நீ சென்ற பிறகும் உன்னோடு நான் – காதல் கவிதை

Love kavithai

உலகத்திற்காக தினமும்
பல மணி நேரம் சிரிக்கும் நான்
உனக்காக தினமும் ஒரு மணி நேரம்
வாழ்கிறேன்.. கண்களில் கண்ணீரோடும்
மனதில் ஏக்கத்தோடும்..

Kadhal Kavithai Image
Kadhal Kavithai

இதையும் படிக்கலாமே:
கவனிக்க மறந்தாள் – காதல் கவிதை

காதலிக்கும் சமயத்தில் தினம் தினம் சிரித்தவர்கள் அனைவரும் அதே காதலில் தோல்வியுற்ற பிறகு தினம் தினம் அழுது அடக்க முடியாத துயரம் கொள்கின்றனர். இன்பமானாலும் சரி துன்பமானாலும் சரி பாகுபாடு இன்றி சமமாக தரும் குணம் கொண்டது காதல். ஆகையால் காதலிப்பதற்கு முன்பு காதலை பற்றி நன்கு அறிவது அவசியம்.

காதலில் வெற்றிகண்டவர் கொடி கட்டி வாழ்ந்துகொண்டிருப்பதையும், காதலில் தோல்வி கண்டவர் மதுபான கடையில் குடியேறியதையும் நாம் பார்த்து பழகியவர்கள் தான். ஆனால் இது மட்டுமே காதலில் சூத்திரம் கிடையாது. காதலில் தோல்வி கண்டவரும் வாழ வேண்டும். காதலை உரமாக்கி அதன் மேல் வாழ்க்கையை அமைத்து வாழ்வில் புது மாறுதலை அடைய வேண்டும். அதுவே மனிதனை முன்னேற்றும்.

Love Kavithaigal sms
Love Kavithai

தோழி கவிதை, நட்பு கவிதைகள், காதல் கவிதைகள் என அனைத்து விதமான கவிதை தொகுப்புகளையும் படிக்க ஒரு சிறந்த பக்கம் இது.