பயனுள்ள அசத்தலான சமையல் குறிப்புகள் 10! இது தெரிஞ்சா நீங்களும் சமையலில் கில்லாடி ஆகலாம் தெரியுமா?

idli-potato-fry
- Advertisement -

சமையல் என்பது ஒரு மிகச் சிறந்த கலைகளில் ஒன்று. சமையல் தெரியாதவர்கள் கூட சிறு சிறு விஷயங்களை கற்றுக் கொண்டால் அற்புதமாக சமைத்து விடலாம். சிறு சிறு குறிப்புகளில் தான் மிகப் பெரிய அளவிற்கான சமையல் திறமை ஒளிந்துள்ளது. அந்த வகையில் இந்த 10 குறிப்புகள் ரொம்பவே அசத்தலான மற்றும் பயனுள்ள சமையல் குறிப்பாக நிச்சயம் உங்களுக்கு இருக்கும். அது என்னென்ன? என்பதை இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்வோமா?

குறிப்பு 1:
நீங்கள் சமையல் செய்யும் பொழுது வாழைப்பூ, வாழைக்காய், வாழைத்தண்டு போன்றவற்றை தாளிக்க சாதாரண சமையல் எண்ணெயை விட, தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது ரொம்பவே மணம் மிகுந்ததாக மாற்றிக் கொடுக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
விசேஷ தினங்கள் மற்றும் நைவேத்தியம் படைக்க நீங்கள் சர்க்கரை பொங்கல் தயாரிக்கும் பொழுது அதன் சுவை மேலும் அற்புதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்து பாருங்கள்.

குறிப்பு 3:
இட்லி மாவு அரைக்கும் பொழுது சரியாக அரை படாமல் இட்லி கெட்டியாக வந்தால் பச்சையாக இருக்கும் அப்பளங்களை 4 எடுத்து தண்ணீரில் முக்கி நனைய விட்டு மிக்ஸியில் நைசாக அரைத்து மாவுடன் கலந்து அதன் பிறகு இட்லி சுட்டு பாருங்கள், இட்லி குஷ்பூ இட்லி போல மெத்தென்று வரும்.

- Advertisement -

குறிப்பு 4:
எண்ணெயில் உருளைக்கிழங்கை போட்டு பொரிப்பவர்கள் கொஞ்சம் பயத்தம் மாவைச் சேர்த்து பொரித்து பாருங்கள், மொறுமொறுவென்று சுவை சூப்பராக இருக்கும்.

குறிப்பு 5:
முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு வெச்சாலே எறும்பு தொல்லை தாங்க முடியலையா? கொஞ்சம் பச்சை கற்பூரத்தை நுணுக்கி டப்பாவில் போட்டு வையுங்கள். ஒரு எறும்பு கூட அந்த பக்கம் எட்டிப் பார்க்காது.

- Advertisement -

குறிப்பு 6:
எந்த அரிசியாக இருந்தாலும் நீங்கள் முதல் தடவை நன்கு தண்ணீரில் கழுவி ஊற்றிய பின்பு, இரண்டாவது தடவை ஊற்றும் தண்ணீரை மற்ற பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம். இரண்டாவது அரிசி களைந்த நீரில் வைட்டமின் பி6, பி12 இருப்பதால் இதனை வீணாக்காமல் புளி ஊற வைக்கவும், காய்கறிகளை வேக வைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பு 7:
சமையலுக்கு அல்லது குழம்பு மிளகாய் தூள் அரைக்க மிளகாய் வத்தலை நீங்கள் வெறும் வாணலியில் போட்டு வறுக்கும் முன்னர் அதில் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து பின்னர் வதக்கினால் மிளகாய் நெடி நம் மூக்கை துளைக்காது.

குறிப்பு 8:
சாம்பார் வைப்பவர்கள் துவரம் பருப்பை குக்கரில் வேக வைக்கும் பொழுது ஒரு டீஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை சேர்த்து வேக வைத்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடலுக்கு குளிர்ச்சியையும், அதே சமயத்தில் இரவு வரை சாம்பார் ஊசி போகாமலும் இருக்கும்.

குறிப்பு 9:
குலாப் ஜாமுன் செய்பவர்கள் அதற்கு சர்க்கரையை பாகு காய்ச்சும் பொழுது நன்கு ஆற விட வேண்டும். ஆறிய பாகில் நீங்கள் ஜாமூன்களை போடும் பொழுது விரிசல் விழாமல், குலாப்ஜாமுன் உடையாமல் இருக்கும்.

குறிப்பு 10:
ஊறுகாய் செய்பவர்கள் மொத்தமாக ஊறுகாய் செய்யும் பொழுது கொஞ்சம் கடுகு எண்ணையை இறுதியாக சேர்த்து பின்னர் பாட்டிலில் போட்டு அடைத்தால் நீண்ட காலம் கெட்டுப் போகாமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.

- Advertisement -