வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்ளும் முறை மற்றும் பலன்கள்

Perumal God
- Advertisement -

“மாதங்களில் நான் மார்கழி” என்று பகவத் கீதையில் கூறுகிறார் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. மார்கழி மாதம் என்பது பெருமாளை முழுமுதல் கடவுளாக வழிபடும் வைணவர்களுக்கு ஆன்மீக முக்கியத்துவம் மிகுந்த மாதமாகும். “வைதாரையும் வரவேற்கும் வைகுண்டம்” என்ற வாக்கியத்திற்கேற்ப மனிதர்கள் அனைவரின் விருப்பமாக இருக்கும் முக்தி எனப்படும் மீண்டும் பிறவாமை பேறு தரும் வைகுண்ட ஏகாதசி விரதம் இம்மாதத்தில் தான் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்ளும் முறை குறித்தும் அதனால் நாம் பெறும் பலன்கள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

“காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமில்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமில்லை” என்று கூறுவார்கள். மகத்துவம் வாய்ந்த இந்த வைகுண்ட ஏகாதசி தினத்திற்கு முன் தினமான தசமி தினத்தில் வீட்டை கழுவி சுத்தம் செய்வது நல்லது. அந்த தசமி தினத்தன்று ஒரு வேளை உணவு மட்டும் அருந்திவிட்டு ஏகாதசி விரதம் இருக்க தொடங்க வேண்டும். மறுநாள் ஏகாதசி தினத்தில் அதிகாலை வேளையான 3 முதல் 4 மணிக்குள்ளான பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திறக்கப்படும் சொர்க்க வாசல் வழியாக சென்று பெருமாளை வழிபட வேண்டும்.

- Advertisement -

பின்பு வீட்டிற்கு திரும்பியதும் அந்நாள் முழுவதும் உணவேதும் உண்ணாமல் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும். துளசி இலைகள் ஊறவைக்கப்பட்ட நீரை தீர்த்தமாக அவ்வப்போது அருந்தலாம். முதியோர்கள், உடல் பலவீனமானவர்கள் பெருமாளுக்கு நிவேதித்த பால் மற்றும் பழங்களை சாப்பிடலாம். இந்நாள் முழுவதும் பெருமாளின் சிந்தனை மற்றும் தியானத்தில் இருந்து மௌன விரதமும் கடைபிடித்தால் ஏகாதசி விரதத்தின் பலன் பன்மடங்கு அதிகரிக்கும்.

ஏகாதசி தினத்தன்று இரவில் தூங்காமல் விஷ்ணு சஹஸ்ரநாமம், பெருமாள் மந்திரங்கள், பாகவதம் படித்தல் போன்ற ஆன்மீக செயல்களில் ஈடுபடுவது சிறப்பானதாகும். இந்த வைகுண்ட ஏகாதசி தினத்தில் கண் விழித்து விரதம் இருப்பதால் உடலுக்கும், மனதிற்கும் மிகுதியான ஆன்மீக ஆற்றல் கிடைப்பதாக யோகிகள் கூறுகின்றனர். ஏகாதசி தினத்தின் மறுநாளான துவாதசி தினத்தில் வைணவ சம்பிரதாய நாள்காட்டியில் குறிப்பிட்டிருக்கும் நேரத்தில் துளசி தீர்த்தம் அருந்தி ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும்.

- Advertisement -

Srirangam temple details Tamil

துவாதசி தினத்தன்று அரிசி சாதம் செய்து, சாம்பார் குழம்பில் நெல்லிக்காய் சேர்த்து கொள்ளுதல் வேண்டும். நெல்லி காய் என்பது லட்சுமி தேவியின் அம்சம் நிறைந்ததாகும். ஏகாதசி தினத்தில் செய்யப்படுகின்ற உணவில் நெல்லிக்காய் சேர்த்து, பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து பின்பு நாம் சாப்பிடுவதால் திருமால் மற்றும் திருமகளின் முழுமையான ஆசிகளால் நாம் நீண்ட ஆயுளும், அனைத்து செல்வங்களும் நிரம்பிய வாழ்வும் கிடைக்க பெற்று, இறுதியில் பெருமாளின் வைகுண்ட லோகத்தை அடையும் பாக்கியத்தையும் பெறுகிறோம்.

இதையும் படிக்கலாமே:
கந்தர்வகோட்டை ராமர் கோயில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vaikunda yegathesi viratham in Tamil. It is also called Vaikunta ekadasi mahimai in Tamil or Vaikunta ekadasi valipadu in Tamil or Vaikunta ekadasi palangal in Tamil or Vaikunta ekadasi viratham irupadhu eppadi in Tamil.

- Advertisement -