சூப்பரான சுவையில் உளுந்து அதிகம் சேர்த்து செய்யப்படும் இந்த ‘உளுந்து சட்னி’ பத்தே நிமிடத்தில் செய்து புரோட்டீனை எளிதாக பெற்றுக் கொள்ளலாமே!

ulunthu-chutney2
- Advertisement -

உளுந்தில் இருக்கும் புரோட்டின் நம் அன்றாட உணவில் சேர்க்கப்பட வேண்டிய ஒரு சத்தாகும். தினமும் என்னடா சட்னி செய்வது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் எந்த காய்கறியும் சேர்க்காமல் சட்டென உளுந்து, வெங்காயம், தக்காளி கொண்டு செய்யப்படும் இந்த சட்னி நிச்சயம் அனைவருக்கும் பிடித்தமான சுவையில் இருக்கும். உளுந்தின் மகத்துவம் உணர்ந்த நாம் அடிக்கடி இதனை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ப்ரோடீன் மிகுந்த இந்த உளுந்து சட்னி எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

ulunthu

உளுந்து சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
எண்ணெய் – தேவையான அளவிற்கு, உளுத்தம் பருப்பு – 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 5, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவிற்கு, உப்பு தேவையான அளவிற்கு. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், வர மிளகாய் – 2, கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

உளுந்து சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் 4 டேபிள்ஸ்பூன் அளவிற்கு உளுந்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி எடுக்க வேண்டும். உளுந்து கரிந்து போய்விடக் கூடாது எனவே அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் உளுந்தை மட்டும் எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

ulunthu-chutney

அதே எண்ணெயில் கூடுதலாக கொஞ்சம் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய்களை சேர்த்து நன்கு சுருங்க வதக்க வேண்டும். 2 நிமிடம் பச்சை மிளகாயை வதக்கிய பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கி வந்ததும் அதில் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி மைய மசிந்தவுடன் கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவிற்கு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு போட்டு 2 நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து விடுங்கள். பின்னர் வதக்கியவற்றை ஃபேன் காற்றில் நன்கு ஆற வைத்துக் கொள்ளுங்கள். ஆறிய பின் ஜாரில் சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் எடுத்து வைத்துள்ள உளுத்தம் பருப்பை சேர்த்து மீண்டும் நன்கு மிக்ஸியை சுற்றி அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். முதலிலேயே உளுத்தம் பருப்பை சேர்த்தால் கொழகொழவென்று ஆகிவிடும். மிக்ஸி ஜார் கழுவிய தண்ணீரை தவிர கூடுதலாக எந்த தண்ணீரையும் சேர்க்க தேவை இல்லை. அப்போது தான் சட்னி கெட்டியாக சூப்பராக இருக்கும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

ulunthu-chutney1

கடுகு பொரிந்து வந்ததும், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதனுடன் வர மிளகாய்களைக் கிள்ளி சேர்த்து கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியுடன் கொட்ட வேண்டியது தான். ரொம்ப ரொம்ப சுலபமான முறையில் செய்யக்கூடிய இந்த உளுந்து சட்னி புரோட்டின் மிகுந்து காணப்படுவதால் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும். இடுப்பு எலும்புகள் பலப்படும். இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று எல்லாவற்றிற்கும் தொட்டு கொள்ள நன்றாக இருக்கும் என்பதால் நீங்களும் வீட்டில் ஒரு முறை முயற்சி செய்து பார்த்து பயனடையலாமே!

- Advertisement -