கவனிக்க மறந்தாள் – காதல் கவிதை

Love kavithai

நான் அவளை கவனிப்பதே இல்லை
என்று எண்ணி அவள் கலக்கம் கொள்கிறாள் ..
பாவம் அவளுக்கு என்ன தெரியும்
அவள் என்னை கவனிக்காத நேரத்தில்
அவளே என் காதல் பாடமாக இருக்கிறாள் என்று..

Kadhal kavithai Image
Kadhal kavithai

இதையும் படிக்கலாமே
அனாதையான என் கவிதைகள் – காதல் கவிதை

ஒருவன் தன் காதலை வெளிப்படுத்தும் முன்பு வரை, அவன் தன் காதலியை பார்க்கையில் அவள் முறைப்பால். அவனுடைய மெல்லிய பார்வை கூடு அவளது முகத்தில் அனலை கக்கும். ஆனால் இதே நிலைமை தலை கீழாக மாறும், அவள் அந்த காதலை ஏற்றுக்கொண்ட பிறகு. தன் காதலன் எப்போதும் தன்னோடு இருக்க வேண்டும் என்று எண்ணுவாள்.

தன் காதலன் தன்னை தாண்டி வேறு ஒரு பெண்ணை பார்க்க கூடாது என்று நினைப்பாள். இப்படி அவள் மனதில் அவளை அறியாமல் பல கட்டுப்பாடுகள் முளைக்கும். அத்தனை கட்டுப்பாடுகளையும் தன் காதலனுக்கு போடுவாள். ஆனால் உண்மை யாதெனில் உலக அழகியே வந்தாலும் அவள் காதலனுக்கு அவள் மட்டும் தான் அழகாய் தெரிவாள். ஏன் என்றால் அவன் நேசிப்பது அவள் முகத்தை மட்டும் அல்ல அவள் அன்பையும் தான்.

Love Kavithai Image
Love Kavithai

அன்னையர் தின கவிதைகள், குழந்தை கவிதை, தமிழ் கட்டுரை, காதல் கவிதைகள் என பல தகவலைகள் இங்கு உள்ளன.