அட இதனைத் தெரிந்து கொண்டால் இதுவரை இவ்வளவு ஈஸியான டிப்ஸ்கள் தெரியாமல் போயிற்றே என்று வருத்தப் படுவீர்கள்

ginger
- Advertisement -

சமையல் குறிப்புகள் என்பது மிகவும் சிரமப்பட்டு தேடி கண்டுபிடிக்கும் புதையல் ஒன்றும் கிடையாது. நமது அனுபவத்தின் மூலமாக நாம் கற்றுக் கொள்ளும் சிறு சிறு விஷயங்கள் தான். அவ்வாறு சமையலறையில் வேலையை சுலபமாக்கவும், சமயலின் சுவையை கூட்டவும், சமைக்கும் பொருட்கள் வீணாகாமல் தவிர்க்கவும் இந்த எளிய குறிப்புகளை தெரிந்து வைத்துக்கொண்டால் போதும். அவ்வாறு உங்களுக்கு பயனுள்ள 5 எளிய வீட்டு குறிப்புகள் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

samayal

குறிப்பு: 1
அசைவம்சமைக்ககும் பொழுது அதில் இரத்தவாடை அதிகமாக இருக்கும். அதிலும் இறால், மீன் போன்ற அசைவ உணவுகளை என்ன தான் சுத்தமாக கழுவினாலும் அவற்றில் கவுச்சி வாசனை என்பது அதிகமாக இருந்துகொண்டுதான் இருக்கும். இவ்வாறு இந்த வாசனை வராமல் இருக்க அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவிவிட்டு, அரிசி கழுவிய தண்ணீரில் 10 நிமிடம் இவற்றை ஊற வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் இவற்றில் கவுச்சி வாசனை சற்றும் இல்லாமல் போய்விடும்.

- Advertisement -

குறிப்பு: 2
முட்டை வேகவைத்து அதனை உரிக்கும் பொழுது ஒரு சில சமயம் முட்டை சரியாக வேகாமல் இருந்தால் தோலுடன் சேர்ந்து சதை பகுதியும் பிய்ந்து வரும். இவ்வாறு சதைப்பகுதி தோலுடன் ஒட்டிக் கொண்டு வராமல் இருக்க அடுப்பை பற்ற வைத்து சிம்மில் வைத்துக் கொண்டு, அதன் மீது இந்த முட்டையை 5 செகண்ட் சூடு காட்டி, பிறகு தண்ணீர் இருக்கும் பாத்திரத்தில் போட வேண்டும். அதன்பின் முட்டையின் தோலை உரிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது முட்டையின்தோலல் அழகாக உரிந்து வரும்.

egg

குறிப்பு: 3
இஞ்சி பூண்டு விழுதை அதிகமாக அரைத்து ஸ்டோர் செய்து வைக்கும் பொழுது அவை சீக்கிரத்தில் கலர் மாறிவிடும். இவ்வாறு ஆகாமல் இருக்க ஒரு ஸ்பூன் எலுமிச்சைச்சாறறை இஞ்சி பூண்டு விழுதுடன் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொண்டால் அவை வெகு நாட்களுக்கு ஃப்ரஷ்ஷாக அப்படியே இருக்கும்.

- Advertisement -

குறிப்பு: 4
வீட்டில் சுடுதண்ணி அல்லது டீ இவை அதிக நேரம் சூடாக இருப்பதற்காக ஃபிளாஸ்க்கில் ஊற்றி வைப்போம். இந்த ஃபிளாஸ்கை எவ்வளவு சுத்தமாக கழுவினாலும் அதன் உள் பகுதியில் சற்று வழவழப்பாக இருக்கும். இதனை நமது விரல்களை வைத்து சரியாக சுத்தம் செய்ய முடியாது. எனவே இந்த ஃபிளாஸ்கில் இரண்டு ஸ்பூன் அரிசி அல்லது கல் உப்பை சேர்த்து அதனுடன் சிறிதளவு டிஷ் வாஷ் லிக்விட் சேர்த்து நன்றாக குலுக்கி விட்டு அதன் பிறகு சுத்தமாக கழுவினால் அந்த வழுவழுப்பு அனைத்தும் நன்றாக சுத்தமாகிவிடும்.

fish

குறிப்பு: 5
அசைவ உணவுகளை சுத்தம் செய்து சமைத்து விட்ட பிறகும் நமது கைகளில் அந்த வாசனை அப்படியே இருக்கும். சிலருக்கு இவ்வாறு இருப்பது என்பது பிடிக்கவே பிடிக்காது. என்னதான் சோப்பு போட்டுக் கழுவினாலும் இந்த வாசனை கைகளை விட்டு போகாது. இந்த வாசனை கையை விட்டுப் போக நாம் பல் துலக்கப் பயன்படுத்தும் பேஸ்ட்டை சிறிதளவு எடுத்துக் கொண்டு கையில் தடவி நன்றாக கழுவிக் கொண்டால் போதும். அந்த வாசனை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

- Advertisement -