டிபனுக்கு ரொம்ப சீக்கிரத்துல சைடு டிஷ் செய்யணும்னா சட்டுன்னு இந்த கடப்பா கார சட்னி செய்யுங்க. இட்லி தோசைக்கெல்லாம் இது அட்டகாசமான சுவையில் இருக்கும்.

red chilli chutney
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலும் பெண்களும் வேலைக்கு செல்லும் சூழ்நிலையில் இருக்கிறார்கள். அப்படி சொல்லும் நேரங்களில் எந்த ஒரு சமையலும் சீக்கிரத்தில் செய்து முடித்து கிளம்பத் தான் பார்ப்பார்கள். அப்படியான வேளைகளில் செய்யக் கூடிய ஒரு சுவையான அதே நேரத்தில் நல்ல காரசாரமான ஒரு சட்னியை எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இட்லி, தோசைக்கெல்லாம் நாம் சாம்பார், சட்னி எல்லாம் செய்தாலும் கொஞ்சம் நாக்குக்கு சுருக்கு என்று காரசாரமாக இருந்தால் இரண்டு இட்லி சாப்பிடுபவர்கள் கூட ஒரு இட்லி அதிகமாக சாப்பிட தான் செய்வார்கள். அந்த வகையில் இந்த கடப்பா சட்னி நல்ல காரசாரமான சுவையில் இருக்கும். அதே நேரத்தில் இதை செய்வதும் மிக மிக சுலபம்.

- Advertisement -

செய்முறை

இந்த சட்னி செய்வதற்கு முதலில் மிக்ஸி ஜாரில் நான்கு பல் பூண்டு, ஏழு காய்ந்த மிளகாய், ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு புளி, கால் டீஸ்பூன் கல் உப்பு இவை எல்லாம் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக இதில் பத்து சின்ன வெங்காயம் சேர்த்து மறுபடியும் இரண்டு சுற்று அரைத்து எடுத்து இதை தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து இதே மிக்ஸி ஜாரில் ஒரு பெரிய பழுத்த தக்காளியை சேர்த்து அதையும் நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் பேன் வைத்து சூடானவுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு ஒரு டீஸ்பூன் கடுகு சேர்த்து பொரிந்தவுடன், ஒரு காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு ஒரு கொத்து கறிவேப்பிலையும் சேர்த்த பிறகு அரைத்து வைத்த வெங்காயம், காய்ந்த மிளகாய் பேஸ்ட்டை முதலில் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு அரைத்து வைத்த தக்காளி விழுதையும் சேர்த்து அதன் பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கிய பிறகு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விடுங்கள். இந்த சமயத்தில் சட்னிக்கு உப்பை சரியாக உள்ளதா என்று ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள். உப்பு தேவை எனில் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இதை கொதிக்க வைக்கும் போது மூடி போட்டு கொதிக்க விடுங்க. ஐந்து நிமிடத்திற்கு எல்லாம் காரசாரமாக சுவையில் கடப்பா கார சட்னி தயார்.

இதையும் படிக்கலாமே: தக்காளி சட்னி செய்முறை

சுட சுட இட்லியுடன் இந்த சட்னி வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். இனி அவசர நேரத்தில் என்ன செய்வது என்று குழம்பாமல் சட்டு என்று இந்த சட்னியை அரைத்து விடுங்கள்.

- Advertisement -