இப்படியெல்லாம் கூட உப்பை பயன்படுத்தலாம்னு நீங்க நினைச்சு கூட, பார்த்து இருக்க மாட்டிங்க. வாங்க அப்படி எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம்னு தெரிஞ்சிக்கலாம்.

- Advertisement -

நாம் சமைக்கும் உணவில் உப்பின் அளவை பொறுத்து தான் அதன் சுவையும் மணமும் இருக்கும். அதனால் தான் பெரியவர்கள் இதற்கு ஒரு பழமொழியை சொல்லி வைத்தார்கள் உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று அது நூற்றுக்கு நூறு உண்மையான விஷயமும் கூட. உப்பு சமையலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இதை விட தெளிவாக சொல்ல முடியாது. இந்த உப்பை பயன்படுத்தி அதிக அளவில் வீட்டுக் குறிப்புகள் கூட நமக்கு தெரிந்திருக்கும். துணிகளை சுத்தம் செய்வது, தரைகளை சுத்தம் செய்வது, கறைகள் இருக்கும் அனைத்து இடங்களையும் சுத்தப்படுத்த உப்பு பயன்படுகிறது. ஆனால் இந்த பதிவை படித்த பிறகு இது போன்ற விஷயங்களுக்கு கூட உப்பை பயன்படுத்தலாம் என்பதே உங்களுக்கு புது தகவலாக இருக்கும். அது என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பாவக்காய் கசப்பு தெரியாமல் இருக்க நறுக்கிய பிறகு ஒரு கிண்ணத்தில் போட்டு ஒரு ஸ்பூன் உப்பு அதில் சேர்த்து பத்து நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு எடுத்து பிழிந்து விட்டு இன்னொரு பௌலில் தண்ணீர் வைத்து அதில் போட்டு அலசி எடுத்த பிறகு சமைத்தால் கசப்பே சுத்தமாக இருக்காது. கசப்புடன் இருப்பது தான் பாவக்காய் தன்மை ஆனால் அப்படி இருந்தால் குழந்தைகள் சாப்பிடுவதில்லையே ஆகையால் இது போன்று நீங்கள் செய்த பிறகு, குழந்தைகளுக்கு சமைத்து தரலாம்.

- Advertisement -

சிலருக்கு ரசம் எப்படி வைத்தாலும் அது மணமாகவும் ருசியாகவும் இருக்காது. அதற்கு இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க. அதிகம் பேர் செய்யும் தவறு ரசம் தாளிக்க கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானவுடன் அதில் பெருங்காயம் சேர்ப்பார்கள். அதிக சூடன் இருக்கும் போது பெருங்காயம் சேர்க்கவே கூடாது. ரசத்திற்கு எல்லாம் தயார் செய்து தாளித்து முடித்த பிறகு ரசம் நுரை கட்டி வந்தவுடன் பெருங்காயத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றிய உடன் அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது பாருங்கள் உங்க ரசத்தின் வாசம் பக்கத்து வீடு வரைக்கும் வீசும்.

மசாலா அரைக்க காய்ந்த மிளகாய் வறுக்கும் போது நெடி அதிகமாக வர ஆரம்பித்து விடும். அப்படி வராமல் இருக்க வறுக்கும் போது அதில் ஒரு ஸ்பூன் உப்பை சேர்த்துக் கொண்டால் போதும் நெடியும் வராது. அதன் பிறகு நீங்கள் இந்த காய்ந்த மிளகாய் ஸ்டோர் செய்து வைப்பதாக இருந்தாலும் சீக்கிரம் கெட்டுப் போகாது.

- Advertisement -

கறி, மீன் போன்றவை வாங்கி பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைக்கும் போது அது அப்படியே இறுகி கட்டியாகி விடும். நாம் சமைப்பதற்கு அரை மணி நேரம் முன்பாவது அதை எடுத்து வெளியே வைக்க வேண்டும். சில நேரம் எடுத்து வைக்க மறந்து விட்டால் உடனடியாக சமைக்க வேண்டிய நேரத்தில் என்ன செய்வது என்று பதட்டம் ஆகி விடும். இனி அப்படி பதற வேண்டிய அவசியமே இல்லை எவ்வளவு கட்டியாக ஆகியிருந்தாலும் சரி அதன் மேல் ஒரு ஸ்பூன் உப்பை போட்டு இறுக்க மூடி விடுங்கள். ஐந்து நிமிடம் கழித்த பிறகு எடுத்தால் கட்டிகள் கரைந்து ஈசியாக எடுக்க வரும்.

இத்துடன் இன்னும் ஒரு சிறு குறிப்பு, மணி பிளான்ட் வீட்டில் வைத்து அது சரியாக வளரவில்லை என்று கவலைப்படுபவர்கள் மணி பிளான்ட் வைத்திருக்கும் பாட்டிலில் இருக்கும் தண்ணீரில் சிறிதளவு காய்ச்சாத பாலை ஊற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் செடி வளரும் வேகத்தை.

இதையும் படிக்கலாமே: இந்த விஷயம் தெரிஞ்சா, இனி இந்த டைப்பரை பெரியவங்க கூட வாங்கி வீட்ல ஸ்டோர் செஞ்சு வச்சுப்பீங்க. உங்க வீட்ல குழந்தைகள் இல்லையென்றாலும் கூட.

இந்த குறிப்புகள் அனைத்துமே நம் சமையல் அறையில் தினம் தினம் சமாளிக்கும் சவால்களை சரி செய்ய உதவியாக இருக்கும். இந்த குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

- Advertisement -