நினைத்தது நடக்க வராகி அம்மன் பூஜை

varahi poojai
- Advertisement -

இன்றைய காலத்தில் பலராலும் பரவலாக வணங்கக்கூடிய தெய்வமாக வாராகி அம்மன் திகழ்கிறார். ராஜராஜேஸ்வரியின் காவல் தெய்வமாக விளங்கக்கூடிய சப்த கன்னிகளில் ஐந்தாவது கன்னியாக திகழக்கூடியவர்தான் வாராகி அம்மன் என்பதால் தான் வராகி அம்மனுக்கு பஞ்சமுகி என்ற பெயரும் இருக்கிறது. இப்படிப்பட்ட பஞ்சமுகி அம்மனை நாம் எந்த முறையில் வழிபட்டால் நாம் நினைத்தது நடக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக வாராஹி அம்மனை வழிபட வேண்டும் என்று நினைப்பவர்கள் தேய்பிறை பஞ்சமி திதியில் வழிபாடு செய்வார்கள். வாராகி அம்மனை நினைத்து காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு விரதம் இருந்து மாலை நேரத்தில் அருகில் இருக்கும் வாராகி அம்மன் கோவிலுக்கு சென்று அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு வீட்டில் இருக்கும் வாராகி அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்வார்கள். இது பொதுவான வழிபாட்டு முறையாகும்.

- Advertisement -

இதே நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடக்க வேண்டும் வாராகி அம்மனின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் அதற்காக நாம் கூடுதலாக மந்திரங்களை உச்சாடல் செய்ய வேண்டும். இப்படி நாம் பூஜையை செய்வதற்கு முன்பாக முதலில் விநாயகப் பெருமானை மனதார நினைத்து அவருக்கு ஒரு அருகம்புல்லை சாற்றி அவரை குருவாக ஏற்றுக்கொண்டு 11 ரூபாயை அவரின் பாதங்களில் வைத்துவிட்டு பூஜையை நல்ல விதமாக தொடங்கி முடிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

இந்த வழிபாட்டை தேய்பிறை பஞ்சமி திதி அன்றும் செய்யலாம். ஞாயிற்றுக்கிழமைகளிலும் செய்யலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் செய்வதாக இருந்தால் அன்றைய தினம் அசைவம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9 மணியிலிருந்து 10 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்து விட வேண்டும். வீட்டில் வாராஹி அம்மன் படமோ சிலையோ இருந்தால் அந்த படத்தை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் இட்டுக் கொள்ளலாம்.

- Advertisement -

அடுத்ததாக வாராஹி அம்மனுக்கு பிடித்த ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைக்க வேண்டும். பிறகு வாராகி அம்மனுக்கு தீபம் ஏற்ற வேண்டும். ஞாயிற்றுக்கிழமையில் இந்த பூஜையை செய்வதாக இருந்தால் ஒரு தேங்காயை எடுத்து உடைத்து அதில் இருக்கும் தண்ணீரை செடிகளில் ஊற்றிவிட்டு ஈரம் இல்லாமல் துடைத்துவிட்டு அதில் சுத்தமான நெய்யை ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இதே இந்த வழிபாட்டை தேய்பிறை பஞ்சமி திதிகளில் செய்வதாக இருந்தால் புதிதாக வாங்கிய அகல் விளக்குகளை எடுத்து வைத்து அதில் இலுப்பை எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

இப்படி தீபம் ஏற்றும் பொழுது தீபமானது வடக்கு பார்த்தவாரோ அல்லது கிழக்கு பார்த்தவாரோ இருக்க வேண்டும். வாராகி அம்மனுக்கு மிகவும் பிடித்தமான நிறமாக பச்சை நிறம் திகழ்கிறது. அதனால் நாம் வாராகி அம்மனை நினைத்து வழிபாடு செய்வதாக இருந்தால் வெறும் தரையில் அமராமல் பச்சை நிற துணியை விரித்து அதற்கு மேல் அமர்ந்து தான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். தீபம் வடக்கு பார்த்தவாறு இருந்தால் நாம் கிழக்கு பார்த்தவாறு அமர வேண்டும். தீபம் கிழக்கு பார்த்தவாறு இருந்தால் நாம் வடக்கு பார்த்தவாறு அமர வேண்டும்.

- Advertisement -

பிறகு வாராகி அம்மனின் மந்திரமான “ஓம் வராஹமுகி வித்மஹே ஆந்த்ராஸனி தீமஹி தன்னோ யமுனா ப்ரசோதயாத்” என்னும் மந்திரத்தை 1008 முறை உச்சரிக்க வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி நம்முடைய வேண்டுதலை கூறி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து ஐந்து முறை நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றுவாள் வாராகி அம்மன். ஞாயிற்றுக்கிழமை செய்ய ஆரம்பித்தால் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தான் செய்ய வேண்டும் பஞ்சமி திதியில் செய்ய ஆரம்பித்தால் தொடர்ந்து பஞ்சமி திதியில் தான் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர வீட்டில் போட வேண்டிய தூபம்

வராகி அம்மனின் இந்த மந்திரத்தை நாம் உச்சாடல் செய்து உருவேற்றி விட்டால் வாராகி அம்மன் நாம் என்ன நினைத்தோமோ அதை கண்டிப்பான முறையில் செய்து முடிப்பாள். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவாள்.

- Advertisement -