடைக்கும். அதை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். முக்கால் பாகம் வாழைக்காய் அந்த எண்ணெயிலேயே வறுபட்டு விடும்.

- Advertisement -

அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிக்ஸி ஜாரில் அரைத்திருக்கும் விழுது, மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, கருவேப்பிலை 1 கொத்து, இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன், போட்டு இந்த மசாலாவை நன்றாக வதக்கி விடுங்கள். பிறகு எண்ணெயில் பொரித்து எடுத்த வாழைக்காயை இதில் போட்டு, மீண்டும் நன்றாக பிரட்டி அடுப்பை சிம்மில் வைத்து விடவும்.

இதையும் படிக்கலாமே: இந்த சூப்பை குடித்தாலே உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்பு கரைந்து ஓடிவிடும். வாக்கிங் போக முடியாதவர்கள், வாக்கிங் போக மறந்தவர்கள், அதை சரி கட்ட, இந்த சூப் ட்ரை பண்ணி பார்க்கலாம்.

மசாலா பொருட்களின் சாறு நன்றாக வாழைக்காயில் இறங்கி, வாழைக்காய் முழுமையாக வெந்து வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, சுட சுட இதை எந்த சாதத்திற்கு வேண்டுமென்றாலும் பரிமாறிக் கொள்ளலாம். சூப்பராக இருக்கும். குறிப்பாக வெரைட்டி ரைஸுக்கு சைடிஷ் ஆக வைக்கலாம். ரசம் சாதம் தயிர் சாதத்திற்கும் சூப்பராக இருக்கும். ரெசிபி பிடித்தவர்கள் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -