வராகி அம்மன் வரலாறு

- Advertisement -

பெண் தெய்வ வழிபாடு என்பது பழங்காலம் தொட்டே நமது நாட்டில் பரவலாக இருந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக சக்தி வழிபாடு பெரும்பாலான மக்களால் பின்பற்றப்படுகின்ற ஒரு தொன்மையான வழிபாட்டு முறையாகும். தற்காலத்தில் பலரும் விரும்பி வழிபடும் தெய்வமாக வராகி அம்மன் திகழ்கிறார். இந்த வாராகி அம்மன் யார்? என்பது குறித்தும் வராகி அம்மன் (Varahi amman history in Tamil) குறித்த இன்னும் பல விடயங்களையும் இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

வராகி அம்மன் பிறந்த கதை

இந்து மதப் புராணங்களின்படி வராகி அம்மன் என்பவர் அன்னை துர்கா தேவியின் ஒரு அம்சமாவார். ஒரு சமயம் ரத்த பீஜன் என்கிற அரக்கனுடன் மகா துர்கா தேவி போரிட்ட பொழுது, தனது தன்னிடமுள்ள மகா சக்தியை ஏழு பாகங்களாக பிரித்து, ஏழு சப்த கன்னியர்களை தோற்றுவித்து, அவர்களை ரத்த பீஜனுடன் போர் செய்ய அனுப்பியதாக புராணங்கள் கூறுகின்றன. அதே போன்று திருமால் வராக அவதாரம் எடுத்த பொழுது, அவரின் துணை அவதார சக்தியாக லட்சுமி தாயார் எடுத்த வடிவம் தான் வராகி அம்மன் வடிவம் எனவும் கூறப்படுகின்றது.

- Advertisement -

வராகி அம்மன் காட்டுப்பன்றியின் தலையும், மனித பெண் உடலும் கொண்ட வடிவமான பெண் தெய்வமாவார். இந்த வராகி அம்மன் என்பவர் கருப்பு நிற ஆடை அணிந்து, சிம்மா வாகனத்தில் வீற்றிருப்பவராக சித்தரிக்கப்படுகிறார். இவருக்கு மற்றும் 8 திருக்கரங்கள் உண்டு. அவற்றில் ஒரு கரத்தில் ஏர்களப்பை, ஒரு கையில் சூலம், ஒரு கையில் ஸ்ரீசக்கரம், ஒரு கையில் கதாயுதம், ஒரு கையில் சங்கு, ஒரு கையில் அங்குசம், மற்ற இரு கரங்களிலும் அபய மற்றும் வரத முத்திரைகளுடன் திகழ்கிறார்.

வராகி அம்மன் வழிபாடு

தாந்திரீக வழிபாட்டு முறைகளில் வராகி அம்மன் முக்கிய தெய்வமாக வழிபடப்படுகிறார். வராகி அம்மன் வழிபாடு என்பது மிகப் பழங்காலம் தொட்டே பாரத நாட்டில் இருந்து வருவதாக வரலாற்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தமிழகத்தை ஆண்ட சோழ அரச பரம்பரையின் வெற்றி தெய்வமாக வராகி அம்மன் வழிப்படப்பட்டுள்ளார். ராஜராஜ சோழன் தான் கட்ட விரும்பிய பெருவுடையார் கோயிலுக்கான தகுந்த இடத்தை வாராகி அம்மனே காட்டுப்பன்றி வடிவத்தில் வந்து காட்டியதாகவும், அதன்படியே அவ்விடத்தில் ராஜராஜ சோழன் திருவுடையார் கோயிலை கட்டியதாகவும், அதற்கு காரணமாக இருந்த வராகி அம்மனுக்கு கோயிலின் ஒரு பக்கத்தில் ராஜா ராஜ சோழன் தனி சன்னதி அமைத்துள்ளதாகவும் வரலாறு கூறுகின்றது.

- Advertisement -

வராகி அம்மன் மந்திரம்

சப்த கன்னியர்களில் 5 ஆவது தேவியாக இருப்பவர் ஸ்ரீ வராகி அம்மன். தீயவற்றை அழித்து, தர்மத்தை நிலைநிறுத்தும் ஸ்ரீ வராகி அம்மன் வழிபாடு செய்பவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் அம்பாள் அருள்வார். அப்படிப்பட்ட வராகி அம்மனின் அருளை பெற்றுத்தரும் ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஓம் வாம் வாராஹி நம
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம

எனும் வராகி அம்மனுக்குரிய இந்த மந்திரத்தை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேலைகளில் தீபம் ஏற்றி, 108 முறை துதித்து வருபவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வறுமை ஒழியும். காரிய தடைகள் விலகும். எதிர்ப்புகள் நீங்கும். எதிர்மறை ஆற்றல்களின் தாக்கத்திலிருந்து நம்மை காக்கும் கவசமாக இந்த மந்திரம் செயல்படும்.

- Advertisement -

வராகி அம்மன் கனவில் வந்தால் என்ன

ஒரு சிலருக்கு அவர்கள் உறங்குகின்ற பொழுது வராகி அம்மன் கனவில் தோன்றி இருப்பார்கள். இப்படி வராகி அம்மனை கனவில் காண்பதால், கனவு காணும் நபருக்கு வாழ்க்கையில் தீர்க்க முடியாத பல கஷ்டங்கள் இருப்பதாகவும், அந்த கஷ்டங்கள் அனைத்தும் மிக விரைவிலேயே தீரப் போகின்றது என்பதை அந்த கனவு குறிக்கிறதாக ஆன்மீக பெரியோர்களால் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் தற்போது வாழ்கின்ற வாழ்க்கையில் இருந்து மேலான நிலைக்கு கூடிய விரைவில் வருவார்கள் எனவும் அந்த கனவு உணர்த்தக் கூடியதாக இருக்கக்கூடும் எனவும் பெரியோர்கள் கூறுகின்றனர்.

வராகி அம்மன் உகந்த நாள்

ஒவ்வொரு மாதமும் வருகின்ற வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி திதிகள் வராகி அம்மன் வழிபாட்டுக்குரிய சிறந்த நாட்களாக இருக்கின்றன. அத்தோடு புரட்டாசி மாதம் வருகின்ற நவராத்திரி நாட்களில், ஐந்தாவது தினம் வராகி அம்மனுக்குரிய தினமாக இருக்கின்றது. மேலும் ஒவ்வொரு மாதமும் வருகின்ற அஷ்டமி, பௌர்ணமி திதிகளும் வராகி அம்மன் வழிபாடு செய்வதற்குரிய சிறந்த தினங்களாக இருக்கின்றன.

வராகி அம்மன் சிலை வீட்டில் வைக்கலாமா

வராகி அம்மன் சக்தி வடிவானவர். தாந்திரீக வழிபாட்டு முறைகளில் மிக முக்கிய பெண் தெய்வமாக வராகி அம்மன் திகழ்கிறார். தீயவற்றை அழிக்கும் உக்கிர தெய்வமாக வாராகி அம்மன் இருப்பதால், பொதுவாக திருமணமாகாதவர்களும், துறவு வாழ்க்கை மேற்கொண்டவர்களுமே வராகி அம்மன் உபாசனை வழிபாடை மேற்கொள்கின்றனர். எனவே இத்தகையவர்கள் தங்களின் வீடுகளில் வாராகி அம்மன் சிலை அல்லது படத்தை வைத்து முறைப்படி பூஜைகளை செய்கின்றனர்.

இல்லற வாழ்க்கையில் இருப்பவர்கள் வராகி அம்மன் படத்தை மட்டும் வைத்து பூஜைகள் செய்யலாம். வராகி அம்மன் சக்தி வடிவானவர் என்பதால் குடும்ப வாழ்க்கை சூழ்நிலையில் இருப்பவர்கள் தங்களால் முறை தவறாமல், வராகி அம்மனுக்குரிய பூஜைகள் மற்றும் வழிபாடுகளை உடல், மன, ஆன்ம சுத்தியோடு முறைப்படி செய்ய முடியும் என்றால் மட்டுமே வராகி அம்பாள் படம் வைத்து வழிபாடு மேற்கொள்ள வேண்டும். இதில் தவறும் பட்சத்தில் தெய்வ சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாரத நாட்டில் வாராஹி அம்மனுக்கு அணிய தனி பிரசித்தி பெற்ற கோயில் ஒடிசா மாநிலத்தில் பெரிய மாவட்டத்தில் பாராகி தேவலா என்கிற பெயரில் அமைந்துள்ளது. கலிங்கத்து மன்னர்களால் 9 ஆம் நூற்றாண்டில் இந்த வாராகி அம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு

தமிழ்நாட்டில் வராகி அம்மனுக்குரிய மிக பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்வது தஞ்சை மாவட்டம் பெருவுடையார் கோயில் வளாகத்தில் தனி சன்னிதியில் கோயில் கொண்டுள்ளார் வராகி அம்மன். வராகி அம்மனின் இந்த தனி சன்னதி தஞ்சையை ஆண்ட இராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது.

- Advertisement -