வாராகி தாயாருக்கு பிடித்த நெய்வேத்தியம்

varahi neivedhyam
- Advertisement -

பஞ்சமி திதியில் வாராகி தாயாரை வழிபடுவது என்பது பலரும் மேற்கொள்ளக்கூடிய ஒரு வழிபாட்டு முறைதான். வாராகி தாயாரை நாம் முழுமனதோடு வேண்டி வழிபட்டால் அவள் நமக்கும் பாதுகாப்பாக இருந்து நாம் வேண்டுவன அனைத்தையும் தருவதோடு மட்டுமல்லாமல் எந்தவித எதிர்மறை சக்திகளும் நம்மை அணுகாமல் பார்த்துக் கொள்வாள். அப்படி நாம் வாராகி தாயாரை வழிபடும் பொழுது என்னென்ன நெய்வேத்தியங்களை அவளுக்கு வைத்து வழிபட உடனே நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவாள் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக எந்த தெய்வத்தை நாம் வழிபட்டாலும் அந்த தெய்வத்திற்கு பிடித்தமான பொருட்களை வைத்து வழிபடும் பொழுது அந்த தெய்வத்தின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் பிடித்தமான பூக்கள், நிறங்கள், நெய்வேத்தியம் என்று பல இருக்கின்றன. நம்மால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை வைத்து வழிபடும் பொழுது அந்த பொருள் அவர்களுக்கு பிடித்தமான பொருளாக இருக்கும் பட்சத்தில் நம்முடைய வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சிறு குழந்தைகள் தங்களுக்கு தேவையான பொருட்கள் வேண்டும் என்னும் பட்சத்தில் தன் பெற்றோர்கள் விரும்புவது போல் நடந்து கொண்டு தங்களின் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள் அல்லவா? அதே போல் தான் நம்முடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றால் நாம் வழிபடும் தெய்வத்திற்கு பிடித்தமான நெய்வேத்தியத்தை செய்து வைத்து வழிபட வேண்டும்.

அம்மனுக்கு மிகவும் பிடித்தமான மலராக கருதப்படுவது செம்பருத்தி மலர் அதுவும் ஒற்றை செம்பருத்தி தான். இந்த மலரை 5, 7 என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் வாராகி தாயாருக்கு சூட்டுவதன் மூலம் அவள் மனம் மகிழ்வாள். ஒற்றை செம்பருத்தி கிடைக்காத பட்சத்தில் செவ்வரளி பூக்களை வைத்து வழிபடலாம்.

- Advertisement -

இதே போல் நெய்வேத்தியம் என்று பார்க்கும் பொழுது எந்த தெய்வத்திற்கு நாம் நெய்வேத்தியம் வைப்பதாக இருந்தாலும் வெற்றிலை பாக்கு வாழைப்பழம் வைத்தால் போதும். ஆனால் பெண் தெய்வ வழிபாடு செய்யும்பொழுது கண்டிப்பான முறையில் பச்சரிசியால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை செய்து வைக்க வேண்டும். அந்த வகையில் வாராகி தாயாருக்கு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், வெண்ணெய் எடுக்காத தயிர் சாதம் வைத்து வழிபடலாம்.

கருப்பு உளுந்து மற்றும் பூண்டு இவற்றை சேர்த்து அரைத்து வடையாக சுட்டு வைக்கலாம். அடுத்ததாக அம்மனுக்கு மிகவும் பிடித்தமான பழமாக கருதப்படுவது மாதுளம் பழம். ஒரே ஒரு மாதுளம் பழத்தை வைத்து கூட நாம் அம்மனை வழிபாடு செய்யலாம். அவளுக்கு கிழங்கு வகைகள் என்பது மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக சர்க்கரை வள்ளி கிழங்கும் பனங்கிழங்கும் வாராகி தாயாருக்கு மிகவும் பிடித்தமான கிழங்காக கருதப்படுகிறது. அம்மனுக்கு ஒரு துண்டு கரும்பை வைத்து நாம் வழிபட்டாலும் அவள் ஓடோடி வந்து விடுவாள் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் வாராஹி அம்மனுக்கு எள்ளுருண்டை, பானகம், மிளகு வடை, கரும்புச்சாறு வைத்து வழிபடலாம். வெள்ளை மொச்சை பயிரை வேகவைத்து அதில் தேனை கலந்து பிணைந்து அம்மனுக்கு வைத்து வழிபட அம்மன் ஓடோடி வந்து நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவாள்.

இதையும் படிக்கலாமே: பிள்ளைகள் நன்றாக படிக்க வசந்த பஞ்சமி வழிபாடு

இந்த நெய்வேத்தியங்களில் தங்களால் இயன்ற ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைத்து வாராகி அம்மனை வழிபட உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும்.

- Advertisement -