எந்த பெயர்கள் பெண்களுக்கு வாழ்க்கை முழுவதும் கஷ்டத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!

girl-baby-astro

பெயர் என்பது வெறும் பெயர் மட்டுமல்ல. அதை கூப்பிடும் பொழுது அதிலிருந்து வரும் நல்ல அதிர்வலைகள் உங்கள் வாழ்க்கையை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கக்கூடிய ஆற்றலும் கொண்டுள்ளன. பெயர் ராசி, பெயர் பொருத்தம், பெயர் வைப்பது என்று ஜோதிட ரீதியாக பெயரை முன் வைத்து பல சாஸ்திரங்கள் கூறப்பட்டு உள்ளன. ஒரு குழந்தை பிறந்து அதற்கு பெயர் வைக்கும் நேரம், காலம் மிகவும் முக்கியமானது. அதை விட நீங்கள் வைக்கும் பெயர் உயிர் பிரியும் வரை உங்களுடன் இருக்க கூடிய ஒன்று.

Tamil girl baby names

சில பெயர்கள் வாழ்க்கையில் கஷ்டத்தை உண்டு பண்ணும். சில பெயர்கள் யோகத்தை உண்டு பண்ணும். அதன் கூட்டு எண்ணிக்கை உங்கள் வாழ்க்கையின் சிக்கல்களை தீர்மானிக்கும். இப்படி நம் பெயரை வைத்து பல சாஸ்திர குறிப்புகள் மனு தர்ம சாஸ்திரத்தில் ஏராளம் உள்ளன. அதில் குறிப்பிட்டு இந்தப் பெயர்களெல்லாம் பெண்களுக்கு வைக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இவைகள் சிறந்த பெயர்களாக இருந்தாலும், அந்தப் பெண்களுக்கு வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியது. இன்று தமிழில் பெரும்பாலானோர் சரளமாக வைத்துக் கொண்டிருக்கும் பழம்பெரும் பெயர்கள் கூட அந்த பெண்களுக்கு வாழ்வில் தீராத துன்பத்தை தந்து கொண்டிருக்கும். அப்படி என்ன பெயர்கள் பெண்களுடைய வாழ்க்கையில் போர்க்களத்தை உண்டாக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

முதலில் மனு தர்ம சாஸ்திரப்படி புராணத்தில் இருக்கும் பத்தினிப் பெண்கள் பெயரையும், யோகத்தை உண்டாக்க கூடிய தெய்வங்களின் பெயர்களையும், நதிகளின் பெயர்களையும், மலைகளின் பெயர்கள், ராகங்களின் பெயர்கள், மலர்களின் பெயர்களையும் கூட வைக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த பெயர்கள் அனைத்தும் மனிதனுக்கு வைக்கக்கூடிய பெயர்கள் அல்ல. இதனால் அவர்களுக்கு எதிர்காலத்தில் கஷ்டப்படும் நிலைமை தான் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

baby

உதாரணத்திற்கு லக்ஷ்மி, தேவி, கவிதா, பிரியா, சுமதி, பிருந்தா போன்ற பெயர்கள் கடவுளுக்குரிய பெயர்கள் மற்றும் பத்தினிப் பெண்களின் பெயர்கள் இந்த பெயர்களை வைத்திருப்பவர்கள் வாழ்க்கையில் தாங்க முடியாத துன்பங்களை எல்லாம் அனுபவித்து இருப்பர். அவர்களுடைய வாழ்க்கை போராட்டமாக தொடர்கின்ற துரதிருஷ்டம் அவர்களுக்கு உண்டாகும். இது பெரும்பாலானோருக்கு இருக்கும் பெயர்கள். இந்த பெயர்களை எல்லாம் யோகமான பெயர்கள் என்று நினைத்து தெரியாமல் வைத்திருக்கலாம் ஆனால் உண்மையில் இவை யோகம் தரக்கூடியவை அல்ல.

- Advertisement -

ஒரு பெயர் யோகம் தரக்கூடியது, அதிர்ஷ்டம் தரக்கூடியதாக இருந்தால் அது நேர்மாறாக தான் நமக்கு வாழ்க்கையில் பிரதிபலிக்கும். அதுவே நியதி. உதாரணத்திற்கு ராணி, மகாராணி, இளவரசி என்று அரண்மனை வாழ்க்கை வாழ்பவர்களின் பெயர்களை வைத்தால் அதற்கு நேர் மாறாக அவர்களின் வாழ்க்கை அமைந்து விடும் என்பது கசப்பான உண்மை. அதைத்தான் அந்த சாஸ்திரம் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

girl

முந்தைய காலத்தில் எல்லாம் குப்பம்மா, குப்பாயி, பிச்சையம்மாள், பிச்சை என்று வைத்திருப்பார்கள். இதை அவமானமாக நினைத்தாலும், கேலிக்குரிய பெயராக நினைத்தாலும் உண்மையில் இந்தப் பெயர்களெல்லாம் அவர்களுக்கு யோகத்தை கொடுத்து இருக்கும். வாழ்க்கையில் அவர்களுக்கு நிம்மதியும், சந்தோஷமும் எப்போதும் இருந்திருக்கும். செல்வி, மலர், மொழி, லக்ஷ்மி இவைகள் பெயருடன் சேர்க்கப்பட்டிருக்கும் தமிழ் பெண்கள் பெயர்களும் உண்மையில் சிறந்த பெயர்கள் அல்ல. இந்தப் பெயரில் உள்ள பெண்கள் அனைவரும் தங்களுடைய எதிர்கால வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை சந்தித்து இருப்பார்கள். மனதிற்குப் பிடித்த வாழ்க்கை அவர்களுக்கு அமைந்திருக்காது. பிடிக்காத ஒரு வாழ்க்கையை வேறு வழி இன்றி வாழ்ந்து கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள்.

girl-baby

நாம் வைக்கும் பெயரிலும் அதை கூப்பிடும் முறையிலும் நம்முடைய வாழ்க்கை அமைந்திருக்கும். நல்ல அதிர்வலைகளை உண்டு பண்ணக்கூடிய பெயர்கள் வைக்க வேண்டும். அதிர்ஷ்டம் தரக்கூடிய பெயர்கள் உண்மையில் துரதிர்ஷ்டத்தை தான் தரும். நீங்கள் அவமானமாக நினைக்கும் பெயர்கள் உண்மையில் உங்களுடைய வாழ்க்கையை அதிர்ஷ்டமாக மாற்றும் என்பது தான் உண்மை என்பதை கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் முகத்தில் இருக்கும் மச்சம் தரும் அதிர்ஷ்டம் என்னனு நீங்களும் தெரிஞ்சிக்க வேண்டாமா?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.