மலை போல குவிந்து கிடக்கும் வேலைகளை கூட பத்து நிமிடத்தில் முடித்து விட்டு, உங்களுக்குப் பிடித்த விஷயங்களுக்காக உங்கள் நேரத்தை செலவு செய்ய இதை விட ஒரு சூப்பர் ஐடியா இருக்கவே முடியாது.

- Advertisement -

வீட்டு வேலைகளை சுலபமாக என்ன தான் மிக்சி கிரைண்டர் வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் எல்லாம் வந்து விட்டாலும், அவற்றையெல்லாம் சரியாக செய்யவும் சரியாக பராமரிக்கவும் ஒரு ஆள் தேவைதானே அந்த வகையில் சமையல் அறையிலும் அப்படித்தான் என்னதான் இந்த காலகட்டத்தில் சமையல் வேலைக்கு வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக் கொண்டாலும் நாம் பார்த்து செய்து வேண்டி வேலைகளை நாம் தான் செய்ய வேண்டும் அப்படி செய்ய வேண்டிய வேலைகளை ஈசியாக கொஞ்சம் யோசித்து செய்தால் இன்னமும் கூட பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தி கொள்ளலாம் அதுபோல சில பயனுள்ள குறிப்புகளை தான் இப்போது இந்த பதிவில் நான் தெரிந்து கொள்ள போகிறோம்.

வெங்காயம் பூண்டு தோல் உரிப்பது என்றால் அனைவருக்குமே அது கொஞ்சம் கடுப்பான வேலை தான் அதிலும் இந்த சின்ன வெங்காயம் உரிப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும் அதற்கு சுலபமான ஒரு வழி இருக்கிறது உங்கள் வீட்டில் உள்ள இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்த பிறகு ஸ்டீமர் இருந்தால் அதை வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் இட்லி தட்டின் மேலே பூண்டையும் வெங்காயமும் வைத்து தட்டு போட்டு மூடி விடுங்கள் இரண்டு நிமிடம் விட்டால் போதும் அதற்கு மேல் விடக்கூடாது இவை வெந்து விடும் .அவ்வளவு தான் இப்போது எடுத்து உறித்து பாருங்கள். இனி பூண்டை யும், வெங்காயத்தையும் மலை போல குவித்து வைத்தால் கூட இந்த முறையை பயன்படுத்தி சட்டு என்று உறித்து விடலாம்.

- Advertisement -

இந்த வெங்காயம் பூண்டு உரிப்பது எவ்வளவு கடினமோ அதே அளவுக்கு தான் இந்த கீரை உறுவுவதும். கீரை, புதினா போன்றவை உறுவுவது கொஞ்சம் கஷ்டமான காரியம் தான். அதிலும் முருங்கைக்கீரை கேட்க வேண்டாம் அதற்கு இந்த எளிய டிப்ஸ் பாலோ பண்ணுங்க. உங்கள் வீட்டில் ஜல்லி கரண்டி இருந்தால் போதும் அதில் முருங்கை கீரையில் தண்டு பகுதி அடியில் வருமாறு சொருகி விட்டு கீழே தண்டு பகுதி பிடித்து இழுத்தால் மேலே உள்ள இலைகள் அப்படியே கரண்டியில் தங்கி விடும். இதற்கு ஜல்லி கரண்டி,சாதம் வடிச்சட்டி இப்படி எது இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கீரை புதினா சுத்தம் செய்வது எல்லாம் இனி உங்களுக்கு ஒரு வேலையே இல்லை என்பது போல் ஆகிவிடும்.

அதே போல் தான் இந்த கோசும் சாதாரணமாக பொரியல் கூட்டு க்கு நறுக்குவதை நறுக்கி விடலாம். ஆனால் பிரைட் ரைஸ்க்கு அதை மெலிதாக நீளமாக நறுக்க வேண்டும் என்றால் நம்முடைய சாதாரண கத்தி அருவாமனையில் அப்படி நறுக்க வராது . ஆனால் கடைகளில் பார்த்தால் அதையே அத்தனை அழகாக நறுக்கி இருப்பார்கள். அதற்கு ஒரு எளிய டிப்ஸ் உங்கள் வீட்டில் காய் தோல் உரிக்கும் பீலர் இருந்தால் அதை வைத்து இந்த கோசை நறுக்கி பாருங்கள் அவ்வளவு மெலிதாக நீளமாக கோஸ் கிடைக்கும்.

- Advertisement -

காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கும் போது முன்பை எடுத்து அதை கிள்ளி வைத்துக் கொள்ள மறந்து விடுவோம். எண்ணெய் காய்ந்த பிறகு தான் காய்ந்த மிளகாய் தேடுவோம் அந்த நேரத்தில் எடுத்து அதை கிள்ளி போடுவதற்குள் எண்ணெய் காய்ந்து விடும். காய்ந்த மிளகாய் போட்ட வுடன் சூட்டில் கருகி விடும். இதை சமாளிக்க நீங்கள் தாளிப்பதற்கு என்று எடுத்து வைக்கும் காய்ந்த மிளகாய் அந்த டப்பாவில் போடும் போது சின்னச் சின்னதாக நறுக்கி போட்டு விடுங்கள் எப்போது எடுத்தாலும் ஈசியாக வேலை முடிந்து விடும்.

வதக்கி அரைக்கும் சட்டினி குழம்பு இவற்றிற்கெல்லாம் வதக்கிய பிறகு அதை ஆற வைக்க ஒரு பத்து நிமிடம் ஆவது வைக்க வேண்டும். அவசர நேரத்தில் செய்யும்போது இதற்கெல்லாம் நேரம் இருக்காது அப்படியே போட்டால் ஜார், மிக்ஸி எல்லாம் வீணாகி விடும். சில நேரங்களில் தெறித்து ஐந்து நிமிட வேலையை ஒரு மணி நேர வேலையாக கூடி விடும். இந்த டென்ஷனை சமாளிக்க எவ்வளவு சூடாக இருந்தாலும் அதை அப்படியே போட்டு விட்டு ரெண்டே ரெண்டு ஐஸ்கியூப் மட்டும் அதில் சேர்த்து அரைத்து விடுங்கள் போதும். இதனால் பொருளின் ருசி எதுவும் மாறிவிடாது உங்கள் மிக்சி ஜாரும் சூடாகி விடாமல் இருக்கும்.

இந்த சின்ன சின்ன குறிப்புகள் தான் உங்களின் வேலை நேரத்தை அதிகமாக்கி விடும். ஏற்னக குறிப்புகளை நீங்கள் தெரிந்து வைத்து கொண்டால் இனி நீங்கள் கிச்சனில் அதிக நேரம் செலவிட தேவை இல்லை.

- Advertisement -