உளுத்தம் பருப்புல பூரி செய்ய முடியுமா? இது என்ன புது கதையா இருக்கே! ஒருமுறை உங்க வீட்ல இந்த பூரியையும் செஞ்சுதான் பாருங்களேன்.

poori1
- Advertisement -

காலம் காலமா கோதுமை மாவிலும், மைதா மாவிலும் பூரி செய்து சாப்பிட்டு இருக்கிறோம். அது என்ன உளுந்த மாவு பூரி. இதுவரைக்கும் தெரியாதே, என்பவர்கள் இந்த குறிப்பை படித்து பாருங்கள். இப்படியும் சுவையாக ஒரு வெரைட்டி பூரி செய்ய முடியும். ரெசிப்பியை படிச்சு பாருங்க. உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுத்து ரசித்து ருசித்து, பார்த்து சந்தோஷப்படுங்கள். முற்றிலும் வித்தியாசமான உளுந்து மாவு சேர்த்த மசாலா பூரி ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

4 டேபிள் ஸ்பூன் உளுந்தை தண்ணீரில் போட்டு 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். உளுந்து நன்றாக ஊறியதும், தண்ணீரை முழுவதும் வடிகட்டி விட்டு மிக்ஸி ஜாரில் போடவும். இந்த உளுந்தோடு பச்சை மிளகாய் 2, சீரகம் 1/2 ஸ்பூன், மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்‌, உப்பு 1/4 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன், போட்டு இந்த உளுந்தை விழுதாக அரைக்க வேண்டும். தேவைப்பட்டால் இரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும். ரொம்பவும் தண்ணியாக அரைக்க வேண்டாம். நைசாக அரைத்த இந்த உளுந்து அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்து ஒரு அகலமான பவுலில் 2 கப் அளவு கோதுமை மாவு சேர்த்து, அரைத்த இந்த உளுந்து விழுதையும் சேர்த்து, ரவை 1 டேபிள் ஸ்பூன், கஸ்தூரி மேத்தி 1/2 ஸ்பூன், ஓமம் 1/2 ஸ்பூன், சேர்த்து தேவைப்பட்டால் மாவுக்கு உப்பு போட்டு எல்லா பொருட்களையும் நன்றாக பிசைந்து விடுங்கள். ஏற்கனவே உளுந்து மாவில் உப்பு சேர்த்து இருக்கிறோம். இந்த கோதுமை மாவுக்கு மட்டும் பார்த்து உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

நாம் அறைத்த உளுந்திலும் தண்ணீர் இருக்கிறது. ஆகவே மாவை முதலில் நன்றாக பிசைந்து விட்டு கொஞ்சமாக தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து இந்த மாவை கொஞ்சம் கட்டியாக பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி மாவை விட, பூரி மாவு கொஞ்சம் கட்டியாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதுதான் எண்ணெய் குடிக்காமல் பூரி உப்பலாக கிடைக்கும்.

- Advertisement -

பிசைந்த இந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி எப்போதும் போல மாவு தொட்டு பூரி போல திரட்டிக் கொள்ளுங்கள். சுடச்சுட இருக்கும் எண்ணெயில் இந்த பூரியை போட்டு பொறித்து எடுத்தால் சூப்பரான சுவையில் பூரி தயார். வழக்கம் போல இதற்கு வெஜிடபிள் கிரேவி, மசாலா, சாம்பார், சட்னி எதை வேண்டும் என்றாலும் சைடிஷ் ஆக பரிமாறலாம்.

இதையும் படிக்கலாமே: ரவை உப்புமாவை ஒரு முறை இப்படி ஹோட்டல் ஸ்டைலில் ஃபர்பெக்ட்டா செஞ்சு பாருங்க. உப்புமானாலே தல தெரிக்க ஓடுறவங்க கூட உப்புமான்னா இப்படித் தான் இருக்கணும்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க

இந்த பூரி ஆறிய பிறகும் அமுங்காமல் புசுபுசுவென அப்படியே இருக்கும். சாப்பிடுவதற்கும் நல்ல சுவையாக இருக்கும். வித்தியாசமான முறையில் ஏதாவது ரெசிபி செய்யணும் அதுவும் சுலபமாக செய்யணும் என்றால் இதை முயற்சி செய்து பார்க்கலாம். உங்க வீட்டு குழந்தைகளுக்கு இதை வெறுமனே கொடுத்தால் கூட அப்படியே சாப்பிட்டு விடுவார்கள். ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -