Astrology : உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் செல்வம் அதிகம் பெற இதை செய்ய வேண்டும்

suriyan
- Advertisement -

சூரிய ஒளியால் உடலுக்கு பல சத்துக்கள் கிடைக்கிறது என விஞ்ஞானமும் நிரூபித்துள்ளது. நமது நாட்டின் பண்டைய கலைகளில் ஒன்றான ஜோதிட சாஸ்திரமும் சூரிய ஒளி மனிதர்கள் மற்றும் இன்ன பிற உயிரினங்கள் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என கூறியிருக்கிறது. அந்த ஜோதிடக்கலையில் நட்சத்திரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனுக்கும் பலன்களை கூறப்பட்டுள்ளது. அதில் உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் மேன்மையான நிலையை பெற செய்ய வேண்டிய பரிகாரம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

sooriya-bagwan

27 நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்தியோராவது நட்சத்திரமாக வருவது உத்திராடம் நட்சத்திரம் ஆகும். நவகிரகங்களில் சூரிய பகவான் இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக இருக்கிறார். ஸ்ரீ விநாயக மூர்த்தி இந்த நட்சத்திரத்தின் அதி தேவதையாக இருக்கிறார். சூரியனுக்கு உரிய நட்சத்திரம் என்பதால் அனைத்து விடயங்களைப் பற்றிய ஞானமும், ஒரு செயலை விடாமுயற்சியுடன் செய்து முடிக்கின்ற திடசித்தமும் இந்த நட்சத்திரக்காரர்களிடம் அதிகம் இருக்கும். உத்திராட நட்சத்திரகாரர்களின் வாழ்வில் அதிக செல்வ சேர்க்கை உண்டாக கீழ்க்கண்ட பரிகாரங்களை செய்து வர வேண்டும்.

- Advertisement -

தினந்தோறும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு சூரிய உதயத்தின் போது சூரிய பகவானை வணங்குவதால் உங்களுக்கு சகல நன்மைகளும் உண்டாகும். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை விநாயகப் பெருமான் என்பதால் ஞாயிறு மற்றும் வாரத்தின் இன்ன பிற நாட்களிலும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவேண்டும். தனுசு ராசியில் வரும் உத்திராட நட்சத்திர பாதங்களில் பிறந்தவர்கள் சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகர் கோயிலில் இனிப்புகளை பக்தர்களுக்கு தானம் வழங்க வேண்டும். மகர ராசியில் வரும் உத்திராட நட்சத்திர பாதங்களில் பிறந்தவர்கள் கோயில்களில் செய்யப்படும் யாகத்தின் போது யாகத்தில் இடுவதற்கு கருப்பு எள் தானம் தர வேண்டும்.

vinayagar

வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் குரு ஹோரையில் குரு பகவானை வழிபட்டு வந்தால் உங்களின் வாழ்வில் ஏற்படும் அத்தனை பிரச்சனைகளும், குறைகளும் தீரும். உத்திராட நட்சத்திரத்திற்குரிய விருட்சம் பலா மரம் ஆகும். பலா மரம் தலவிருட்சமாக இருக்கும் கோயில்களுக்கு சென்று பல மரத்தையும் அங்குள்ள இறைவனையும் வழிபடுவதால் உங்கள் தோஷங்கள், சாபங்கள் நீங்கி அதிர்ஷ்டங்களும், தனலாபங்களும் பெருகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
பூராடம் நட்சித்திரக்கார்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Uthradam nakshatra pariharam in Tamil. It is also called as Uthiradam natchathiram in Tamil or Uthradam natchathiram rasi in Tamil or Uthiradam natchathiram athipathi in Tamil or Natchathira pariharam in Tamil.

- Advertisement -