இது மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா இனி பால் திரிஞ்சு போன கவலைப்படுவதற்கு பதில் ரொம்ப சந்தோஷப்படுவீங்க. கேட்கவே ஆச்சரியமா இருக்குல்ல, வாங்க அது என்னன்னு தெரிஞ்சிக்கலாம்.

Kitchen hacks
- Advertisement -

இந்தப் வீட்டு குறிப்பு பதிவில் உள்ள சின்ன சின்ன வீட்டு குறிப்புகளை நீங்களும் தெரிந்து கொண்டால், வீட்டில் வேலைகளை எப்படி சுலபமாக செய்வது என்பதுடன், உங்களின் நேரத்தையும், பணத்தையும் கூட மிச்சப்படுத்த உதவியாக இருக்கும். இதையெல்லாம் நமக்கு முன்னமே தெரிந்து இருந்தால், நன்றாக இருந்து இருக்குமே என யோசிக்கும் அளவுக்கு இருக்கும். வாங்க அது என்ன குறிப்புகள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இப்போதெல்லாம் பெரும்பாலும் பெண்கள் வீட்டிலிருந்தே வேலை செய்கிறார்கள். அதிலும் இந்த தையற்கலை வேலை என்பது அதிகமானோர் செய்யக் கூடியது. அந்த வேலையிலேயே மிகவும் கடினமானது என்னவென்றால் ஊசியில் நூல் கோர்ப்பது. அதை எப்படி சுலபமாக செய்வது என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதற்கு வீட்டில் பயன்படுத்திய பழைய பிரஷ் எடுத்து பிரஷ்ஷில் உள்ள நார் பகுதிகளை ஒரு கத்தி வைத்து சுரண்டினால் அனைத்தும் வந்து விடும்.

- Advertisement -

அதன் பிறகு ஒயரில் இருக்கும் செம்பு கம்பியை எடுத்து அந்த பிரஷில் வைத்து ஒரு டேப்பை ஒட்டி விடுங்கள். அதன் பிறகு கம்பியின் முனையில் லேசாக மடக்கி விட்டு கொள்ளுங்கள். இப்போது அது ஒரு ஊக்கு போல நமக்கு கிடைத்து விடும். இப்போது மிஷினில் இருக்கும் ஊசியின் துவாரத்திற்குள் இந்த செப்பு கம்பியை நுழைத்து அதில் நூலை கோர்த்து வெளியில் எடுத்தால் சுலபமாக நூல் கோர்த்துக் கொண்டு வந்து விடும். இதற்காக நாம் மிஷினில் குனிந்து கொண்டு கண் வலிக்க பார்த்து நூல் கோர்க்க வேண்டிய அவசியம் இல்லை

நம்மில் பெரும்பாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்கவே யோசிப்பார்கள். ஏனென்றால் தேங்காய் எண்ணெய் வைத்த பிறகு முகம் எல்லாம் எண்ணெய் வடிந்திருக்கும். இதனாலே பலரும் எண்ணெய் தேய்ப்பதை தடுத்து விடுவார்கள். இனி நீங்கள் எவ்வளவு எண்ணெய் வைத்தாலும் முகத்தில் வடியாமல் இருக்க எண்ணெயை முதலில் அடுப்பில் வைத்து லேசாக காய்த்து அதன் பிறகு தேய்த்து பாருங்கள். எண்ணெய் முகத்தில் வடியாது அது மட்டும் இன்றி எண்ணெய் உங்களுக்கு எந்த அளவிற்கு அடர்த்தி கம்மியாக இருக்கிறதோ அவ்வளவு சீக்கிரம் எண்ணெய் உங்கள் முடியின் உள்ளே இறங்கும்.

- Advertisement -

உங்கள் வீட்டில் காலியான பவுடர் டப்பாக்களை தூக்கி போடாமல் பவுடர் காலியானவுடன் அதை சோப்பு போட்டு வாஷ் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் கோதுமை மாவு, மைதா மாவு போன்றவற்றை போட்டு வைத்தால் சப்பாத்தி பூரி திரட்டும் போது மாவை தொட்டு தேய்ப்பதற்கு பதிலாக
இதிலிருந்து மாவை தொட்டி பயன்படுத்தும் போது மாவும் வீணாகாது வேலையும் சுலபமாக முடியும்.

இனி பால் திரிந்து விட்டால் அதற்காக கவலையே படாதீர்கள் பால் திரிந்து விட்டால் அதை வடிக்கட்டி தண்ணீரை தனியாக எடுத்து விடுங்கள். திரிந்த பாலிருந்து தான் பன்னீர் தயாரிப்போம். அந்த திரிந்த பாலில் இருக்கும் கட்டிகளை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக வடித்து விட்டு, ஒரு பாக்ஸில் போட்டு வைத்துக் கொண்டு, எந்த பொரியல் செய்தாலும் அதில் லேசாக இந்த பன்னீரை தூவி விட்டால் பொரியலின் சுவை பிரமாதமாக இருக்கும். அதுமட்டுமின்றி வடிகட்டிய தண்ணீரை கூட வீணாக்காமல் ஒருநாள் முழுவதும் புளிக்க விட்டு அடுத்த நாள் செடிகளுக்கு இதை கொடுத்தால் நல்ல உரம். அதிலும் மணி பிளான்ட்க்கு இந்த தண்ணீரை ஊற்றினால் நன்றாக செழித்து வளரும்.

- Advertisement -

உங்கள் குக்கர் மூடி என்ன செய்தாலும் பொங்கி வழிந்து கொண்டே இருந்தால் அதற்கும் ஒரு சூப்பரான ஐடியா உள்ளது. இப்போதெல்லாம் கடைகளில் காய்கறி வாங்கும் போது துணிப்பை போல மெல்லிய ஒரு பை தருகிறார்கள். அந்தப் பையை உங்கள் குக்கரின் மூடி அளவிற்கு சரியாக பொருந்துவது போல கட் செய்து அதன் மேல் விசில் பாகம் நுழையும் அளவிற்கு ஒரு ஓட்டை போட்டு விடுங்கள்.

மூடி மேல் இந்த துணியை வைத்து அதன் பிறகு விசில் போட்டு குக்கரில் வைத்தால் எவ்வளவு பொங்கி வழிந்தாலும் இந்த துணியில் மொத்தமாக இழுத்து விடும் ஸ்டவ் மீதும் படாது. இதை முறையே உங்கள் வீட்டில் இருக்கும் காட்டன் துணி வைத்து செய்யலாம் ஆனால் அதை அடிக்கடி துவைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: அட! சமையல் அறையில் இந்த சின்ன சின்ன குறிப்புகள் எல்லாம் பெரிய பெரிய அளவில் வேலை செய்யும் போலவே. பெண்கள் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய 9 குறிப்புகள்.

இந்த சின்ன சின்ன குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டு உங்கள் தினசரி வீட்டு வேலைகளை பயன்படுத்தி பாருங்கள் நிச்சயமாக இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

- Advertisement -