வீட்டிற்கு தேவையான அற்புதமான 8 குறிப்புகள்! வீடு மட்டுமல்ல சமையல், துணிமணிகள் கூட இப்படி பண்ணா ஈஸியா சுத்தமாகிடுமே!

flower-poori-cloth
- Advertisement -

சின்ன சின்ன வீட்டு குறிப்புகள் மற்றும் சமையல் குறிப்புகளை தெரிந்து வைத்திருந்தால் நமக்கு அவசர ஆபத்திற்கு நேரம் நிச்சயம் மிச்சமாகும். இந்த விஷயங்கள் எல்லாம் மனதில் போட்டு வைத்துக் கொண்டால், உங்களுக்கு ரொம்பவே உபயோகமாக இருக்கும். அத்தகைய அற்புதமான குறிப்புகளில் வீட்டு மற்றும் சமையல் குறிப்புகளும் அடங்கும். வீட்டின் கதவு ஜன்னல் முதல் சமையலறை வரை எல்லா இடமும் சுத்தமாக என்ன செய்யலாம்? என்பதை சிறு சிறு குறிப்புகளாக இதில் பார்ப்போம்.

குறிப்பு 1:
வீட்டில் பூ வாங்கினால் அதை அடைக்க காற்று புகாத கண்டெய்னர் பாக்சில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் சிறிது நாட்கள் வரை அழுகி போகாமல் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் அதை திறந்த நிலையில் வைத்தால் பிரிட்ஜில் இருக்கும் மொத்த பொருட்களும் பூ வாசம் வீசத் துவங்கிடும். இந்த வகையில் ஜாதிமல்லி வாங்கினால் நீங்கள் என்னதான் ஃப்ரிட்ஜில் இப்படி வைத்தாலும் அதன் நிறம் மறுநாளே மாறிவிடும் எனவே ஒரு நியூஸ் பேப்பர் அல்லது ஏதாவது ஒரு டிஷ்யூ பேப்பரை கொண்டு ஜாதி மல்லியை மெதுவாக ஈரப்பதம் இல்லாமல் கட்டி வைத்தால் அப்படியே வாடாமல் இரண்டு நாட்கள் வரை இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
துணிமணிகளில் நீங்காத மஞ்சள் கறை சில சமயங்களில் ஏற்பட்டு விடுவது உண்டு. இது போன்ற மஞ்சள் சார்ந்த கறைகள் விடாபடியாக உங்களுடைய துணிமணியில் இருந்தால் அதை நீக்குவதற்கு கொஞ்சம் எலுமிச்சை சாற்றை அதில் தேய்த்துக் கொள்ளுங்கள். பத்து நிமிடம் ஊறவிட்டு நன்கு சோப்பு போட்டு தேய்த்தால் போதும், மஞ்சள் கறை போயே போய்விடும். நாள்பட்ட கறைக்கு அரை மணி நேரம் ஊற வைத்து தேய்த்து பாருங்கள், நல்ல பலன் கிடைக்கும்.

குறிப்பு 3:
துணி துவைக்கும் பொழுது வெள்ளை துணிகள் வெளுக்க, நன்கு பளபளப்புடன் இருக்க சிறிதளவு டேபிள் சால்ட் பயன்படுத்தி பாருங்கள். கொஞ்சம் போல் தூள் உப்பை போட்டு அந்த தண்ணீரில் நீங்கள் வெள்ளை துணிமணிகளை துவைக்கும் பொழுது பளீரென மின்னல் போல பளிச்சிடுவதை காண முடியும்.

- Advertisement -

குறிப்பு 4:
பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை தோல் உரிக்க சிரமப்படுபவர்கள் சிறிது நேரம் அதை தண்ணீரில் ஊற வைத்து பின்னர் உரித்துப் பாருங்கள், எவ்வளவு சுலபமாக வரும் என்று!

குறிப்பு 5:
இட்லி, தோசைக்கு மாவு அரைப்பவர்கள் அதனுடன் ஒரு வெண்டைக்காயை மட்டும் சேர்த்து அரைத்து பாருங்கள் இட்லி, தோசை எது சுட்டாலும் பஞ்சு போல மெத்தென்று வரும். கொஞ்சம் கூட காய்ந்து போகாமல், ஹார்டாக இல்லாமல் சாஃப்ட் ஆக இட்லி, தோசை வருவதற்கு இந்த டிப்ஸ் உபயோகமாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 6:
பொதுவாக சப்பாத்திக்கு கோதுமை மாவை பிசையும் பொழுது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை நன்கு மாவை ஊறவிட்டு அதன் பிறகு நீங்கள் சப்பாத்தி செய்யும் பொழுது சப்பாத்தி சாப்டாக வரும். அதுபோல ஒரு வாழைப்பழத்தை சேர்த்து சப்பாத்தி சுட்டுப் பாருங்கள், சப்பாத்தி மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். ஆனால் பூரிக்கு அப்படி அல்ல, பூரி செய்த உடனேயே நீங்கள் சுட்டு சாப்பிட்டால் தான் சாப்டாக புஸ் என்று மேலே சூப்பராக உப்பி வரும்.

குறிப்பு 7:
பண்டிகை அல்லது சாதாரண சமயங்களில் சீடை தயாரிக்கும் பொழுது ரொம்பவும் அழுத்தம் கொடுக்காமல் மேலோட்டமாக தேய்த்து நீங்கள் தயாரித்துப் பாருங்கள். சீடை எண்ணெயில் போட்டு எடுக்கும் பொழுது கொஞ்சம் கூட வெடிக்காமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
உறை மோர் இல்லாமலே பாலை தயிராக்க முடியுமா? இந்த ஐடியாவை தெரிஞ்சுக்க உங்களுக்கும் ஆசையா இருக்கா? உங்களுக்கான டிப்ஸ் தான் இது.

குறிப்பு 8:
ஜன்னல், கதவுகள் பளிச்சென்று இருக்க சிறிதளவு சமையல் சோடாவுடன், எலுமிச்சை சாறு கலந்து ஈர துணியில் நனைத்து துடைத்து பாருங்கள். தூசுகள், அழுக்குகள் எல்லாம் நீங்கி கண்ணாடி மற்றும் மர கதவுகள் அனைத்தும் பளிச்சிடும்.

- Advertisement -