வாழ்க்கையை மாற்றி அமைக்க இந்த ஒரு குச்சி போதும். ஜெயிக்கவே முடியாது என்று நினைத்த காரியம் கூட ஜயத்தில் முடியும். காரிய சித்திக்கு சிறப்பான பரிகாரம்.

arasan kuchi vazhipadu
- Advertisement -

பண்டைய காலம் தொட்டே அரச மரத்திற்கென்று ஒரு தனி சிறப்பு இருந்து வருகிறது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக அரச மர பிள்ளையார் வழிபாட்டை கூறலாம். அரசமரத்தின் மகத்துவம் ஏராளம். அதில் ஒரு மிக சிறிய பகுதியான அரசமர குட்சிக்கே ஆன்மீக ரீதியாக பல அறிய சக்திகள் உண்டு. அதுகுறைத்து விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

மனிதர்கள் தாங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுவதுண்டு. ஆனால் எல்லா நேரமும் ஆசைகள் நிறைவேறுவது கிடையாது. பல நேரங்களில் நாம் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். இந்த நிலையில் இருந்து மாறி, நம்முடைய சரியான முயற்சிகள், ஆசைகள் அனைத்தும் வெற்றி பெற உதவும் ஒரு பரிகாரம் தான் அரசமர குச்சி வழிபாடு பரிகாரம். இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

- Advertisement -

அரச மரத்தின் கீழே விழுந்திருக்கும் குச்சியை நல்ல ஹோரை பார்த்து நல்ல நாளில், நல்ல நேரத்தில் எடுக்க வேண்டும். மேலும் அந்த நாள் நம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளாகவும் இருக்க வேண்டும். கீழே விழுந்திருக்கும் குச்சியை மட்டுமே எடுக்கவேண்டுமே தவிர மரத்திலிருந்து குச்சியை உடைக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி எடுத்த குச்சியை வீட்டிற்கு எடுத்து வந்து மஞ்சள் அல்லது சந்தனம் கலந்த தண்ணீரில் முக்கி எடுக்க வேண்டும். பிறகு வீட்டில் இருக்கும் வெள்ளி அல்லது பித்தளை தாம்பாளத்தில் அதை வைத்து, அதற்கு சந்தன குங்குமம் வைக்க வேண்டும். பிறகு பக்கத்தில் ஒரு நாணயத்தை வைத்து, அந்த நாணயத்திற்கும் சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். பிறகு அருகம்புல் அல்லது ஏதாவது ஒரு வகையான மலரைக் கொண்டு அதற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

அவ்வாறு அர்ச்சனை செய்யும் பொழுது “சகல காம்யார்த்த சித்தஹே” என்ற ஸ்லோகத்தை சொல்லியபடி செய்ய வேண்டும். இதற்கு நினைத்த காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று அர்த்தம். 16 முதல் 108 வரை இந்த ஸ்லோகத்தை சொல்ல வேண்டும். பிறகு இஷ்ட தெய்வத்தை மனதார வணங்கி, அதற்கு தீபாராதனை காட்ட வேண்டும்.

பிறகு வடக்கு பார்த்து நின்றவாரு அந்த குச்சியை நம் பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்த பொருள் என்பதால் அதை மிகவும் பத்திரமாக வைத்துக் கொள்வது அவசியம். வெற்றிகரமான காரியங்களுக்கு செல்லும் பொழுது இதை எடுத்து செல்வதன் மூலம் வெற்றி நம் வசம் ஆகும். அசுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது அதை எடுத்து செல்ல கூடாது.

இதையும் படிக்கலாமே: குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாமல் தொடர்ச்சியாக தடைகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறதா? ஒருமுறை இதை செய்தால் போதும். தடைகள் விலகி குலதெய்வத்தை தரிசிக்கலாம்.

தினமும் இந்த குச்சியை இறைவன் முன் வைத்து மேற்கூறிய ஸ்லோகத்தை ஜெபித்த பிறகு குச்சியை பாக்கெட்டில் வைத்துக்கொள்வது நல்லது. இந்த குச்சியை அதன் வாழ்நாள் முழுவதும் உபயோகப்படுத்தலாம். அல்லது மாதத்திற்கு ஒருமுறை நல்ல நாள் பார்த்து குச்சியை மாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு மாற்றும் பொழுது, பழைய குச்சியை மண்ணில் பபுதைத்துவிட்டு புதிய குச்சிக்கு முறையான பூஜை செய்து பயன்படுத்த துவங்கலாம்.

- Advertisement -