இல்லத்தரசிகளின் வேலையை சுலபமாக்கும் தினமும் தேவைப்படக்கூடிய புதிய சமையலறை மற்றும் வீட்டுக் குறிப்புகள் 5 உங்களுக்காக இதோ!

chappathi-tea-cooking
- Advertisement -

அன்றாட வேலையை சுலபமாக்கி தரக்கூடிய இந்த சிறு சிறு வீட்டு குறிப்புகள் மற்றும் சமையலறை குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டிருந்தால் இல்லத்தரசிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். சமையலில் சுவையைக் கூட்டக்கூடிய குறிப்புகள், பணத்தை மிச்சப்படுத்த கூடிய அற்புத டிப்ஸ், உங்கள் பொன்னான நேரத்தை சேகரிக்கும் பயனுள்ள புதிய குறிப்புகளை இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

head-ache

குறிப்பு 1:
அடிக்கடி தலைவலி என்று கூறுபவர்களுக்கு இந்த குறிப்பு ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் டீத்தூள் வாங்கும் பொழுது அதனுடன் ஒரு ஸ்பூன் ஏலக்காய்த் தூள், ஒரு ஸ்பூன் சுக்கு தூள், ஒரு சிறு துண்டு பட்டை ஆகியவற்றை நைசாக பொடித்து சேர்த்து கலந்து வைத்துக் கொண்டால் போதும். தலைவலி வரும் போதெல்லாம் இந்த ஒரு டீ பருகினால் இருந்த இடம் தெரியாமல் தலைவலி ஓடிவிடும்.

- Advertisement -

குறிப்பு 2:
முருங்கைக் கீரையில் இருக்கும் சத்துக்கள் எண்ணற்றவை என்றாலும் அதனை ஆய்ந்து சமைப்பதற்கு சோம்பேறித்தனப் படுபவர்கள் உண்டு. இத்தகையவர்கள் முந்தைய நாள் இரவே முருங்கைக் கீரையை வாங்கி வந்து ஒரு முழு நியூஸ் பேப்பரில் சுற்றி வைத்து விட்டால் போதும். மறுநாள் காலையில் பாதி இலைகள் உதிர்ந்து விட்டிருக்கும். பின்னர் காலையில் எழுந்து சுத்தம் செய்வதற்கு ரொம்பவே சுலபமாக இருக்கும். சுத்தம் செய்த முருங்கைக்கீரையை தண்ணீர் ஊற்றி அலசும் பொழுது கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அலசி 5 நிமிடம் கழித்து பார்த்தால் சிறு சிறு காம்புகளும் தண்ணீரின் கீழே இறங்கி இருக்கும். அதன் பிறகு மேலே இருக்கும் சுத்தமான கீரையை மட்டும் தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து சமைத்துக் கொள்ளலாம்.

Murungai keerai

குறிப்பு 3:
நாம் பொங்கல், பாயாசம் செய்யும் பொழுது அதிக அளவில் காய்ந்த திராட்சை பயன்படுத்துவது உண்டு. மேலும் காய்ந்த திராட்சையை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற விட்டு மறுநாள் காலையில் தண்ணீருடன் அதை சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை தடுக்கப்பட்டு, ரத்த விருத்தி உண்டாகும். இந்த காய்ந்த திராட்சை கொஞ்ச நாட்கள் கழித்து பார்த்தால் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு பிசுபிசுப்பாக மாறிவிடும். இப்படி அல்லாமல் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு காய்ந்த திராட்சையை வாங்கியவுடன் கால் ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு போட்டு எல்லா இடங்களிலும் படும்படி கலந்து வைத்து விட்டால் போதும். எவ்வளவு நாட்கள் ஆனாலும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிரியாகவே இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
மீந்து போன சாதம் உங்களிடம் இருந்தால் அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் சப்பாத்தி மாவு பதத்திற்கு தேவையான கோதுமை மாவு சேர்த்து நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மாவைக் கொண்டு சப்பாத்தி சுட்டு பாருங்கள், அவ்வளவு மெத்தென்று சுவையாக இருக்கும். இனி ஒரு கப் சாதம் கூட வீணாகி போகாது.

chappathi2

குறிப்பு 5:
உங்களிடம் காலியாக இருக்கும் ஸ்டிக்கர் ஒட்டிய கண்ணாடி பாட்டில்கள் அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களில் இருக்கும் ஸ்டிக்கரை ரொம்ப சுலபமாக நீக்குவதற்கு ஒரு பவுலில் சுடு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் மூழ்கும்படி இந்த பாட்டில்களை மூடிகளை எடுத்து விட்டு ஊற வைத்து விடுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து எடுத்துப் பார்த்தால் ஸ்டிக்கர் ரொம்பவே சுலபமாக நீங்கி வந்துவிடும். அதன் பிறகு தேவையான மற்ற பொருட்களை வைத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -