சிவபெருமான் உங்கள் வீட்டுக்கே வந்து உங்களது குறைகளை போக்கி, தடைகள் அனைத்தையும் நீக்கி, வேண்டியதை தர இந்த ஒரு இலை போதும்.

sivan
- Advertisement -

இந்தப் பிரபஞ்சத்தையே காத்து ரட்சிக்கும் இறைவனாக திகழ்ந்தவர் சிவபெருமான். சிவபெருமானுக்குரிய மரம் என்றால் வில்வ மரத்தை அனைவரும் கூறுவார்கள். ஆனால் அந்த வில்வ மரத்திற்கு எந்த அளவுக்கு மகிமை இருக்கிறதோ, அதே அளவு மகிமை வேறொரு மரத்திற்கும் உண்டு என்றால் அது வன்னி மரம் தான். பல ஆரோக்கிய சக்தியையும், ஆன்மீக சக்தியையும் தன்னகத்தே வைத்துள்ள வன்னிமர இலையை கொண்டு சிவபெருமானை எப்படி வணங்கி அவருடைய அருளை பெறுவது என்று பார்ப்போம் வாருங்கள்.

மருத்துவர் ரீதியாக வன்னி மரத்தில் இருக்கும் அனைத்து பாகங்களும் பலவிதமான நோய்களை குணப்படுத்த உதவுகிறது. ஆன்மீக ரீதியாக பார்த்தால் வன்னி மரம் பல சிவாலயங்களில் தலவிருட்சமாக திகழ்கிறது. மேலும் இந்த வன்னி மரத்தின் மகிமைகளை புராணங்களிலும் நாம் படிக்கலாம். ராமாயணத்தில் ராமர் ராவணனை அளிப்பதற்கு முன்பாக வன்னி மரத்தை வணங்கி பிறகுதான் சென்றார் என்ற குறிப்பு இருக்கிறது.

- Advertisement -

மேலும் பஞ்ச பாண்டவர்கள் தங்களுடைய உடைமைகளையும், ஆயுதங்களையும் வன்னி மரத்தடியில் தான் வைத்திருந்தார்கள் என்று மகாபாரதமும் கூறுகிறது. முருகப் பெருமான் வள்ளியை மணப்பதற்காக வன்னி மர வடிவில் தான் வந்தார் என்று கந்தபுராணம் கூறுகிறது. இவ்வளவு சிறப்பு மிகுந்த இந்த வன்னி மரத்தின் இலைகளை வைத்து நாம் எவ்வாறு வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்.

முதலில் வன்னிமர இலையை பறித்து வர வேண்டும். அந்த இலையை தண்ணீரிலோ அல்லது பன்னீரிலோ கழுவ வேண்டும். பிறகு அதை ஒரு தாம்பாளத்தில் வைத்து, அதற்கு மேல் நெல்லிக்கனியை வைக்க வேண்டும். பிறகு, உங்கள் வீட்டில் சிவலிங்கமோ அல்லது சிவன் படமோ இருந்தால் அதற்க்கு வன்னி இலைகளை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்

- Advertisement -

அர்ச்சனை செய்யும் சமயத்தில் நமக்குத் தெரிந்த சிவ மந்திரங்களை உச்சரிக்கலாம் அல்லது நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை கொண்டு வன்னி இலையால் அர்ச்சனை செய்யலாம். வீட்டில் சிவன் படமோ லிங்கமோ இல்லாதவர்கள் வில்வமர காயை சிவனாக பாவித்து அதற்க்கு அர்ச்சனை செய்யலாம். அப்படி அர்ச்சனை செய்யப்பட்ட வில்வமர காயை நீங்கள் உங்கள் பூஜை அறையிலேயே தொடர்ச்சியாக வைத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அர்ச்சனை செய்த பிறகு கற்பூர தீபாராதனை காட்டி மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு நாம் வைத்த நெல்லிக்கனியை பிரசாதமாக மற்றவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நான் பல நாட்கள் தொடர்ச்சியாக முயற்சித்தும் நடைபெறாத காரியம் வெற்றிகரமாக நடைபெறும். அதோடு நமது முன்னேற்றத்திற்கான தடங்கல்கள் விலகும்.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு குச்சி போதும். ஜெயிக்கவே முடியாது என்று நினைத்த காரியம் கூட ஜயத்தில் முடியும்.

நம் வாழ்க்கையில் நடக்கவே நடக்காது என்று நினைக்கும் நல்ல விஷயங்களும் இந்த அர்ச்சனையை நாம் செய்து வருவதன் மூலம் நம் வாழ்வில் நடந்தேறும். ஏதாவது ஒரு நல்ல கோரிக்கையை நாம் மனதில் நினைத்துக் கொண்டு இந்த அர்ச்சனையை தொடர்ந்து செய்து வர, அந்த கோரிக்கைகள் வெற்றி அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -