உறை மோர் இல்லாமலே பாலை தயிராக்க முடியுமா? இந்த ஐடியாவை தெரிஞ்சுக்க உங்களுக்கும் ஆசையா இருக்கா? உங்களுக்கான டிப்ஸ் தான் இது.

- Advertisement -

பாலை தயிராக்க வேண்டும் என்றாலே அது உறை ஊற்றி தான் செய்ய வேண்டும் என்பது தான் நமக்கு காலம் காலமாக தெரிந்த விஷயம். பல நேரங்களில் காலையில் காய்ச்சிய பால் மீந்து விடும். இரவு படுக்கும் போது அதை உரை ஊற்றலாம் என்று நினைக்கும் வேளையில் உறை மோர் இருக்காது. அந்த நேரத்திற்கு மேல் எங்கும் உறை மோர் கடனும் வாங்க முடியாது கடைகளுக்கு செல்லவும் நேரம் இருக்காது. ஆனால் இனி அந்த கவலையே இல்லை. உறை மோர் ஊற்றாமலே நம் வீட்டில் இருக்கும் ஒன்று இரண்டு பொருட்களைப் பயன்படுத்தி பாலை தயிராக்கி விடலாம். இனி அவசரத்திற்கு உறைய வைக்க வேண்டும் எனும் போது உறை மோர் இல்லையே என்ற கவலையே நமக்கு இருக்காது.

இப்போதெல்லாம் பாலை உறை ஊற்ற பல வழிமுறைகள் வந்து விட்டது. அரை மணி நேரத்திலே கூட பாலை தயிராக்கலாம். தண்ணீராக உள்ள பாலை கூட, கட்டி தயிராக மாற்றலாம். இப்படி பாலை தயிர் ஆக்க பல வழிகள் வந்துவிட்டது. ஆனால் உறை ஊற்றாமல் பாலை தயிராக்கலாம் என்ற தகவல் கொஞ்சம் அல்ல அதிகமாகவே ஆச்சரியத்தை தான் கொடுக்கிறது.

- Advertisement -

முதல் செய்முறை: நன்றாக காய்ச்சி ஆற வைத்த பாலில் இரண்டு பச்சை மிளகாய் காம்பு நீக்காமல் அப்படியே போட்டு விடுங்கள். அடுத்த நாள் பார்க்கும் போது தயிர் நன்றாக உறைந்திருக்கும். இதே முறையில் காய்ந்த மிளகாய் போட்டும் செய்யலாம் ஆனால் பச்சை மிளகாய் அளவுக்கு தயிர் கெட்டியாக இருக்காது. அதே போல் ஒரு துண்டு இஞ்சி எடுத்து நன்றாக தோல் சீவி அலசி அதையும் இது போல் காய்ச்சிய பாலில் போட்டு வைத்தால் போதும் உறை ஊற்ற வேண்டிய அவசியமே இல்லை. இந்த முறையிலும் பால் நன்றாக உறைந்து இருக்கும்.

இதே போல் அரை லிட்டர் பாலுக்கு, அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து விடலாம். ஆனால் அதற்கு பால் மிதமான சூட்டை விடவும் சற்று சூடு கம்மியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் பால் திரிந்து விடும்.

- Advertisement -

இதே போல் ஒரு ரூபாய் நாணயம் அதாவது சில்வர் புது நாணயம் போல் அந்த ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு வைத்தாலும் தயிர் உறைந்திடும். வெள்ளி காயின் போட்டும் பாலை உறைய வைக்கலாம். ஆனால் உறை ஊற்ற இவ்வளவு செலவு தேவை இல்லை. இதிலும் செய்யலாம் என்று தெரிந்து கொள்ளத்தான் இந்த தகவல்.

சாதாரணமாக தயிர் உறைய வைக்கும் போது எட்டு மணி நேரம் உறைய வைத்தாலே போதும். ஆனால் இந்த முறைகளில் உறைய வைத்தால் பன்னிரண்டு மணி நேரம் உறைய விட வேண்டும். அப்போது தான் கெட்டியான தயிர் கிடைக்கும். அது மட்டும் இன்றி பால் ஓரளவு மிதமான சூட்டில் இருக்கும் போதே மேல் சொன்ன குறிப்புகளை பின்பற்றி உறை போட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: 10 நிமிடத்தில் முட்டைகோஸ் கூட்டு இவ்வளவு சுவையாக ஹோட்டல் ஸ்டைலில் நம் வீட்டிலேயே செய்யலாமா? இது தெரிஞ்சா இனி முட்டைக்கோஸ் அடிக்கடி வாங்குவீங்க!

பாலை தயிராக்க இத்தனை சுலபமான வழிகள் இருக்கும் போது இனி உறை மோர் பற்றிய கவலை எதுக்கு.

- Advertisement -