உங்கள் சமையலறையை சுத்தமாக வைத்துக்கொள்ள அருமையான ஐந்து வீட்டு குறிப்புகள்

kitchen-tips
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை என்பது மிகவும் முக்கியமான இடமாக பார்க்கப்படுகிறது. பெண்கள் காலை முதல் இரவு வரை அதிக நேரம் செலவிடும் இடம் என்றால் அது சமையலறை மட்டும் தான். காலையில் டீ போடுவது முதல் இரவு உணவு சமைக்கும் வரை ஒருநாளில் பாதி நேரத்திற்க்கு மேல் பெண்கள் சமையலறையில் தான் இருக்கின்றனர். இப்படி மிகவும் முக்கியமான இடமான சமையல் அறை சுத்தமாக இருந்தால் மட்டும்தான் நினைத்த நேரத்தில் சுவையான சமையல் செய்ய முடியும். சமையலறையில் அடிக்கடி நாம் எல்லோரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை என்னவென்றால் சில பொருட்கள் அதிக நாட்கள் வைத்திருந்தால் அவை வீணாகிவிடும். அவற்றை தூக்கி எறிவது மட்டுமே ஒரே வழியாக இருக்கும். ஆனால் இவற்றை எப்படி வீணாகாமல் பராமரிக்க வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

 

- Advertisement -

kitchen1

குறிப்பு: 1
எல்லோர் வீட்டிலும் மழை காலம் வந்தவுடன் உப்பு டப்பாவில் கொட்டி வைக்கப்படும் உப்பு தண்ணீர்விட்டு காணப்படும். இதனை தவிர்ப்பதற்காக உப்பு டப்பாவை சுத்தம் செய்து, காய வைத்து, அதன் உட்பகுதியில் ஒரு டிஷ்யூ பேப்பர் போட்டுவிட்டு, அதன் மீது உப்பைக் கொட்டி, கொட்டாங்குச்சியை உடைத்து சிறிய துண்டுகளாக எடுத்துக்கொண்டு, அதில் இரண்டு துண்டை உப்பினுள் போட்டு வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உப்புத்தண்ணீர் கொர்க்காமல் இருக்கும்.

குறிப்பு: 2
இப்பொழுது எல்லாம் அனைவரின் வீட்டிலும் காலை மற்றும் இரவு வேளையில் இட்லி அல்லது தோசை என இருக்கிறது. இதற்காக வாரத்திற்கு ஒரு முறையாவது இட்லி மாவு அரைத்து வைக்கின்றனர். இந்த மாவு தீர்ந்து பழகும் நேரத்தில் இறுதியாக இருக்கும் சிறிதளவு மாவில் புளிப்பு தன்மை அதிகமாக இருக்கும். இதில் தோசை, இட்லிஎன எதை செய்தாலும் அவ்வளவு நன்றாக இருக்காது. இதற்காக இரண்டு சில்லு தேங்காயை பொடியாக நறுக்கி, மிக்ஸி ஜாரில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொண்டு, அதனை தோசை மாவுடன் சேர்த்து கலந்து தோசை ஊற்றி எடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

- Advertisement -

 

triangle-chappathi1

குறிப்பு: 3
மதிய உணவுக்கு சமைத்த சைட் டிஷ்களான பருப்பு, கூட்டு, பொரியல் இவை மீதமாகி விட்டால் அவற்றை வீணாக கீழே கொட்டாமல், இரவு சப்பாத்தி செய்ய கோதுமை மாவுடன் இவற்றை சேர்த்து, பிசைந்து சப்பாத்தி சுடும்பொழுது சப்பாத்தி மிகவும் மிருதுவாக, சுவையாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு: 4
சமையலறையில் டப்பாவில் கொட்டி வைக்கப்படும் முந்திரிப்பருப்பு சிறிது நாட்களில் நமத்து போய்விடும். இவ்வாறு ஆகாமலிருக்க முந்திரிப்பருப்பு டப்பாவில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து, குலுக்கிவிட்டு வைக்க வேண்டும். அல்லது 4 கிராம்பு சேர்த்து வைத்தாலும் சீக்கிரத்தில் முந்திரிப் பருப்புகள் நமத்துப் போகாமல் இருக்கும்.

 

cashunut

குறிப்பு: 5
சட்னி அரைப்பதற்கு அல்லது குருமா செய்வதற்கும் தேங்காயை உடைத்து அவற்றில் சிறிதளவை பயன்படுத்தி விட்டு, மீதியை பிரிட்ஜில் வைத்து விடுவோம். ஆனால் சில நாட்களில் இந்த தேங்காய் வீணாகிவிடும். இவ்வாறு தேங்காய் வீணாகாமல் இருக்க தேங்காயின் மீது சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து, அதன் பின்னர் தேங்காயை ஒரு கவரில் போட்டு வைத்து விட்டால் அதிக நாட்களுக்கு தேங்காய் நன்றாக இருக்கும்.

- Advertisement -