இந்த சின்ன சின்ன குறிப்புகள் உங்கள் சமையலறையை அழகாக மாற்றும். இதனைத் தெரிந்து கொண்டால் நீங்களும் அசந்து போவீர்கள்

poori
- Advertisement -

சமையலறை என்பது பெண்களின் தனிப்பட்ட உலகமாகும். ஏனென்றால் காலை முதல் இரவு வரை அதிக நேரம் பெண்கள் இருப்பது சமையல் அறையில் தான். சமையல் அறையில் எந்த பொருள் எந்த இடத்தில் இருக்கின்றது என்று வீட்டில் உள்ள பெண்களுக்கு மட்டும் தான் தெரியும். அவர்கள் ஒரு நாள் வீட்டில் இல்லை என்றாலும் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு சமையலறை என்பது வேற்றுகிரகமாக தான் தெரியும். இவ்வாறு வீட்டின் மிகவும் முக்கியமான இடமான சமையலறையில் நாம் சமைக்கும் பொழுதும் சரி, சமையலறையை சுத்தம் செய்யும் பொழுதும் இந்த சின்ன சின்ன குறிப்புகளை சரியாக பயன்படுத்தினால் வேலையும் மிச்சமாகும், சமையலறையும் சுத்தமாகும். வாருங்கள் இந்த பயனுள்ள குறிப்புகளை இந்த பதிவின் மூலம் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: 1
காராமணி, வெள்ளை கடலை, கருப்பு கடலை இவை அனைத்தையும் குழம்பு வைப்பதற்காக வீட்டில் வைத்திருப்போம். இவற்றை சமைப்பதற்கு முன்னர் 8 மணி நேரமாவது தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும். ஆனால் இந்த பயிறு வகைகளை ஊறவைக்க மறந்து விட்டால், உடனே அதனை சமைப்பது என்பது முடியாத காரியமாகிவிடும். ஆனால்,

- Advertisement -

ஒரு குக்கரில் கடலையை எடுத்துக்கொண்டு, அதில் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒன்றரை மடங்கு தண்ணீரை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனை நன்றாக கொதிக்கவைத்து, கடலையுடன் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை மூடி, விசில் போட்டு, ஒன்றரை மணி நேரம் ஊற வைத்தால், கடலை 8 மணி நேரம் ஊறியது போன்று மாறிவிடும். பின்னர் சமைத்துக் கொள்ளலாம்.

குறிப்பு: 2
எப்பொழுதும் பூரி செய்யும் பொழுது பூரி உப்பளாகவும், சாஃப்ட்டாகவும் இருந்தால் மட்டும் தான் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். ஆனால் பலர் செய்யும் பூரி இவ்வாறு இருப்பதில்லை. நாம் நினைத்தவாறு பூரி வருவதற்கு மாவு பிசையும் பொழுது அதனுடன் உப்பு அரை ஸ்பூன், சர்க்கரை அரை ஸ்பூன் மற்றும் ஒரு ஸ்பூன் ரவை சேர்த்து பிசைய வேண்டும். அது மட்டுமல்லாமல் சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் கொஞ்சம் லூசாக இல்லாமல் டைட்டாக மாவு பிசைய வேண்டும்.

- Advertisement -

குறிப்பு: 3
குழம்பு வைக்க புளிக்கரைசல் தேவைப்பட்டால் அதற்கு புளியை முன்னரே தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும். ஆனால் இவ்வாறு ஊறவைக்க மறந்து விட்டால் புளிக்கரைசல் எடுப்பதற்கு, சிறிதளவு புளியில் கொட்டைகள் எடுத்து விட்டு, மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அரைத்துக் கொண்டு வடிகட்டி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது திக்கான புளிக்கரைசல் கிடைக்கும். அவசர நேரத்தில் இப்படி பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பு: 4
காபி பொடி மற்றும் ஊறுகாய் பாட்டில் இவற்றை பயன்படுத்திய பிறகு தூக்கி எறியாமல் சமையல் பொருட்கள் போட்டுவைக்க பயன்படுத்திக் கொள்வோம். ஆனால் அந்த பாடல்களின் மீது ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர் பசை பிசுபிசுப்பாக இருக்கும். இதனை சுத்தம் செய்வதற்கு ஒரு சிறிய துணியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அந்தத் துணியை வைத்து பாட்டிலை சுத்தமாக துடைத்து விட்டால் பிசுபிசுப்பு கொஞ்சம் கூட இருக்காது.

- Advertisement -