- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஇந்த 2 பொருள் போதும். வெறும் இரண்டே வாரத்தில், உடல் முழுவதும் அப்படியே பளிங்குகல் போல...

இந்த 2 பொருள் போதும். வெறும் இரண்டே வாரத்தில், உடல் முழுவதும் அப்படியே பளிங்குகல் போல ஜொலிக்க தொடங்கி விடும். குறைந்த செலவில் ஃபுல் பாடி ஒயிட்டனிங் கிரீம் ரெமிடி இதோ உங்களுக்காக.

- Advertisement -

எல்லோருக்கும் உடம்பு முழுவதும் வெள்ளையாக, கரும்புள்ளிகள் இல்லாமல் அழகாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் சில பேருக்கு முகம் ஒரு நிறம். முகத்திலேயே நெற்றி, கழுத்துப் பகுதி கொஞ்சம் கருப்பாக இருக்கும். சில பேருக்கு, முகம் வெள்ளையாக இருக்கும். கை கால்கள் எல்லாம் பார்ப்பதற்கு கருப்பாக இருக்கும். இப்படி uneven skin tone கொண்டவர்கள் முழு உடலையும் வெள்ளையாக மாற்ற வேண்டும் என்று நினைத்தால் இந்த அழகு குறிப்பு உங்களுக்காக மட்டும்.

குறைந்த செலவில் இந்த பேக்கை வீட்டிலேயே நீங்கள் தயார் செய்து கொள்ளலாம். தொடர்ந்து இந்த அழகு குறிப்பை பின்பற்றி வந்தால் உங்கள் சரும பிரச்சனைகள் அனைத்தும் சரியாகி, சருமம் அழகாக வெள்ளை நிறத்தில் மாறிவிடும்.

- Advertisement -

ஃபுல் பாடி ஒயிட்னிங் கிரீம் ரெமிடி:
இதற்கு நமக்கு தேவைப்படப் போகும் பொருள் இரண்டு தான். காய்ச்சாத பால், பச்சை பயிறு மாவு. ஒரு பாத்திரத்தை எடுத்து வைத்து அதில் காய்ச்சாத பாலை ஊற்றி, தேவையான அளவு இந்த பச்சை பயிறு மாவை போட்டு கட்டிகள் இல்லாமல் கலந்து விடுங்கள்.

பிறகு இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அடுப்பை சிம்மில் வைத்து கலந்து கொண்டே இருக்க வேண்டும். அதிகமாக தீ வைத்தால் இது சீக்கிரம் கட்டிப்பிடிக்க தொடங்கிவிடும். கட்டிகள் இல்லாமல் இந்த பாலை காய்ச்ச வேண்டும். பால் காய காய பச்சைப்பயிறு மாவு பாலில் கலந்து, திக்காக ஒரு கிரீம் பதத்திற்கு நமக்கு கிடைக்கும். அப்போது அடுப்பை அணைத்து விடுங்கள். அளவு என்பது உங்களுடைய விருப்பம் தான். நீங்கள் எடுக்கும் பாலின் அளவுக்கு ஏற்ப பச்சைபயிறு மாவை, பாலோடு சேர்த்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் தல தலவென கிரீம் பக்குவத்தில் இதை காய்ச்சி அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த கிரீம் நன்றாக ஆறியதும் உங்கள் உடல் முழுவதும் அப்ளை செய்யலாம். அப்படி இல்லை என்றால் முகம் கழுத்து பகுதி, கை கால்களுக்கு மட்டும் இந்த பேக்கை அப்ளை செய்து கொள்ளுங்கள். 15 லிருந்து 20 நிமிடம் பேக் நன்றாக காய்ந்ததும், பேக்கை மீண்டும் ஈரம் செய்து கொண்டு, உங்கள் கையை வைத்து வட்ட வடிவில் மசாஜ் செய்து விட்டு, பிறகு குளித்து விடவும். சோப்பு போட்டு குளிக்காமல், வெறும் தண்ணீரில் குளிக்கவும்.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

இந்த அழகு குறிப்பு உங்களுடைய சருமத்தை மாய்சரைஸ் செய்து அழகாக பொலிவு பெற செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. வாரத்தில் இரண்டு நாள் அல்லது மூன்று நாள் இந்த குறிப்பை தொடர்ந்து பின்பற்றி வர சரும பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து, சருமத்தில் இருக்கும் கருமை நிறம் நீங்கி அழகாக வெள்ளையாக மாறத் தொடங்கும். தேவைப்படுபவர்கள் இந்த அழகு குறிப்பை முயற்சி செய்து பார்க்கலாம்.

சற்று முன்