கை தவறி உப்பு கீழே கொட்டி விட்டால், தப்பி தவறி கூட இந்த ஒரு தவறை மட்டும் செய்யாதீங்க. அது குடும்பத்தில் கஷ்டத்தை தந்துவிடும்.

uppu
- Advertisement -

கை தவறி உப்பு கீழே கொட்டுவது என்பது சகஜமான ஒரு விஷயம் தான். ஆனால் உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சம் கொண்ட ஒரு பொருள் என்பதால் சாஸ்திர ரீதியாக அந்த உப்பை கையாளும்போது கவனம் இருக்க வேண்டும் என்று நமக்கு சொல்லப்பட்டுள்ளது. மகாலட்சுமி அம்சம் பொருந்திய இந்த உப்பு கைதவறி கீழே கொட்டி விட்டால் அபசகுனமா. கீழே கொட்டி விட்ட உப்பை என்ன செய்வது. இப்படி உப்பு வீட்டில் கீழே கொட்டி விட்டால் கஷ்டங்கள் எதுவும் வராமல் இருக்க என்ன பரிகாரங்கள் செய்யலாம். உப்பு கீழே கொட்டினால் பண கஷ்டம் வந்து விடுமோ இப்படி பல சந்தேகங்களுக்கு பதிலை தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.

முதலில் இப்படிப்பட்ட சம்பவங்கள் உங்களுடைய வீட்டில் நடந்து விட்டால், உடனே பயந்து நடுங்கி என்ன நடந்து விடுமோ என்று எதிர்மறையாக சிந்திக்க வேண்டாம். உப்புக்கொட்டி விட்டதா. கொட்டிய உப்பை எல்லாம் கையில் எடுத்து, தண்ணீரில் போட்டு கரைத்து விடுங்கள். கீழே கொட்டிய உப்பை எடுத்து மீண்டும் உப்பு ஜாடியில் போட்டு சமைக்க பயன்படுத்தவே கூடாது. எவ்வளவு உப்பு கீழே கொட்டினாலும் அந்த உப்பை எடுத்து ஒரு பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் போட்டு விட வேண்டும். தண்ணீர் உப்பு கரைந்த பின்பு அந்த தண்ணீரை சிங்கில் கொட்டி விடுங்கள் அவ்வளவுதான். கீழே கொட்டிய உப்பை திரும்பவும் எடுத்து சமைக்க பயன்படுத்துவது தவறான ஒரு விஷயம். அந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க.

- Advertisement -

ஆனால் மீண்டும் உப்பை கையில் எடுக்கும் போது அலட்சியமாக எடுக்கக் கூடாது. திரும்பத் திரும்ப அடிக்கடி இப்படி அலட்சியமாக உப்பை எடுத்து கீழே சிந்தக்கூடாது. சமைக்கும்போது உப்பை எடுத்தால் கூட அங்கே இங்கேயுமாக சிதறும்படி செய்யக்கூடாது. பொறுப்பு என்பது பெண்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டும். அந்த பொறுப்பை இந்த உப்பை கையாளும்போது காண்பிக்க வேண்டும்.

உப்பு நிறைய கீழே கொட்டிட்டீங்க. மனசு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. பணக்கஷ்டம் வந்து விடுமோ என்ற பயம் ஒரு பக்கம். குலதெய்வத்திற்கு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பூஜை அறையில் எப்போதும் போல விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ‘இப்படி தெரியாமல் என்னுடைய கை தவறி உப்புகீழே கொட்டி விட்டது. இதன் மூலம் மனக்கசப்பு தரும் எந்த சம்பவங்களும் எங்களுடைய குடும்பத்தில் நடக்கக்கூடாது’ என்று பிரார்த்தனை செய்து கொண்டு ஒரு கைப்பிடி கல்லுப்பை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் வையுங்கள். இதை சிறிய முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த முடிச்சை உங்கள் வீட்டின் வாயு மூளை என்று சொல்லப்படும் வட மேற்கு மூளையில் வைத்து விடுங்கள். 48 நாட்கள் அந்த உப்பு, வடமேற்கு மூலையிலேயே இருக்க வேண்டும். ஏதோ ஒரு கெட்ட சம்பவம் நம்முடைய வீட்டில் நடப்பதாக இருந்தால் அது 48 நாட்களுக்குள் தான் நடக்கும். அதற்கு மேல் உங்களுடைய வீட்டில் நடக்கும் கெட்ட சம்பவத்திற்கும், உப்பு கொட்டிய சம்பவத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. (கெட்ட சம்பவம் என்றதும் பயப்பட வேண்டாம். திடீரென்று பண கஷ்டம் வரலாம். வீட்டில் மன கசப்பு தரும் சண்டை சச்சரவுகள் வரலாம். பொருள் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அவ்வளவு தான்.)

ஆகவே 48 நாட்கள் பரிகாரத்திற்காக அந்த உப்பை அந்த மூலையில் வைத்து விடுங்கள். உப்பு கீழே கொட்டிய நாளிலிருந்து, 48 நாட்கள் கழித்து முடிச்சை கழட்டி உள்ளே இருக்கும் உப்பை தண்ணீரில் கரைத்து விடலாம். அவ்வளவு தான் பிரச்சினையே கிடையாது.

இவர்களுடைய வீட்டில் கண்ணாடி உடைந்து மூன்று மாதங்கள் ஆகி இருக்கும். மூன்று மாதங்கள் கழித்து இவர்களுடைய வீட்டில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கும். மூன்று மாதத்திற்கு முன்பு அன்று கண்ணாடி உடைந்ததால் தான் இன்றைக்கு இப்படி நடந்தது என்று எதற்கு எதையோ முடிச்சு போடுவார்கள். அப்படியெல்லாம் போட்டு மனதை குழப்பிக் கொள்ளாதீர்கள். இயற்கையாக சில விஷயங்கள் கொட்டுவதும், சில விஷயங்கள் உடைவதும் சகஜம். அதை நினைத்து எதிர்மறையாகவே நாம் சிந்தனை செய்யும் போது, நமக்கு சில கஷ்டங்கள் வரும். ஆக எதிர்மறை சிந்தனையை தள்ளி வைத்துவிட்டு நடந்த தவறுக்கு குலதெய்வத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு இனி இப்படி ஒரு தவறை நடக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. இன்று நமக்கு ஒரு விஷயம் நடக்கப் போகிறது என்றால், அந்த சம்பவத்தை இறைவன் முன்கூட்டியே நம் தலையில் எழுதி வைத்து விட்டான். இது நடக்கிறது அது நடக்கிறது என்பதன் மூலம் அது மாறப்போவது கிடையாது. எல்லாம் ஆண்டவன் செயல் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -