இனி தேங்காய் பால் எடுக்கும் போது திக்க வரணும்னா, அதுல இந்த பொருளை மட்டும் சேர்த்துக்கோங்க போதும். அப்புறம் பாருங்க தேங்காய் பால் நல்லா கிரீம் மில்க் மாதிரி திக்கா இருக்கும்.

- Advertisement -

சமையல் வேலையை செய்யும் போது அதில் இந்த சின்ன சின்ன நுணுக்கங்களை தெரிந்து வைத்துக் கொண்டால் போதும். நாள் முழுவதும் சமையலறையில் இருக்காமல் சட்டு என்று வேலை முடிப்பதுடன் நிறைய பணமும் நேரமும் நமக்கு மிச்சம் ஆகும். இவை எல்லாவற்றையும் விட விட முக்கியம் சமைக்கும் போது டென்ஷன் ஆகாமல் சமைப்பது. இந்த வீட்டு குறிப்பு பதிவிலுள்ள இந்த சின்ன சின்ன குறிப்புகள் உங்கள் சமையலில் பெரிய அளவில் உதவி புரியும் வாங்க அது என்னவென்று பார்க்கலாம்.

தேங்காய் பாலை பொருத்த வரையில் முதல் பால் எடுக்கும் போது நன்றாக திக்காக வரும். அதற்கு அடுத்தடுத்து பால் எடுக்கும் போது அந்த அளவிற்கு திக்காக இருக்காது. இனி நீங்கள் எடுக்கும் மூன்று பாலும் திக்காக வர முதலில் தேங்காய் துருவலை அரைக்கும் போதே ஒரு ஸ்பூன் அரிசி மாவை கலந்து கொள்ளுங்கள். அரிசி மாவு இல்லை என்றால் வீட்டில் பச்சரிசி இருந்தால் தேங்காய் அரைக்க கால் மணி நேரத்திற்கு முன்பாக அரிசியை ஊற வைத்து தேங்காயுடன் சேர்த்து அரைத்து பாருங்கள். பால் திக்காக வருவதுடன் இதை சேர்த்து செய்யும் சமையலும் நல்ல ருசியாகவே இருக்கும்.

- Advertisement -

அதே போல் குக்கரில் பருப்பு சேர்த்து பிறகு பொங்கி வராமல் இருக்கவும் அதே நேரத்தில் சீக்கிரம் குழைய வேகவும் கொஞ்சம் விளக்கெண்ணையை அதில் சேர்த்த பிறகு வேகவைத்து எடுத்தால் போதும் சட்டென்று பருப்பு வெந்து விடும். சமையலில் ருசியும் சற்று கூடுதலாகவே இருக்கும்.

வீட்டில் மளிகை பொருட்களை ஸ்டோர் செய்து வைக்கும் போது பருப்பு போன்றவற்றை லேசாக வறுத்து வைக்க நேரமிருந்தால் வறுத்து வைத்து விடுங்கள். இப்படி செய்யும் போது ஆறு மாதம் ஆனாலும் பருப்பு கெட்டுப் போகாமல் பூச்சி வண்டு எதுவும் வைக்காமல் இருக்கும். அதை செய்ய நேரமில்லாத பட்சத்தில் ஒரு துண்டு தேங்காயை ஓடு அதில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதே போல் மிளகாய் தூளில் கொஞ்சம் நாள் ஆனால் கட்டி கட்டியாக மாறி அதில் நூல் போல் படிந்து வரும். இதனால் தூளின் ருசியும் மாறி விடும் .இப்படி ஆகாமல் இருக்க மிளகாய் தூளை கொட்டும் முன்பு அடியில் இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து பாதி அளவில் கொட்டிய பிறகு மறுபடியும் இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து தோலை கொட்டி வைத்து விடுங்கள். எவ்வளவு நாளாக ஆனாலும் தோல் புதிதாக அரைத்தது போலவே இருக்கும்.

சமைக்கும் போது குழம்பில் உப்பு போட்டு விட்டோமா என்பதில் சில நேரம் நாம் குழம்பி விடுவோம். இனி அப்படி ஆகாமல் இருக்க ஒரு சூப்பர் ஐடியா இருக்கு அதாவது குழம்பு கொதிக்கும் போது நுரை வந்த பிறகு ஓரங்களில் கொதித்தால் உப்பு போடவில்லை என்று அர்த்தம் ஒருவேளை குழம்பு நடுவில் கொதித்தால் உப்பு இருக்கிறது. விரத நேரங்களில் சமைக்கும் போது இந்த குறிப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

- Advertisement -

மீன் குழம்பு காரக்குழம்பு போன்றவை வைக்கும் போது அதில் புளி அதிகமாகி விட்டால் மறுபடியும் அதில் காரம் சேர்க்கும் போது திரும்பவும் கொதிக்க வைக்க வேண்டும். தேங்காய் பாலும் சேர்க்கலாம் அந்த குழம்பின் தன்மை வேறு மாதிரி இருக்கும். இப்படி எல்லாம் செய்யாமல் புளி அதிகமாகி விட்டால் ஒரு சின்ன துண்டு வெல்லம் சேர்த்து விட்டால் போதும் குழம்பு நீங்கள் எதிர்பார்த்ததை விட இன்னும் அதிக ருசியாகவே கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: இனி பாத்ரூமில் உப்பு கறை சீக்கிரமாக படியவே படியாது. ஒரே ஒருமுறை இந்த பொடியை போட்டு தேய்த்து சுத்தம் செய்து விடுங்கள். அது என்ன பொடி உங்களுக்கும் தெரிந்து கொள்ள ஆர்வமா இருக்கா?

அதே போல் பனிக்காலங்களில் தேங்காய் எண்ணெய் கட்டி போய் விடும் அவசரத்திற்கு எடுத்து பயன்படுத்த முடியாது. இதை தவிர்க்க தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் விளக்கெண்ணெய் கலந்து வைத்து விட்டால் போதும் தேங்காய் எண்ணெய் கெட்டி படாது. இந்த சின்ன சின்ன குறிப்புகளை எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டால் உங்கள் வீட்டு சமையலறையில் சமைக்கும் நேரத்தில் ஏற்படும் டென்ஷன் கடை பாதிக்கு மேல் குறையும்.

- Advertisement -